ilakkiyainfo

ilakkiyainfo

இலங்கையின் முதலாவது செயற்கைக்கோள் ‘ராவணா 1″ விண்ணுக்கு ஏவப்பட்டது

இலங்கையின் முதலாவது செயற்கைக்கோள் ‘ராவணா 1″ விண்ணுக்கு ஏவப்பட்டது
April 18
10:38 2019

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையர்கள் இருவரின் முயற்சியில் நிர்மாணிக்கப்பட்ட ‘ராவணா 1″ செயற்கைக்கோள் இன்று (வியாழக்கிழமை) விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டதாக நாசா நிறுவனம் தெரிவிக்கின்றது.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2.16 மணி அளவில் இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.

தரிந்து தயாரத்ன மற்றும் துரனி ஷாமிகா ஆகிய இரண்டு இலங்கையர்களின் தயாரிக்கப்பட்ட ‘இராவணா 1″ செய்மதி கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் திகதி ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாறு கையளிக்கப்பட்ட ‘ராணவா 1″ செய்மதியுடனான ரொக்கெட், அமெரிக்காவின் வர்ஜினியாவிலிருந்து இன்று அதிகாலை, சர்வதேச விண்வெளி ஆய்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

_106497764_birds3satelliteprojec06  இலங்கையின் முதலாவது செயற்கைக்கோள் 'ராவணா 1" விண்ணுக்கு ஏவப்பட்டது 106497764 birds3satelliteprojec06

சிக்னுஸ் (Cygnus) என்றழைக்கப்படும் பொட்களுடனான ராக்கெட் மூலம் இந்த ‘ராவணா 1″ செயற்கைக்கோள் செயற்கைக்கோள்நாசாவினால் சர்வதேச விண்வெளி ஆய்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பார்ட்ஸ் 3 செயற்கைக்கோள் திட்டம் (BIRDS 3 Satellite Project) என்ற பெயரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இலங்கை, ஜப்பான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து மூன்று சிறியரக செய்மதிகளை இன்று விண்ணுக்கு ஏவியிருந்தன.

சிறிய ரகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளுக்கு , மிகவும் குறைந்தளவிலான நிதியே செலவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1000 செ.மீ அளவை கொண்டமைந்துள்ள இந்த செயற்கைக்கோள், 1.05 கிலோகிராம் எடையை கொண்டமைந்துள்ளது.

_106497766_birds3satelliteproject01  இலங்கையின் முதலாவது செயற்கைக்கோள் 'ராவணா 1" விண்ணுக்கு ஏவப்பட்டது 106497766 birds3satelliteproject01

சர்வதேச விண்வெளி மத்திய நிலையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் ‘ராவணா 1″ செயற்கைக்கோளை நிலைநிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்;த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் ஒன்றரை வருடம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஐந்து வருடங்கள் அதன் பயன்பாட்டை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ராவணா 1 செயற்கைக்கோளின் பயன்பாடு

இலங்கை மற்றும் அதனை அண்மித்துள்ள வலய நாடுகள் புகைப்படங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பல பயன்பாட்டு திட்டங்களை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆர்த்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சனத் பனாவென்னவின் யோசனைக்கு அமைய இந்த செயற்கைக்கோள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கு ‘ராவணா 1″ என பெயர் சூட்டிப்பட்டிருந்தது.

ராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News