ilakkiyainfo

ilakkiyainfo

இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி: இந்தியா 141 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி: இந்தியா 141 ஓட்டங்களால் வெற்றி!
December 13
20:21 2017

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையில் 2-ஆவது ஒருநாள் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு முதல் சர்வதேசப் போட்டியாகும்.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசர பெரேரா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் விளாசியது.

முதல் விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன் ஜோடி 115 ரன்கள் குவித்தது. பின்னர் 68 ரன்களுக்கு தவன் வெளியேறினார். 2-ஆவது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் ஐயர், ரோஹித் ஷர்மா ஜோடி 213 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 88 ரன்களுக்கு வெளியேறினார்.

இந்நிலையில், மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் ஷ்ரமா, இரட்டைச் சதம் விளாசினார்.

மொத்தம் 153 பந்துகளைச் சந்தித்து 12 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 208 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

ஒருநாள் போட்டிகளில் ரோஹித்துக்கு 16-ஆவது சதமாகும். 3-ஆவது இரட்டைச் சதமாகும். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் 4-ஆம் இடம்பிடித்தார்.

393 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் அனுபவ வீரர் மேத்யூஸ் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார்.

132 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்களின் உதவியுடன் 111 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் தனியாகப் போராடினார். இதர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வீழ்ந்தனர்.

இதனால் இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார், பாண்டியா, சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

முதல் போட்டியில் ஏற்பட்ட படுதோல்விக்கு 141 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி பதிலடி அளித்தது. மேலும் 1-1 என்ற கணக்கில் தொடரிலும் சமநிலைப் பெற்றது.

இந்தத் தொடரின் 3-ஆவது மற்றும் கடைசிப் போட்டி விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News