ilakkiyainfo

ilakkiyainfo

இலங்கை தமிழ் மக்கள் மீது கரிசனையில்லை:வடக்கிலுள்ள வளங்களை சூரையாடுகிறது இந்தியா!!- அநுர குமார திஸாநாயக்க (பேட்டி இணைப்பு)

இலங்கை தமிழ் மக்கள் மீது கரிசனையில்லை:வடக்கிலுள்ள வளங்களை சூரையாடுகிறது இந்தியா!!- அநுர குமார திஸாநாயக்க (பேட்டி இணைப்பு)
August 28
19:33 2014

இலங்கை தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை முன்­வைத்து இலங்கை அர­சாங்­கத்­துக்கு அழுத்­தத்தை கொடுத்து வடக்­கி­லுள்ள வளங்கள், வர்த்­தக ஒப்­பந்­தங்கள், வள­மான காணிகள் ஆகி­ய­வற்றை இந்­தியா பெற்றுக் கொள்­வ­தி­லேயே அதிக கவனம் செலுத்­து­கின்­றது. ஓமந்­தை­யி­லி­ருந்து காங்­கே­சன்­துறை வரை ரயில் பாதை­களை அமைக்கும் பொறுப்பை இந்­திய கம்­ப­னி­யொ­ன்று பெற்­றுள்­ளது.

yarldevi3 இலங்கை தமிழ் மக்கள் மீது கரிசனையில்லை:வடக்கிலுள்ள வளங்களை சூரையாடுகிறது இந்தியா!!- அநுர குமார திஸாநாயக்க (பேட்டி இணைப்பு) yarldevi3
மத­வாச்­சி­யி­லி­ருந்து தலை­மன்னார் வரை ரயில் பாதை­களை நிர்­மா­ணிக்க ஒப்­பந்­தத்தை பொறுப்­பேற்­றதும் இந்­தி­யா­வாகும். இலங்கை ரயில்வே திணைக்­களம் திட்­ட­மிட்­டதை விட இந்தத் திட்­டங்­க­ளுக்­காக நான்கு மடங்கு செல­வா­கின்­றது.    துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கு புனர்­நிர்­மாணம், காங்­கேசன் துறை துறை­முக புனர்­நிர்­மாணம் பலாலி விமான நிலைய புனர்­நிர்­மாணம் ஆகிய பணி­களை இந்­தி­யாவே மேற்­கொண்­டது.

புல்­மோட்­டை­யி­லுள்ள பெறு­ம­தி­மிக்க இல்­மனைட் நிதியம் மீதும் இந்­தியா ஒரு கண் வைத்­துள்­ளது. நிலா­வெ­ளி­யி­லுள்ள மனதை கவரும் பல ஏக்கர் கணக்­கான   கடற்­கரை பிர­தே­சங்­களை இந்­தியா பெற்றுக் கொண்­டுள்­ளது.

சம்­பூரில் பாரம்­ப­ரி­ய­மாக வாழ்ந்து கொண்­டி­ருந்த ஆயிரக் கணக்­கான தமிழ் மக்­களை விரட்­டி­ய­டித்து திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள ஆறு முகாம்களில்தள்ளிவிட்டு அந்தக் காணி­களும் இந்­தி­யா­வுக்கு தாரை வார்க்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழர்­களின் உரி­மை­க­ளுக்­காக முன்­னிற்­ப­தாக கூறிக்­கொள்ளும் இந்­தியா வடக்­கி­லுள்ள சகல வளங்­க­ளையும் திட்­டங்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்­ளது. அதேபோல் தான் கடற்­ப­ரப்­பிலும் இந்­தி­யாவின் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன.

எமது கடற்­ப­ரப்பு எமக்கு சொந்­த­மா­னது. இந்தப் பிர­தே­சங்­களில் தமிழ் மக்­களே மீன்­பிடி நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கின்­றனர். எமது தமிழ் மக்­க­ளுக்கு மீன் பிடிக்க இட­ம­ளிக்­காமல்  அதிலும் இந்­தியா தலை­யிடப் பார்க்­கின்­றது என்று ஜே.வி.பி.தலைவர் அநுர குமார திஸா­நா­யக்க  வழங்­கிய விசேட செவ்­வியின் போது குற்­றஞ்­சாட்­டினார்.

