ilakkiyainfo

ilakkiyainfo

இளம் யுவதியின் உயிரை பறித்த டாக்டருக்கு மரணதண்டனை (crime strory)

இளம் யுவதியின் உயிரை பறித்த டாக்டருக்கு மரணதண்டனை (crime strory)
September 11
19:56 2014

வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட  இளம்­பெண்­ணொ­ரு­வரை கற்­ப­ழித்­தது மட்­டு­மல்­லாமல், அந்த இர­க­சியம் வெளி­யு­ல­குக்கு தெரிந்­து­வி­டக்­கூ­டா­தெ­னக்­க­ருதி அவளை மாடி­யி­லி­ருந்து தள்­ளி­விட்டு இளம் வைத்­தி­ய­ரொ­ருவர் கொலை செய்­தமை தொடர்­பி­லான செய்தி ஏழு வரு­டங்­க­ளுக்கு முன்னர் பெரும் அதிர்­வ­லை­களை கிளப்­பி­யி­ருந்­தது.

மொன­ரா­கலை, தம்­ப­கல்லை பிர­தே­சத்தைச் சேர்ந்த சமிலா திஸா­நா­யக்க (22 வயது) என்­ப­வரே மேற்­படி வைத்­தி­யரால் கற்­ப­ழிக்­கப்­பட்டு மாடி­யி­லி­ருந்து தள்­ளி­வி­டப்­பட்டுக் கொலை செய்­யப்­பட்­ட­வ­ராவார்.

இவ் யுவதி சுதந்­திர வர்த்­த­க­ வ­ல­யத்­தி­லுள்ள ஆடைத் தொழிற்­சாலை ஒன்றில் பணி­யாற்­றி­ய­வ­ராவார். 2007 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திக­தியே இவர் கற்­ப­ழிக்­கப்­பட்டு  வைத்­தி­ய­சா­லையின் மேல்  மாடி­யி­லி­ருந்து தள்ளி விடப்­பட்டுக் கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தமை நினை­வி­ருக்­கலாம்.

இது குறித்த வழக்கு ஏழு வரு­டங்­க­ளாக நீதி­மன்­றத்தில் நடை­பெற்­று­வந்த நிலையில் கடந்த புதன்­கி­ழமை குற்­ற­வா­ளி­யாக இனங்­கா­ணப்­பட்ட முன்னாள் மருத்­து­வ­ரான சுதர்­ஷன பால­கே­வுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அத்­துடன் குறித்த யுவ­தியை கற்­ப­ழித்­த­தாக சாட்­டப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்ட நிலையில் 15 வருட சிறைத்­தண்­ட­னையும் நீர்­கொ­ழும்பு மேல்­நீ­தி­மன்ற நீதிவான் எச்.எச்.ஏ.கபூ­ரினால் விதிக்­கப்­பட்டு தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது இவ்­வ­ழக்கில் மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்ட வைத்­தியர் சுதர்­ஷன பாலகே குறித்த யுவ­தியை மயக்­க­மு­றச்­செய்து கார்ட்போர்ட் பெட்­டி­யொன்றில் வைத்து இழுத்­துச்­சென்­றதை நேரில் கண்ட அவ்­வைத்­தி­ய­சா­லையில் பணி­பு­ரியும் பணி­யாளர் ஒருவர் வழக்கின் போது சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.

இச்­சம்­பவம் தொடர்பில் இந்­திக்க சுதர்­ஷன பால­கேவின் (42 வயது) அறையை பரி­சோ­தித்த பொலிஸ் அதி­காரி அவ்­வ­றையின் இட­து­பக்­க­மாக தலை மயிர் விழுந்து கிடந்­த­தாகக் கூறி­யுள்ளார்.

அத்­தோடு அவ்­வ­றையை மேலும்  சோத­னை­ செய்தபோது இரண்டு மாத்­தி­ரைகள் மட்டும் மீத­மி­ருந்த வயாக்ரா வீரிய மாத்­திரை காணப்­பட்­ட­தா­கவும் இரத்­தக்­கறை தென்­பட்­ட­தா­கவும் கூறி­யுள்ளார்.

