ilakkiyainfo

ilakkiyainfo

இலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக்குற்றச்சாட்டுகளை வெளியிட்டது சர்வதேச அமைப்பு

இலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக்குற்றச்சாட்டுகளை வெளியிட்டது சர்வதேச அமைப்பு
December 10
13:30 2019

இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவிற்கு எதிராக புதிய யுத்தக் குற்றச்சாட்டுகளைசுமத்தியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு இது குறித்த பல விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக  குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான வலுவான ஆரம்பகட்ட ஆதாரங்கள் உள்ளதை போன்று கமால் குணரட்ணவிற்கு எதிராகவும் ஆதாரங்கள்  உள்ளன என  சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

 இலங்கை யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களை  உயர் பதவிகளிற்கு நியமிப்பதன் மூலம் வேண்டுமென்றே தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை ஊக்குவிக்கின்றது எனவும் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளராக கமால் குணரட்ண நியமிக்கப்பட்டுள்ளமை,சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமை தராதரங்களை பின்பற்றுவதாக தெரிவிக்கும் நாடுகளிற்கு நீதிநெறி தொடர்பான இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

yasmin இலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக்குற்றச்சாட்டுகளை வெளியிட்டது சர்வதேச அமைப்பு இலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக்குற்றச்சாட்டுகளை வெளியிட்டது சர்வதேச அமைப்பு yasminசர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ள புதிய ஆவணம்  ஜோசப் முகாமிற்கு பொறுப்பாக காணப்பட்டவேளை கமால் குணரட்ணவின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளது.

குறிப்பிட்ட முகாமில் பாதிக்கப்பட்ட பத்து பேரின் வாக்குமூலங்களையும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான  திட்டம் தனது ஆவணத்தில் பதிவு செய்துள்ளது.

இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவின் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது ஆவணத்தில் பதிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் அழுத்தங்களிற்கு அடிபணிந்து யுத்தத்தை நிறுத்தவேண்டிய நிலையேற்படுவதை தவிர்ப்பதற்காக தாக்குதல்களை தீவிரப்படுத்துமாறு மே 2019 14 ம் திகதி அப்போதைய பாதுகாப்புசெயலாளரான கோத்தாபய ராஜபக்ச தனக்கும் சவேந்திரசில்வாவிற்கும் உத்தரவிட்டார் என  கமால் குணரட்ண தனது நூலில் குறிப்பிட்டுள்ளதை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது ஆவணத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News