கனடாவில் பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

கூடைப்பந்து போட்டியில் டொரன்டோ ரேப்டர்ஸ் அணி வெற்றி பெற்றமையைச் சிறப்பிக்கும் முகமாகக் குறித்த பகுதியில் 10 இலட்சம் பேர்  கூடியிருந்தனர்.

இந்நிலையிலேயே அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

அத்தோடு துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிலர்  அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.