அதன் பிர­காரம் அவ்­வ­றையின் ஜன்னல் வழி­யாக குறித்த யுவ­தியை தள்­ளி­விட்­ட­தாக சந்­தே­கிப்­ப­தா­கவும் அந்த பொலிஸ் அதி­காரி தெரி­வித்­தி­ருந்தார். இருந்­தாலும் இந்த அனைத்துக் குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் முற்­றாக நிரா­க­ரித்த குறித்த வைத்­தி­யரால், கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி நீதி­மன்­றத்தின் முன்­னி­லையில் வழங்­கப்­பட்ட சாட்சியம் இவ்­வ­ழக்கை மென்­மேலும் விவா­தத்­துக்­குள்­ளாக்­கி­யது. அதன் கார­ண­மாக இவ்­வ­ழக்கு குறித்து பெரும்­பா­லா­னோரின் கவ­னமும் திரும்­பி­யி­ருந்­தது.

இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய வைத்­தியர் அவர் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­களை முற்­றாக மறு­த­லித்து நீதி­மன்­றத்தின் முன்­னி­லையில், நான் எந்த கொலை­யையும் செய்­ய­வில்லை. நிர­ப­ரா­தி­யான என் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­க­ளினால் என்­னு­டைய முழு வாழ்க்­கையும் நாச­மா­கி­விட்­டது.

நான் மர­தன்­க­ட­வ­ளையைச் சேர்ந்­தவன். எனது அம்மா ஓய்­வு­பெற்ற பாட­சாலை ஆசி­ரியை. எனது தந்தை ஒரு சார­தி­யாவார். ஐந்­தா­மாண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்து கண்டி தர்­ம­ராஜ வித்­தி­யா­ல­யத்தில் அனு­மதி பெற்றேன்.

களனி பல்­க­லைக்­க­ழ­கத்­துடன் இணைந்த இரா­கமை மருத்­துவ கற்­கைப்­பீ­டத்தில் அனு­ம­தி­பெற்று எம்.பி.பி.எஸ். மருத்­துவ பட்­டத்தைப் பெற்றேன். 2006.10.23 ஆந் திகதி நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக சேவையில் இணைந்தேன். அவ்­வைத்­தி­ய­சா­லையின் ஆறா­வது மாடியில் மனை­வி­யுடன் வசித்­து­வந்தேன்.

எனது மனைவி இரா­கமை வைத்­தி­ய­சா­லையில் தாதி­யாக பணி­பு­ரிந்­து­வந்தாள். நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து தினந்­தோறும் இரா­க­மைக்கு வேலைக்குச் சென்றாள். அத்­துடன் என்­னு­டைய அறைக்கு பக்­கத்து அறை தொலை­பேசித் தொடர்­பாளர் ஒரு­வ­ரு­டை­ய­தாகும்.

chamila  இளம் யுவதியின் உயிரை பறித்த டாக்டருக்கு மரணதண்டனை (crime strory) chamila

Chamila Dissanayake

அன்­றைய தினம் 8.20 மணி­ய­ளவில் டொக்டர் இந்­திக்க அங்கே வந்தார். 9.30 மணி­ய­ளவில் அவர் அங்­கி­ருந்து ஆறா­வது மாடி­யி­லுள்ள அறையின் மல­ச­ல­கூ­டத்­திற்குச் சென்றார். எனது மனைவி அன்று அறையில் இருந்தார் என்­னிடம் கோப்பி வேண்­டுமா? என்று கேட்டார்.

நான் வேண்டாம் என்று சொன்னேன். அதன் பிறகு 10.30 மணி­ய­ளவில் கிளி­னிக்­கிற்குச் சென்று டொக்டர் தம்­மிக்­க­விற்கு உதவி செய்தேன். அச்­சந்­தர்ப்­பத்தில் சமிளா எனும் யுவ­தியை சிகிச்­சைக்­காக அழைத்­து­ வந்­தார்கள். அதன் பிறகு நான் அந்த பெண்னை சோதித்தேன்.