Anurakumara-Dissanayake2-300x225 இலங்கை தமிழ் மக்கள் மீது கரிசனையில்லை:வடக்கிலுள்ள வளங்களை சூரையாடுகிறது இந்தியா!!- அநுர குமார திஸாநாயக்க (பேட்டி இணைப்பு) Anurakumara Dissanayake2அவ­ரு­ட­னான செவ்­வியின் முழு­ விபரம் பின்­வ­ரு­மாறு,

கேள்வி:- நியா­ய­மான சமூ­கத்­துக்­கான அமைப்பின் தலைவர் மாது­ளு­வாவே சோபித்த தேரர் இந்­நாட்­களில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான பொது வேட்­பாளர் குறித்து பல தரப்­புக்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி­ வ­ரு­கிறார்.

இருந்தும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசியத் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே பொது வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­ப­டலாம் என்ற செய்­தி­களும் இப்­போது பரவி வரு­கி­றது. மங்­கள சம­ர­வீர அளித்­துள்ள பேட்­டி­யொன்­றிலும் பொது வேட்­பா­ள­ராக கள­மி­றக்க ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே தகு­தி­யா­னவர் என்று தெரிவித்­துள்ளார்.

இந்த நிலையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்டால் ஜே.வி.பி. ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பாளர் ஒரு­வரை நிறுத்தும் என மேல் மாகாண சபை உறுப்­பினர் கே.டி.லால் காந்த தெரி­வித்­துள்ளார். ஜே.வி.பி.இத்­தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளதா?

பதில்:- முத­லா­வ­தாக ராஜபக்ஷ ஆட்­சியை விரட்­டி­ய­டிக்க வேண்டும். எமது நாட்டின் பொரு­ளா­தாரம் என்­று­மில்­லா­த­வாறு சீர­ழிக்­கப்­பட்­டுள்­ளது. இனங்களுக்­கி­டை­யி­லான ஒற்­றுமை சீர்­கு­லைக்­கப்­பட்­டுள்­ளது. மென்­மேலும் சீர்­கு­லைக்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின் ­றன.

ஊழல் மோசடி நாட்டில் தலை­வி­ரித்­தா­டு­கின்­றது. ஜன­நா­ய­கமும் மனித உரி­மை­களும் இல்­லா­ம­லாக்­கப்­பட்­டுள்­ளன. ஒரு குடும்­பமும் அதை சுற்­றி­யுள்ள கும்­பலும் நாட்டின் சொத்­துக்­களை சூறை­யாடிக் கொண்­டி­ருக்­கின்­றன.

தொடர்ந்தும் இதற்கு இட­ம­ளிக்க முடி­யாது. எந்­த­வொரு   தலை­வரும்   நாட்டை 17 வரு­டங்கள் ஆட்சி புரிய தேவை­யில்லை. ஜனா­தி­பதி ராஜபக் ஷ 12 வரு­டங்கள் நாட்டை ஆட்­சி ­பு­ரி­கிறார். 12 வரு­டங்­க­ளுக்கு பின்னர் அவர் பத­வி­யி­லி­ருந்து செல்ல சந்­தர்ப்பம் இருக்­கி­றது. எனவே இவரைத் தோற்­க­டிக்க வேண்டும்.

இதே­போன்­ற­தொரு நிர்­வா­கத்­தையும் ஆட்­சி­யையும் மீண்டும் உரு­வாக்க தேவை­யில்லை. எனவே, சமூக மாற்­றத்தை ஏற்­ப­டுத்த கூடிய பரந்த முன்­ன­ணி­யொன்றை உரு­வாக்க வேண்­டிய தேவை இருக்­கின்­றது.

