ilakkiyainfo

ilakkiyainfo

இலவச உணவுக்காக சிறை செல்ல முடிவெடுத்தவர் – கச்சிதமாக நிறைவேறிய திட்டம்

இலவச உணவுக்காக சிறை செல்ல முடிவெடுத்தவர் – கச்சிதமாக நிறைவேறிய திட்டம்
November 05
20:50 2019

சிறையில் இலவசமாக உணவு மற்றும் தங்குமிடம் கிடைக்கும் என்பதால், சிறைக்கு செல்லும் நோக்கில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழின் செய்தி.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமாருக்கு இரண்டு முறை திருமணம் ஆகியும், இரண்டுமே தோல்வியில் முடிந்தன. மன அழுத்தத்தால் வேலையில் இருந்தும் விலகி விட்டதால் அவருக்கு உணவு மற்றும் தங்குமிடத்துக்கே சிரமப்பட வேண்டிய சூழல் உருவானது.

இதனால் சிறைக்கு செல்ல திட்டமிட்டார் சந்தோஷ். ஞாயிறன்று சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த அவர், தம்மை ‘இப்ராஹிம்’ என்று அடையாளப்படுத்திக்கொண்டு, ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்தார்.

சிறிது நேரம் கழித்து அழைத்து ஈரோடு பேருந்து நிலையத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

_109528123_1458819a-f912-4e64-9187-b8340c9a9d1f இலவச உணவுக்காக சிறை செல்ல முடிவெடுத்தவர் - கச்சிதமாக நிறைவேறிய திட்டம் இலவச உணவுக்காக சிறை செல்ல முடிவெடுத்தவர் - கச்சிதமாக நிறைவேறிய திட்டம் 109528123 1458819a f912 4e64 9187 b8340c9a9d1fஅழைப்பு வந்த எண்ணை வைத்து காவல்துறை விசாரணை நடத்தியதில், அது சிவகுமார் என்பவரது பெயரில் இருந்தது தெரியவந்தது.

சிவகுமாரை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த எண்ணை சிவகுமாரின் மைத்துனர் லிங்கராஜ் பயன்படுத்துவது தெரியவந்தது.

லிங்கராஜையும் ஒரு வழியாகக் கண்டுபிடித்தால், அவரது செல்பேசி தொலைந்துபோனது தெரியவந்தது.

எண் பயன்படுத்தும் செல்பேசி சிக்னலை வைத்து நடந்த, தீவிர தேடுதலுக்குப் பிறகு, திங்கள் மதியம் இரண்டு மணியளவில் ஈரோடு ரயில் நிலையத்தில் படுத்திருந்த சந்தோஷ்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இவை அனைத்தும் சந்தோஷ்குமார் திட்டமிட்டு செய்ததாகவும், அவரது திட்டம் நிறைவேறி இப்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி தெரிவிக்கிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News