அவள் ஹைப்­பத்­தை­ரொயிட் நோயினால் அவ­திப்­ப­டு­வது புரிந்­தது. அவர் இதற்­கான சிகிச்­சை­களை மேற்­கொண்டு பிறகு தொட­ரா­மல்­விட்­டவர் என்­பதும் எனக்குத் தெரிந்­தது. அதன் கார­ண­மாக மீண்டும் அந்த வருத்­தத்­தினால் அவர் அவ­திப்­படத் தொடங்­கி­யுள்ளாள் என்­பதும் எனக்குப் புரிந்­தது.

அதனைப் பதி­வுப்­புத்­த­கத்தில் பதி­வு­செய்­து­கொண்டேன். விசேட வைத்­திய நிபு­ண­ரிடம் அழைத்­துச்­செல்ல முன்னர் சற்று நேரம் பொறுத்­தி­ருக்­கு­மாறு அவ­ளிடம் கூறினேன். சற்று நேரம் கழித்துப் பார்த்தபோது அப்­பெண்ணை அங்கே காண­வில்லை. அதன் பிறகு கீழ் மாடிப்­ப­கு­திக்குச் சென்ற.

போது அங்கும் அவளைக் காண­வில்லை. நான் சிற்­றுண்­டிச்­சா­லைக்குச் சென்று கோப்பி குடித்­து­விட்டு மீண்டும் கிளி­னிக்­கிற்கு வந்தேன். அப்­போது அந்த யுவ­தியை விசேட வைத்­திய நிபு­ண­ரிடம் அனுப்­பி­ய­தாகக் கூறி­னார்கள்.

அதன் பிறகு அறைக்குத் திரும்­பினேன். அறை­யி­ன­ருகில் பொலிஸார் நின்­றனர். அப்­போது பெண்­ணொருவர் மாடி­யி­லி­ருந்து கீழே விழ்ந்து உயி­ரி­ழந்­துள்ளார் என அவர்கள் என்­னிடம் கூறி­னார்கள். இத­னை­ய­டுத்து டொக்டர் திசே­ரா­விற்கு தொலை­பேசி அழைப்­பை­யேற்­ப­டுத்தி இவ்­வி­ட­யந்­தொ­டர்பில் அவ­ரிடம் கூறினேன்.

பொலி­ஸாரின் விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைக்­கும்­படி அவர் என்­னிடம் கூறினார். பொலிஸார் அறையை சோதனை செய்­தனர். அதன் பிறகு என்னை பொலிஸ்­நி­லை­யத்­துக்கு வரச்­சொன்­னார்கள்.

அத­னை­ய­டுத்து மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்­த­தாக கூறப்­படும் பெண்ணின் மரணம் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் என்னை கைது­செய்­தனர். எனக்கு அவ்­வே­ளையில் எதையும்  செய்­து­கொள்ள  முடி­ய­வில்லை.

வைத்­தி­ய­சா­லை­யி­லுள்­ள­வர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருக்கும் போதே என்னை பொலிஸ் ஜீப்­பிற்குள் ஏற்றி அழைத்­துச்­சென்­றார்கள்.

அதன்­போது என்­ன­ருகில் எனது மனைவி வந்து” நீங்கள் எந்த தவ­றையும் செய்­ய­வில்லை தானே அவ்­வா­றி­ருக்­கையில் நீங்கள் ஏன் பயப்­ப­டு­கி­றீர்கள்” என்றார்.

என்னை பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்­துச்­சென்று என் இரு கைக­ளையும் கட்டித் தொங்­க­விட்டு அடித்­தார்கள். “உண்­மையை சொல் இல்­லா­விட்டால் கடற்­க­ரைக்கு அழைத்­துச்­சென்று சுட்டுக் கொலை செய்வோம்” என்று அச்­சு­றுத்­தி­ன­ரர்கள்.

அதி­காலை 4.00 மணி­வ­ரையும் என்னை விசா­ரித்­தார்கள். அதி­காலை 5.00 மணி­ய­ளவில் சிறைக்குள் அடைத்­தார்கள் என்று அவர் வாக்­கு­மூலம் அளித்­தி­ருந்தார்.