தற்­போது சோபித்த தேரர் உட்­பட்ட குழு­வினர் இது தொடர்­பாக சில நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளனர். இருந்தும், அது முழு­மை­யாக இந்த நாட்­டுக்குத் தேவை­யான    சமூக பொரு­ளா­தார ரீதி­யான மாற்­றங்­க­ளுக்கு அவ­ரது ஆலோ­ச­னைகள் போது­மா­ன­தாக இருக்­கு­மென நாம் கரு­த­வில்லை.

வழமை போல் ஐக்­கிய தேசியக் கட்சி இந்த அர­சாங்­கத்­துக்கும் ராஜபக் ஷ ஆட்­சிக்கும் எதி­ராக கிளம்­பி­யுள்ள மக்­களின் எதிர்ப்பை கொள்­ளை­யிட்டு ஆட்­சியை பிடிக்க முயற்­சிக்­கின்­றது.

ஜே.வி.பி. பொது திட்­ட­மொன்றின் மூலம் ராஜபக் ஷ நிர்­வா­கத்தை தோற்­க­டிக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கத் தீர்­மா­னித்­துள்ளோம். இன்­ற­ளவில் மஹிந்த ராஜபக் ஷ, ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு தயா­ராகி வரு­கின்­றனர்.

இந்த இரு அணிக்கும் மேல­தி­க­மாக மாற்று அணி­யொன்றின் மூலம் ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றங்க முடி­யுமா? முடி­யாதா? என்று நாங்கள் இப்­போது ஆழ­மாக ஆராய்ந்து வரு­கின்றோம்.

கேள்வி:- தொலைக்­காட்சி பேட்­டியில் லால் காந்த இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மூன்­றா­வது அணி­யாக ஜே.வி.பி.கள­மி­றங்­கினால் தற்­போ­துள்ள ஜனா­தி­பதி 50 க்கும் சிறிது அதி­க­மான சத­வீத வாக்­கு­களை பெற்று பல­மி­ழந்த ஜனா­தி­ப­தி­யாக நிய­மிக்­கப்­படக் கூடிய வாய்ப்பு ஏற்­படும். எனவே, அடுத்த பொதுத் தேர்தலில் இந்த அர­சாங்­கத்தை தோற்­க­டிக்க இது நல்ல வாய்ப்­பாக அமையும் என்று தெரி­வித்­துள்ளார். இது ஜே.வி.பி.யின் நிலைப்­பாடா?

பதில்: நாங்கள் வெற்றி பெறும் எதிர்­பார்ப்­பு­ட­னேயே களத்தில் இறங்­கு­கின்றோம். இந்த இரண்டு கட்­சி­களும் 66 ஆண்­டுகள் இந்த நாட்டை ஆட்சி புரிந்துள்ளன. இந்த இரண்டு கட்­சி­க­ளையும் சார்ந்த பண்­டா­ர­நா­யக குடும்பம், சேனா­நா­யக குடும்பம், ஜெய­வர்­தன விக்­கி­ர­ம­சிங்க குடும்பம், ராஜபக் ஷ குடும்பம் 66 ஆண்­டு­களில் 63 ஆண்­டுகள் ஆட்சி புரிந்­துள்­ளன.

இந்த ஆட்­சி­களின் கீழ் எமது நாட்டில் யுத்தம் ஏற்­படும் நிலை உரு­வா­னது. சுற்­றாடல் சீர­ழிக்­கப்­பட்­டது. இந்த குடும்­பங்­களின் மூலம் ஏகா­தி­பத்­திய ஆட்சி உரு­வா­னது.

எனவே, இந்த ஆட்சி முறையை மாற்­றி­ய­மைக்க வேண்டும். இந்த 66 வருட சாபத்தை இந்த நாட்­டி­லி­ருந்து விரட்­டி­ய­டிக்க வேண்­டு­மென்­பதே எமது நோக்­க­மாகும். மக்கள் எம் மீது நம்­பிக்கை வைத்து இந்த நாட்டில் பாரிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்த ஒத்­து­ழைப்­பார்கள் என்று நம்­பு­கின்றோம்.

