ilakkiyainfo

ilakkiyainfo

இலங்கையின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் – உடன்படிக்கை கையெழுத்து

இலங்கையின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் – உடன்படிக்கை கையெழுத்து
April 10
21:01 2019

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அமைச்சுக்கும், கனேடிய கமர்ஷியல் கோப்பரேஷன் நிறுவனத்திற்கும் இடையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று (செவ்வாய்கிழமை) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மாதுறுஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகாவாட்ஸ் வலுவுடைய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையங்களினால் 2030ஆம் ஆண்டாகும் போது, இலங்கையின் மின்சார தேவையில் 50 சதவீதத்தை பூர்த்தி செய்துக் கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக மகாவலி வலயத்திற்குட்பட்ட மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தை மையப்படுத்தி இந்த முதலாவது சூரிய மின்சக்தி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

சூரிய படல்கள் மற்றும் மின்சாரத்தை சேமிக்கக்கூடிய மின்கலங்களைக் கொண்டு இந்த சூரிய மின்சக்தி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திட்டத்திற்காக, குறித்த நீர்த்தேக்கத்தில் 500 ஏக்கர் அளவிலான இடம் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுவதுடன், அந்த பரப்பளவானது நீர்த்தேக்கத்தின் 4 சதவீதம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சூரிய மின்சக்தி நிலைய திட்டத்தை துரிதகதியில் நிறைவு செய்ய எதிர்பார்க்கும் அதேவேளை, முதற்கட்டமாக 10 மெகாவோர்ட் மின்சாரத்தை இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் 100 மெகாவாட் மின்சாரத்தை பெற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

_106398840_agreement-2 இலங்கையின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் - உடன்படிக்கை கையெழுத்து இலங்கையின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் - உடன்படிக்கை கையெழுத்து 106398840 agreement 2மின்சார பிரச்சனைக்கு தீர்வளிக்கும் வகையில், குறைந்த செலவில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி முறைகளை கையாளும் முகமாகவே மகாவலி பொருளாதார வலயங்களுக்குட்பட்ட நீர்த்தேக்கங்களில் இந்த மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வறட்சி மற்றும் மின்சார பிரச்சனை

இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலையினால், நாட்டில் தொடர்ந்தும் மின்சார விநியோகத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

எனினும், நாட்டில் சூழற்சி முறையில் அமுல்படுத்தப்பட்டிருந்த மின்வெட்டு, இன்று முதல் வழமைக்கு திரும்பும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை பெற்று, நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் நிலவும் வறட்சியுடனான காலநிலையினால் சுமார் ஒரு லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதாக நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.

அத்துடன், நாட்டில் சூரியன் உச்சத்தில் காணப்படுகின்றமையினால் தொடர்ந்தும் கடும் வெயிலுடனான காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக வடக்கின் சில பகுதிகளில் 38 பாகை செல்சியஸ் அளவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெப்பநிலை பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News