இது எவ்­வா­றி­ருப்­பினும் குறித்த வைத்­தி­யரால் சமிலா கார்ட்போர்ட் பெட்­டிக் குள் வைத்து இழுத்துச் செல்­லப்­ப­டு­வதை நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சாலை சுத்­தி­க­ரிப்பு பிரிவில் பணி­யாற்றும் பியட்ரிஸ் கண்­ணுற்­றுள்ளார். அவர் இது குறித்து கூறு­கையில், நான் நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் ஏழு வரு­ட­கா­ல­மாக வேலை ­செய்தேன்.

அங்கே வேலை­செய்­து­கொண்­டி­ருந்த போது தான் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது. நவம்பர் 12ஆம் திகதி ஒப்­ப­ரேஷன் திேயட்­டரில் எனக்கு சுத்­தி­க­ரிப்பு வேலை இருந்­தது. காலை 7.00 மணி­யி­லி­ருந்து மாலை ஐந்து மணி­வரை அங்கு வேலை செய்­ய­வேண்­டி­யி­ருந்­தது. வைத்­தி­ய­சா­லையின் ஏழா­வது மாடி­யி­லேயே இந்த ஒப்­ப­ரேஷன் தியேட்டர் இருந்­தது.

அங்கு வேலை இல்­லாத நேரங்­களில் எனக்கு அவ்­வி­டத்தில் தங்­கு­வ­தற்கு வாய்ப்­பாக சிறிய இடம் ஒன்று இருந்­தது. அங்கே கதி­ரை­யொன்றை போட்டு அதில் உட்­ங­கார்ந்­தி­ருப்பேன்.

அங்கே இருந்து பார்க்­கையில் கீழே நடை­பெறும் அனைத்து விட­யங்­க­ளையும் தெளி­வாகக் காணலாம். ஆறா­வது மாடியில் வைத்­தி­யர்­களும் தாதி­யர்­களும் தங்கும் அறைகள் இருந்­தன.

சம்­ப­வ­தி­னமும் வழ­மை­போல வேலை­களை முடித்­து­விட்டு குறித்த இடத்தில் இளைப்­பா­று­வ­தற்­காக கதி­ரை­யொன்றை போட்டு அமர்ந்­து­கொண்டேன். அப்­போது எனக்கு கீழ் மாடியில் எதையோ இழுத்­துக்­கொண்டு செல்லும் சத்தம் கேட்­டது என்­னுடன் வேலை­செய்யும் துப்­பு­ர­வுத்­தொ­ழி­லா­ளர்கள் அப்­ப­கு­தி­யி­லுள்ள வைத்­தி­யர்­களின் அறை­களை சுத்­தம்­செய்­கின்­றார்கள் என்றே நினைத்தேன்.

எதற்கும் அடியில் பார்த்­து­விடுவோம் என்று எண்ணி கீழே எட்­டிப்­பார்­த்தேன்.

அப்­போது தான் அந்த டொக்டர் கார்ப் போர்ட் பெட்­டிக்குள் எதையோ வைத்து இழுத்­துக்­கொண்டு செல்­வதை பார்த்தேன். அந்த கார்ப்போட் பெட்­டியில் பெண்­ணொ­ருவர் அலங்­கோ­ல­மாக கிடந்தார். அந்த பெண்ணின் கண்கள் மூடி­ய ­வண்ணம் காணப்­பட்­டன.

இதற்கு முன்னர் அவ்­வைத்­தி­யரை நான் பார்த்­தி­ருக்­கிறேன். நான் சுத்­தி­க­ரிப்­புத்­தொ­ழிலை மேற்­கொள்ளும் ஒப்­ப­ரேஷன் தியேட்­ட­ருக்கும் அவர் அடிக்­கடி வந்­து­போவார்.

அவ­ருடைய ஊர், பெயர் தெரி­யா­விட்­டாலும் அவர் இங்கு அடிக்­கடி வந்­து­போ­வதால் அவரை நான் நன்கு அறிவேன். அவர் எங்­க­ளுடன் பேசக்­கூ­ட­மாட்டார். ஏனைய வைத்­தி­யர்கள் எங்­க­ளுடன் நன்­றாக பேசு­வார்கள். ஆனால் இவர் அவ்­வ­ளவு எளிதில் யாரு­டனும் பேசிப்­ப­ழ­கக்­கூ­டி­ய­வ­ரல்ல. அவர் திரு­மணம் முடித்­தவர் என்று கேள்­விப்­பட்­டி­ருந்­தாலும் கூட அவ­ரு­டைய மனைவி யார் என்­பது கூட எமக்­குத் ­தெ­ரி­யாது.