கேள்வி:- ஜே.வி.பி. தனித்து போட்­டி­யி­டு­மானால் ஜனா­தி­பதி தேர்தல் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டு­பவர் யார்?

பதில்-: அதைக் கட்­சியும் பொது வேட்­பா­ள­ருக்­காக ஆத­ர­வ­ளிக்கும் குழுக்கள், நபர்கள், அர­சியல் ஆர்­வ­லர்கள் ஆகி­யோ­ருடன் கலந்­தா­லோ­சித்தே வேட்­பாளர் தெரிவு செய்­யப்­ப­டுவார்.

கேள்வி: காணாமற் போனோரை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்­க­வென மூன்று வெளி­நாட்டு நிபு­ணர்கள் முதலில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.

பின்னர் மேலும் இரு வெளி­நாட்டு நிபு­ணர்­களும் நிய­மிக்­கப்­பட்­டார்கள். இது குறித்து அர­சி­யலில் அங்கம் வகிக்கும் கட்­சி­களும் கடு­மை­யான எதிர்ப்பை தெரி­வித்­துள்­ளன. இந்த நிலையில் ஜே.வி.பி.யின் நிலைப்­பாடு என்ன?

பதில்: இந்த அர­சாங்­கத்தின் ஜனா­தி­பதி ஆணைக்­குழு எனத் தெரி­விக்­கப்­ப­டு­வது என்­ன­வென்றால் ஒரு சந்­தர்ப்­பத்தில் நாட்டை அல்­லோ­ல­கல்­லோ­லப்­ப­டுத்தும் பிரச்­சி­னை­யொன்று ஏற்­பட்டால் அந்தப் பிரச்­சி­னையை மூடி மறைப்­ப­தற்­காக ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­ப டும்.

mahindha1 இலங்கை தமிழ் மக்கள் மீது கரிசனையில்லை:வடக்கிலுள்ள வளங்களை சூரையாடுகிறது இந்தியா!!- அநுர குமார திஸாநாயக்க (பேட்டி இணைப்பு) mahindha12013ஆம் ஆண்டு வரை ஜனா­தி­பதி 17 ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்­களை நிய­மித்­துள்ளார். இந்த ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கு 27 கோடி ரூபா அளவில் செல­வி­டப்­பட்­டுள்­ளது. இருந்தும் இந்த ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள் குறைந்­த­பட்சம் பாரா­ளு­மன்­றத்­துக்குக் கூட சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை.

இந்த நாட்டின் ஒரு பிரச்­சி­னைக்கு கார­ண­மாக அமைந்த ஒரு சம்­ப­வத்தின் அறிக்கை பாராளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­ப­டா­தது ஏன்? ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்கள் கேலிக்­கு­ரி­ய­வை­யா­கவே காணப்­ப­டு­கின்­றன. ரத்­து­பஸ்­வெல சம்­பவம் தொடர்­பான ஆணைக்­குழு, சிலாபம் மீன­வர்கள் கொலை தொடர்­பான ஆணைக்­குழு, கட்­டு­நா­யக்க கொலை தொடர்­பான ஆணைக்­குழு ஆகி­ய ­வற்றின் அறிக்­கைகள் வெளி­யிடப்­ப­ட­வில்லை.

பிரச்­சி­னை­யொன்று ஏற்­பட்டால் அதை மூடி மறைக்கும் வகையில் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்­களை நிய­மிக்கும் நோயொன்று ஜனா­தி­ப­தியை பீடித்­துள்­ளது. காணாமற் போனோரை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவும் இது போன்­றது தான்.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் யுத்த குற்ற விசா­ர­ணைக்­கான குழு, இலங்கை வர தயா­ரான நிலையில் அதை திசை திருப்­பு­வ­தற்­கா­கவே காணாமற் போனோரை கண்­ட­றியும் ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நாட்டின் ஜன­நா­யகம், மனித உரிமை மீறல் காணாமற் போனோர் தொடர்­பான உண்­மை­யான பிரச்­சினை, இறந்தோர் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்கு ராஜபக் ஷ ஆட்­சியின் கீழ் நிவா­ரணம் கிடைக்கப் போவ­தில்லை.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது, பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது, அர­சுக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் இடையில் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றன.

