ilakkiyainfo

ilakkiyainfo

இலங்கை குண்டுவெடிப்பு: தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் பலியானது உறுதி

இலங்கை குண்டுவெடிப்பு: தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் பலியானது உறுதி
May 21
16:10 2019

கொழும்பு – ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய நபர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமத் சஹ்ரான் ஹாஷிம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் டிஎன்ஏயுடன், ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்ட தலை பகுதியுடன் ஒப்பிட்டு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகளிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி மூன்று கிறிஸ்தவ தேவாலங்கள் மற்றும் 3 நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இதில் கொழும்பிலுள்ள ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் இருவர் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டனர்.

அவ்வாறு தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹ்ரான் ஹாஷிம் என சந்தேகம் வெளியிடப்பட்டது.

எனினும், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமத் சஹ்ரான் ஹாஷிம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளில் தெரியவந்ததாக பல தடவைகள் செய்திகள் வெளியாகியிருந்தன.

_107047605_a20ace7e-7b88-4ae6-bdbc-0708ebdc8606 இலங்கை குண்டுவெடிப்பு: தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் பலியானது உறுதி இலங்கை குண்டுவெடிப்பு: தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் பலியானது உறுதி 107047605 a20ace7e 7b88 4ae6 bdbc 0708ebdc8606இந்த நிலையில், அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் ஒரு பெண்ணும் சிறுமியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்தது.

அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவர்கள், பின்னர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புவிற்கு அழைத்து வரப்பட்டு, அவர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டன.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமையவே இந்த டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது.

இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளுடன், ஷங்கிரில்லா நட்சத்திர விடுதியில் கண்டெடுக்கப்பட்ட தலை பகுதியுடன் ஒப்பிட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் மேலதிக பகுப்பாய்வாளர் டி.எச்.எல்.டபிள்யூ. ஜயமான பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இந்த டி.என்.ஏ பரிசோதனையின் ஊடாக, மொஹமத் சஹ்ரான் ஹாஷிம், தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமது டிஎன்ஏ பரிசோதனை அறிக்கையை விரைவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மொஹமத் சஹரான் ஹாஷிமின் மனைவி மற்றும் மகள் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பில் தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News