அப்­போது அந்த வைத்­தியர் இழுத்­துக்­கொண்டு செல்­வது அவ­ரது மனை­வி­யையா என்ற சந்­தே­கமும் என்னுள் உதித்­தது. அப்­போது நான் அவ­ரிடம் உங்­க­ளுக்கு உதவி வேண்­டுமா? என்று கேட்டேன். அதன்­போது தான் அவர் என்னை பார்த்தார். எனக்கு உதவி எதுவும் தேவை­யில்லை என்று அவர் என்­னிடம் கூறினார்.

நான் 12.45 மணி­ய­ளவில் அங்­கி­ருந்து கீழ்­நோக்கி வந்தேன். சற்­று­நே­ரத்­திற்­கெல்லாம் அங்கே சனம் கூடி­யது. ஆறா­வது மாடி­யி­லி­ருந்து பெண் ஒருவர் கீழே விழுந்­து­விட்டார் என்று அவர்கள் பேசிக்­கொண்­டார்கள்.

அந்­தப்­பெண்ணின் புகைப்­ப­டத்தை பார்க்க நேரிட்­ட­போது தான் குறித்த வைத்­தியர் அன்று கார்ட்போர்ட் பெட்­டியில் வைத்து இழுத்­துச்­சென்ற பெண் இவர் தான் என்­பதை நான் அறிந்­து­கொண்டேன் என்று தெரி­வித்­தி­ருந்தார்.

சந்­தேக நப­ரான வைத்­தி­ய­ருக்கு எதி­ராக பாலியல் வல்­லு­றவு புரிந்­தமை மற்றும் கொலை குற்­றச்­சாட்டு ஆகிய இரண்டு குற்­றச்­சாட்­டுக்கள் சட்­டமா அதி­ப­ரினால் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

கொலை குற்­றச்­சாட்­டுக்­காக மரண தண்­ட­னையும், பாலியல் வல்­லு­றவு குற்­றச்­சாட்­டுக்­காக 15 வருட சிறை தண்­ட­னையும் 10 ஆயிரம் ரூபா அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது. அப­ராதத் தொகையை செலுத்தத் தவ­றினால் மேலும் ஆறு­மாத கால சிறை தண்­டனை வழங்­கவும் நீதி­வானால் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

ஆய்­வு­பூர்­வ­மான சாட்­சிகள், ஆதா­ரங் கள் மூல­மாக பிர­தி­வா­திக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் நீரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்ட நீதவான், ஜனா­தி­ப­தி­யினால் தீர்­மா­னிக்­கப்­படும் தினம் ஒன்றில் மரண தண்­ட­னையை நிறை­வேற்­று­மாறு உத்­த­ர­விட்டார்.

தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு முன்னர் பிர­தி­வா­திக்கு கருத்து தெரி­விக்க அனு­மதி அளிக்­கப்­பட்­டது.

‘நீதி­மன்­றத்தால் சமிலா திசா­நா­யக்­கா­வுக்கு நீதி கிடைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதைப் போன்று, எனக்கும் நீதி கிடைக்க வேண்டும். இத்­தனைக் காலமும் எனக்கு அவ­ம­ரி­யா­தை­களும் அவ­மா­ன­முமே கிடைத்­தன.

அதனை நான் பொறுத்துக் கொண்டேன். பொலிஸார் எனக்கு எதி­ராக மட்­டுமே குற்­றச் சாட்டு தெரி­வித்­துள்­ளனர். எனது கைவிரல் அடை­யாளம் தொடர்­பாக பொலிஸார் குற்­றப்­பத்­தி­ரத்தில் குறிப்­பிட்­டுள்ள போதும் அது ஏன் நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்படவில்லை? குற்­ற­வா­ளிகள் இன்னும் நீர்­கொழும்பு வைத்தி­ய­சா­லையில் உள்­ளனர்.

உண்­மை­யான குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். என எதி­ரியான வைத்­தியர் இந்­திக சுதர்­சன பாலகே தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு முன்னர் நீதி­வானிடம் குறிப்­பிட்டார்.