அதன் பின்னர் ஜனா­தி­பதி உப அமைச்­ச­ரவை குழு­வொன்­றையும் இது தொடர்­பாக நிய­மித்தார். இதேபோல் ஆணைக்­கு­ழுக்கள், உப குழுக்கள், அமைச்­ச­ரவை குழுக்கள் என்­பன கணக்­கின்றி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன. உண்­மை­யான பிரச்­சி­னையை திசை திருப்பி வேறு விட­யங்­களில் கவ­னத்தை திருப்­பவே இது போன்ற குழுக்­களை ராஜபக் ஷ அரசு நிய­மித்து வரு­கி­றது.

கேள்வி: ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­களை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர் ப்­பிக்­கப்­பட வேண்­டு­மென அர­சி­ய­ல­மைப் பில் கூறப்பட்டுள்ளதா?

பதில்:- பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்க வேண்­டு­மென குறிப்­பி­டப்­ப­ட­வு­மில்லை. வேண்­டா­மென குறிப்­பி­டப்­ப­ட­வு­மில்லை. அர­சி­ய­ல­மைப்பில் சமர்ப்­பிக்க வேண்­டு­மென குறிப்­பி­டப்­பட்­டி­ருந்தால் நான் பாரா­ளு­மன்­றத்தில் அப்­ப­டி­யொரு கேள்­வியை எழுப்­பி­யி­ருக்க தேவை­யில்­லையே.

பாரா­ளு­மன்­றத்­துக்கு இந்த நாட்டில் நடை­பெறும் அனைத்து விட­யங்­க­ளையும் தெரிந்து கொள்ளும் உரிமை இருக்­கி­றது. ஜனா­தி­ப­திக்கு இணை­ப்புச் செய­லா­ளர்கள் எத்­தனை பேர் இருக்க வேண்­டு­மென்று அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. இருந்தும் அதைக் கேட்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்­துக்கு உரிமை இருக்­கி­றது.

ஜனா­தி­ப­தியின் வெளி­நாட்டு பயணச் செல­வுகள் எவ்­வ­ளவு? நிறு­வ­னங்­களின் தலை­வர்­க­ளது விப­ரங்கள் என்ன? ஜனா­தி­ப­தியின் ஆலோ­ச­கர்கள் எத்­தனை பேர்? போன்­றவை குறித்தும் பதி­ல­ளிக்க வேண்­டு­மென்று அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

இவை அர­சிய­ ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்தால் அவை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளதா? என்ற கேள்­வியை நாம் எழுப்­புவோம். பாரா­ளு­மன்றம் சிறப்­பு­ரிமை பெற்­றது. கௌர­வ­மிக்­கது என்று ராஜபக் ஷ ஆட்­சி­யினர் கூறிக்­கொண்­டி­ருந்­தாலும் இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவ­தில்லை. தங்­க­ளது ஊழல் மோச ­டிகள் ஆகி­ய­வற்றை மறைத்துக் கொள்­வ­தற்­கா­கவே தக­வல்­களை பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­விக்க மறுப்பு தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­ப­தியின் வெளி­நாட்டு பய­ணங்­க­ளுக்­கான செலவு, அவர் எவ்­வ­ளவு பணத்தை எடுத்து சென்றார்? எவ்­வ­ளவு செல­வி­டப்­பட்­டுள்­ளது? என்ற எனது கேள்­விக்கும் பதி­ல­ளிக்­கப்­ப­ட­வில்லை. இதற்கு பதிலளித்தால் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென கூறப்படுகின்றது. ஜனா­தி­பதி வெளி­நாட்டுப் பய­ணத்தை முடித்துக் கொண்டு இலங்­கைக்கு வந்­தது தொலைக்­காட்­சி­க­ளிலும் காண்­பிக்­கப்­பட்­டது. அப்­ப­டி­யி­ருக்கும் போது பாது­காப்­புக்கு எப்­படி அச்­சு­றுத்தல் ஏற்­படும்?

