ilakkiyainfo

ilakkiyainfo

இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 393!! :`வரலாறு படைக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு!’ – இலங்கை கேப்டனின் ஆரூடம் பலிக்குமா!

இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு  393!! :`வரலாறு படைக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு!’ – இலங்கை கேப்டனின் ஆரூடம் பலிக்குமா!
December 13
11:49 2017

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையில் நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா, 392 ரன்கள் குவித்துள்ளது.

இதனால் இலங்கை அணி வெற்றி பெறுவது மிகக் கடினமாகியுள்ளது. ஆனால், போட்டிக்கு முன்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இலங்கை அணியின் கேப்டன் திசரா பெரேரா, `இந்திய அணிக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவில் முதல் முறையாகத் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைக்கும் வாய்ப்பு எங்களுக்கு உள்ளது’ என்று கூறினார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, தலா 3 போட்டிகள்கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.

டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்கியது இந்திய அணி.

392 ரன்கள் அடித்துள்ள இந்திய அணியின் ஸ்கோரை எட்டிப்பிடிக்க இலங்கை சிரமப்படும் என்று கூறப்படும் நிலையில் போட்டிக்கு முன்னர் பேசிய பெரேரா, `இதுவரை இலங்கை அணி  இந்தியாவில் தொடரை வென்றது இல்லை.

எனவே, வரலாறு படைக்க எங்களுக்கு அருமையான வாய்ப்புக்கிட்டியுள்ளது. முதல் போட்டியில் நடந்த அனைத்தையும் மறந்துவிட்டு, முதலில் இருந்த நாங்கள் ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.

இந்தப் போட்டியில்தான் எங்கள் கவனம் இருக்க வேண்டும். மொகாலியின் கிரிக்கெட் பிட்ச் பேட்டிங்குக்கு ஏதுவாக இருக்கும். எங்களுக்கு இந்தப் போட்டியில் எந்த அழுத்தமும் இல்லை.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை வென்றுவிடுவோம் என்று அனைவருக்கும் தெரியும்’ என்று மிக நம்பிக்கையாகப் பேட்டியளித்திருந்தார்.

ஆனால், ரோஹித் ஷர்மாவின் அதகள பெர்ஃபாமன்ஸை பெரேரா எதிர்பார்த்திருக்க மாட்டார்.

 

‘இலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா!: வெற்றி இலக்கு 393!!

criquetq  இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு  393!! :`வரலாறு படைக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு!' - இலங்கை கேப்டனின் ஆரூடம் பலிக்குமா! criquetq

இந்திய அணி 2 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 393 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி மொகாலியில் இடம்பெற்று வருகின்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 392 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது  208 ஓட்டங்களயும் தவான் 68 ஓட்டங்களையும் ஐயர்  88 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதில் , இந்திய அணி சார்பில் அதிரடியாக விளையாடிய இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா தனது மூன்றாவது ஒருநாள் இரட்டைச் சதத்தை பதிவு செய்தார்.

அவர் 153 பந்துகளை எதிர்க்கொண்டு 13 நான்கு ஓட்டங்கள் மற்றும் 12 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் 208 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டார்.

இதன் மூலம் , ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டைச் சதங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா பெற்றுள்ள இரண்டாவது இரட்டைச் சதம் இதுவென்பது சிறப்பம்சமாகும்.

பந்து வீச்சிற்கு இலங்கை அணியின் 7 பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

இதில் , இலங்கை அணித்தலைவர் திசர பெரேரா 8 ஓவரக்ள் பந்து வீசி 80 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

சசித் பதிரண ஒரு விக்கட்டை கைப்பற்றினார்.

10 ஓவர்கள் பந்து வீசிய நுவன் பிரதீப் இந்த போட்டியில் 106 ஓட்டங்களை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப் போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றவேண்டுமாக இருந்தால் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 393 ஓட்டங்களைப் பெறவேணடும்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News