தீர்ப்பு நாள் அன்று

கடந்த ஏழு வரு­டங்­க­ளாக பலரும் எதிர்­பார்­த்தி­ருந்த அந்த தீர்ப்பு நாளான கடந்த புதன்­கி­ழமை (3) நீர்­கொ­ழும்பு நீதி­மன்ற சூழல் பெரும்­ப­ர­ப­ரப்­புடன் காணப்­பட்­டது. ஊட­க­வி­ய­லா­ளர்கள், மனித உரிமை ஆர்­வ­லர்கள், கட்­டு­நா­யக்க சுதந்­திர வர்த்­தக வலய ஊழி­யர்கள், கொலை செய்­யப்­பட்ட சமிலா திசா­நா­யக்­காவின் பெற்றோர், உற­வி­னர்கள், நண்­பர்கள், சுதந்­திர வர்த்­தக வலய மற்றும் பொது சேவா சங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள், பெண்கள் அமைப்பு உறுப்­பி­னர்கள் என பலரும் அங்கு வருகைத் தந்­தி­ருந்­தனர். அன்று காலை பிர­தி­வாதி நீதி­மன்­றத்­திற்கு பலத்த பாது­காப்பின் மத்­தியில் அழைத்து வரப்­பட்டார்.

கொலை செய்­யப்­பட்ட யுவ­தியின் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பிர­சந்த லால் டி அல்விஸ், சட்­டத்­த­ரணி துசிர மெலேவ்­வேதந்திரி ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­னார்கள்.

இந்­நி­லையில், இந்த படு­கொலைச் சம்­பவம் தொடர்­பா­கவும், வழக்கு விசா­ர ணை தொடர்­பா­கவும் சற்று பின்­னோக்கிப் பார்ப்போம்.

hospital-1  இளம் யுவதியின் உயிரை பறித்த டாக்டருக்கு மரணதண்டனை (crime strory) hospital 1சமிளா திசா­நா­யக்க கொலை சம்­பவம்

12-.11.-2007 அன்று பகல் வேளையில் நடை­பெற்­றது. இச்­சம்­பவம் தொடர்­பாக வைத்­தி­ய­சா­லையின் வைத்­தி­ய­ரான இந்­திக சுதர்­ச­ன­பா­லகே ஜய­திஸ்ஸ சந்­தே­கத்தின் பேரில் நீர்­கொ­ழும்பு பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.

தன்­னிடம் சிகிச்­சைக்­காக வந்த யுவ­தியை குறித்த வைத்­தியர், வைத்­தி­ய­சா­லையின் ஆறா­வது மாடியில் உள்ள தனது அறைக்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய பின்னர், வைத்­தி­ய­சா­லையின் ஆறா­வது மாடி­யி­லி­ருந்து கீழே தள்ளி கொலை செய்­தி­ருக்­கலாம் என்ற சந்­தே­கத்தின் பேரி­லேயே வைத்­தியர் கைது செய்­யப்­பட்டார்.

சம்­ப­வத்தின் பின்னர் அடுத்த நாள் (13-.11-.2007 அன்று) வைத்­தி­ய­சா­லைக்கு விஜயம் செய்த அப்­போ­தைய நீர்­கொ­ழும்பு மேல­திக நீதிவான் மஹிந்த பிர­பாத்­சிங்க சம்­பவ இடங்­களை பார்­வை­யிட்­ட­துடன் வைத்­தி­ய­சா­லையில் ஆறா­வது மாடியில் உள்ள வைத்­தி­யரின் அறை உட்­பட பல இடங்­க­ளையும் பார்­வை­யிட்டு விசா­ரணை நடத்­தினார்.

வைத்­தி­யரின் தங்­கி­யி­ருந்த அறைக்கு முன்னாள் உள்ள அறையில் இருந்து யுவ­தியின் கைப்பை, உள்­ளா­டைகள் மற்றும் பாதணி உட்­பட பல பொருட்கள் மீட்­கப்­பட்­டன. அத்­துடன் மேலும் சில தடயப் பொருட்­களும் மீட்­கப்­பட்­டன

பின்னர் நீர்­கொ­ழும்பு மஜிஸ்ரேட் நீதி­மன்றில் சந்­தேக நபர் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்டார்.