கேள்வி:- அமைச்­சர்கள் எம்.பி.க்களின் புதல்­வர்கள் மற்றும் புதல்­விகள் வெளி­நாட்டு சேவையில் பெருந்­தொ­கையில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளார்கள் என்றும் அவர்­க­ளது பெயர் விப­ரங்­களை குறிப்­பிட்டு நீங்கள் ஒரு கேள்­வியை பாரா­ளு­மன்­றத்தில் எழுப்பியிருந்­தீர்கள். இக் கேள்­விக்கு பதி­ல­ளிக்­கப்­பட்­டதா?

பதில்: இதற்கு பதி­ல­ளிக்­கப்­ப­ட­வில்லை. அரசின் இந்த நட­வ­டிக்­கையால் வெளி­நா­டு­க­ளி­லுள்ள எமது தூத­ர­கங்கள் செய­லி­ழந்து காணப்­ப­டு­கின்­றன. இது குறித்து நான் பாரா­ளு­மன்­றத்தில் விளக்­கிய போது அமைச்­சர்கள், எம்.பிக்கள் இது குறித்து எது­வித விளக்­கமும் இல்­லாமல் அதிர்ச்­சி­யுடன் பார்த்துக் கொண்­டி­ருந்­தனர்.

நான் இதை பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்த பின்னர் அது தொடர்­பான மேலும் பல தக­வல்கள் எனக்கு வந்து குவிந்­தன. இதில் துர­திர்ஷ்டம் என்­ன­வென்றால் எதிர்க்­கட்­சியை சேர்ந்த பெண் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரது புதல்­வியும் வெளி­நாட்டு தூத­ர­க­மொன்­றுக்கு பதவி பெற்று சென்­றுள்ளார்.

வெளி­நாட்டு சேவை என்­பது எமது நாட்டின் சுயா­தி­பத்­தி­யத்தை பாது­காக்கும் வகையில் இருக்க வேண்டும். வெளி­நாட்டு சேவைக்கு ஆட்­களை நிய­மி­க்கும் போது அதற்­கான தகுதி, பயிற்சி என்­பன குறித்து முக்­கிய கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால், அமைச்­சர்­களின் பிள்­ளைகள், எம்.பி.க்களின் பிள்­ளைகள் வெளி­நாட்டு தூத­ர­கங்­க­ளுக்கு பதவி வழங்கி அனுப்­பப்­பட்­டுள்­ளார்கள். இத னால் வெளி­நாட்டு சேவை சீர­ழிந்­துள்­ள­துடன் வெளி­நா­டு­களில் எமது நாட்டின் கௌரவம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் எவ்­வ­ளவு தான் எடுத்துக் கூறி­னாலும் கொஞ்­சமும் கவ­னத்­தி­லெ­டுப்­ப­தாக தெரி­ய­வில்லை.

நாங்கள் ஏற்­றுக்­கொண்­டாலும் இல்லா விட்­டா லும் இது எங்கள் நாட்டில் பாரா­ளு­மன்றம், நீதி­த்துறை மற்றும் நிறை­வேற்று அதி­காரம் குறித்து ராஜபக் ஷ ஆட்சி கொஞ்­சமும் கவ­லைப்­ப­டு­வதி ல்லை. இவை அனைத்தும் ஒரு­வரின் கைக­ளி­லேயே சிக்­கி­யுள்­ளது. இது தான் எமது நாட்டின் சாபக்­கேடு.

இந்த அர­சாங்கம் எமது நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் அழிவைத் தேடி தந்து கொண்­டி­ருக்­கி­றது என்­பதை நாங்கள் இந்த நாட்டு மக்­க­ளுக்கு எடுத்துக் கூறிக்­கொண்­டி­ருக்­கிறோம். எனவே, இந்த ஆட்­சியை முடி­வுக்கு கொண்­டு­வர மக்கள் எம்­முடன் இணைந்து குர­லெ­ழுப்ப ஆயத்­த­மாக வேண்டும்.

கேள்வி: பலஸ்­தீ­னத்­துக்கு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை வழங்கப் போவ­தாக அறி­வித்­துள்ளார். பாரா­ளு­மன்­றத்தின் அனு­மதி இல்­லாமல் இவ்­வாறு வெளி­நா­டொன்­றுக்கு நிதி­யு­தவி அளிக்க முடி­யுமா?

பதில்:- இந்த அர­சாங்கம் பொது மக்­களின் பணத்தை வீண­டிக்­கி­றது. இதற்கு முன்னர் மாலை­தீவில் வீதி­யொன்றை நிர்­மா­ணித்து தரு­வ­தாக அறி­வித்­தது. இந்த வீதிக்­காக கருங்­கற்கள் இலங்­கை­யி­லி­ருந்து கப்பல் மூலம் கொண்டு செல்­லப்­பட்­டன.

இந்த நாட்டு மக்­க­ளுக்கு குடிக்க தண்ணீர் இல்­லா­தி­ருக்கும் போது உகண்­டா­வுக்கு குடிநீர் திட்ட­மொன்றை வழங்­கி­யது. இலங்கை இளைஞர் யுவ­தி­க­ளுக்கு போது­மான தொழிற் பயிற்சி நிலை­யங்கள் இல்­லாத நிலையில் பலஸ்­தீ­னத்­திற்கு தொழிற் பயிற்சி நிலை­ய­மொன்று. இந்த நிலை­யி­லேயே பலஸ்­தீ­னத்­துக்கு ஒரு மில்­லியன் டொலர்கள் வழங்கப் போவ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ராஜபக் ஷ ஆட்­சியின் உண்­மை­யான நண்பன் யார்? என்ற கேள்வி இப்­போது எழுந்­துள்­ளது. ஜனா­தி­பதி பலஸ்­தீ­னத்தில் இறங்கி மறுநாள் இஸ்­ரே­லுக்குச் செல்­கின்றார். இது என்ன வெளி­நாட்டு கொள்கை?  ஐக்­கிய நாடுகள் சபையின் முன்னாள் இலங்கை பிர­தி­நிதி தயான் ஜய­தி­லக இஸ்­ரே­லுக்கு எதி­ராக கருத்து தெரி­வித்த போது இலங்­கை­யி­லுள்ள முக்­கி­யஸ்­த­ரொ­ருவர் இஸ்­ரே­லுக்கு எதி­ராக கருத்து தெரி­விக்க நீர் யார்? என கேள்வி எழுப்­பினார்.

அப்­போது அதற்கு பதி­ல­ளித்த அவர் நீங்களும் நானும் உங்கள் சகோ­த­ரரால் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்­ட­வர்கள் என்று கூறி­னாராம். இஸ்­ரே­லுக்கு பின்னால் அமெ­ரிக்கா இருக்­கின்­றது.

அப்­படி என்றால் இந்த அர­சாங்கம் நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வ­ளித்துக் கொண்­டி­ருக்­கி­றது. பல அமைப்­புக்கள் எம் மத்­தியில் இயங்கி வரு­கின்­றன. இந்த நிலையில் ஒரு மில்­லியன் டொலர்­களை கப்­ப­மாக வழங்கி பழி­யிலிருந்து தப்­பித்­துக்­கொள்ள முடியுமா?

பலஸ்­தீ­னத்தில் நிதிப் பற்­றாக்­கு­றையை விட பலஸ்­தீனம் குறித்த எமது அர­சியல் நிலைப்­பாடு என்ன? நாம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வது அமெ­ரிக்­காவின் யுத்த முன்­ன­ணி­யாக திகழும் இஸ்­ரே­லையா? அப்­ப­டி­யில்­லா­விட்டால் சுதந்­தி­ரத்­துக்­காக போராடும் பலஸ்­தீ­னத்­தையா? என்­பது குறித்து நாம் தீர்­மா­னிக்க வேண்டும்.

இந்­நாட்­டி­லுள்ள முஸ்லிம் மக்­களை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக பலஸ்­தீ­னத்­துக்கு கப்பம் வழங்­கி­யுள்­ள­தென்றே நினைக்கத் தோன்­று­கி­றது.

கேள்வி:- இலங்கை வந்­துள்ள இந்திய பா.ஜ.க.வின் முக்­கிய தலை­வ­ரான சுப்பி­ர­ம­ணி­ய சு­வாமி இந்­திய மீன­வர்­க­ளுக்கு மூன்று வரு­டங்­க­ளுக்கு மாத்­திரம் இலங்கை கடற்­ப­ரப்பில் மீன்­பி­டித்துக் கொள்ள அனு­ம­தி­ய­ளிக்­கும்­படி கேட்­டுக்­கொண்­டுள்ளார். இது குறித்த ஜே.வி.பி.யின் நிலைப்­பாடு என்ன?

பதில்:- இந்­தியா, இலங்கை தமிழ் மக்­களின் உரி­மை­களை பாது­காப்­ப­தாக கூறிக்­கொண்டு இருக்­கி­றது. சமஷ்டி வழங்­கும்­ப­டியும் அதி­கா­ரங்­களை பர­வ­லாக்­கும்­ப­டியும் கூறு­கி­றது.

தமிழர்களின் உரிமைகளுக்காக முன்­னிற்­ப­தாக கூறிக்­கொள்ளும் இந்­தியா வடக்­கிலுள்ள சகல வளங்­க­ளையும் திட்­டங்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்­ளது. அதேபோல் தான் கடற்­ப­ரப்­பிலும் இந்­தி­யாவின் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன. எமது கடற்­ப­ரப்பு எமக்கு சொந்­த­மா­னது.

இந்தப் பிர­தே­சங்­களில் தமிழ் மக்­களே மீன்­பிடி நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கின்­றனர். எமது தமிழ் மக்­க­ளுக்கு மீன் பிடிக்க இட­ம­ளிக்­காமல் அதிலும் இந்­தியா தலை­யிடப் பார்க்­கின்­றது. தமிழ் நாட்டில் ஜெய­ல­லிதா இலங்கை தமிழ் மக்­க­ளுக்­காக குரல் கொடுப்­ப­தாக காட்டிக் கொள்­கின்றார். வடக்கு தமிழ் மக்­க­ளுக்கு உரித்­தான மீன் வளத்­தையும் இந்­தியா கொள்­ளை­யிட முயற்­சிக்­கின்­றது.

இந்த நிலையில் இந்­தி­யாவா இலங்கை தமிழ் மக்­களின் உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுக்கப் போகி­றது? தமிழ் மக்களின் பிரச்­சி­னையை முன்­வைத்து இலங்கை அர­சாங்­கத்­துக்கு அழுத்­தத்தை கொடுத்து அச்­சு­றுத்தி மீன்­வளம், இல்­மணைட் நிதி யம், நிர்­மாண ஒப்­பந்­தங்கள் ஆகி­யவை குறித்தே இந்­தியா கவனம் செலுத்தி வரு கிறது. எனவே, இந்தியா என்ற குள்ள நரியை நம்ப வேண்டாமென இலங்கை தமிழ் மக்களை நாம் கேட்டுக் கொள்கின் றோம்.

(நேர்காணல் எஸ்.கே.

எப்.பஸ்னா

படப்பிடிப்பு எம்.எஸ்.சலீம்)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

விறுவிறுப்பு தொடர்கள்

    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

0 comment Read Full Article
    கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

0 comment Read Full Article
    “நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய தலைவர்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

“நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய தலைவர்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

1 comment Read Full Article

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News