இதே­வேளை, உரிய விசா­ரணை நடத்தி குற்­ற­வா­ளிக்கு தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறு வலி­யு­றுத்தி 15.-11-.2007 அன்று நீர்­கொ­ழும்பில் ஆர்ப்­பாட்டம் இடம்பெற்­றது. கொலை செய்­யப்­பட்ட யுவதி பணி­யாற்­றிய தொழிற்­சாலை ஊழி­யர்கள் மற்றும் சக தொழிற்­சாலை ஊழி­யர்கள் இந்த ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். பின்னர் பேர­ணி­யா­கவும் சென்­றனர்;.

16-.11.-2007 அன்று யுவ­தியின் பூத­வுடல் கட்­டானை பிர­தே­சத்தில் மக்கள் அஞ்­ச­லிக்­காக வைக்­கப்­பட்­டது. பின்னர் யுவ­தியின் சொந்த ஊரான மொன­ரா­க­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டு 17.11.-2007 அன்று இறுதிச் சடங்கு நடத்­தப்­பட்­டது.

சந்­தேக நபர் சிறைச்­சா­லையில் தற்­கொலை முயற்சி

இதே­வேளை, சந்­தேக நப­ரான வைத்­தியர் 16.11-.2007 அன்று சிறைச்­சா­லையில் வைத்து தனது காற்­சட்டை நாடாவை பயன்­ப­டுத்தி தற்­கொலை செய்ய முயன்றார். பின்னர் நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட அவர், மேல­திக சிகிச்­சைக்­காக கொழும்பு வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்து செல்­லப்­பட்டார்.

இதற்­கி­டையில் நீர்­கொ­ழும்பு நகரின் முக்­கிய இடங்­களில் யுவ­தியின் மர­ணத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­டன.

19.-11.-2007 அன்று யுவ­தியின் பிரேத பரி­சோ­தனை அறிக்கை நீர்­கொ­ழும்பு  மஜிஸ்ரேட் நீதி­மன்­றிற்கு பொலி­ஸாரால் சமர்­ப்பிக்­கப்­பட்­டது. ராகமை வைத்தி­ய­சா­லையில் பிரேத பரி­சோ­தனை நடத்­தப்­பட்டு அதன் அறிக்கை சீல் வைக்­கப்­பட்டு நீதி­மன்றில் சமர்­ப்பிக்­கப்­பட்­டது. அறிக்­கையை நீதி­மன்ற பாதுகாப்பில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார்.

27-.11.-2007 அன்று நீர்­கொ­ழும்பு மஜிஸ்ரேட் நீதி­மன்றில் நடை­பெற்ற அடை­யாள அணி­வ­குப்பின் போது சந்­தேக நப­ரான வைத்­தியர் வைத்­தி­ய­சா­லையின் சிற்­றூ­ழி­யரால் அடை­யாளம் காட்­டப்­பட்டார்.

சந்­தேக நப­ருக்கு உரிய தண்­டனை வழங்­கு­மாறு கோரி நீர்­கொ­ழும்பு மஜிஸ்ரேட் நீதி­மன்­றிற்கு முன்­பாக அமை­தி­யான முறையில் ஆர்ப்­பாட்­டமும் அன்­றைய தினம் இடம் பெற்­றது.

இதே­வேளை, இந்த வழக்கின் பிர­தான சாட்­சி­யான வைத்­தி­ய­சாலை சிற்­றூ­ழி­ய­ரான திரு­மதி எல்.எம். பியற்றிஸ், நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்­ததை அடுத்து வைத்­தி­ய­சா­லையின் அப்­போ­தி­ருந்த சில அதி­கா­ரி­க­ளாலும், வைத்­தி­யர்­க­ளி­னாலும், மேலும் சில­ரி­னாலும் பல்­வேறு வகை­யிலும் பாதிப்­பு­க்கு ஆளானார்.

இதன்­கா­ர­ண­மாக அவர் தனது தொழிலை இழக்க வேண்டி வந்­தது. அவ­ரது சாட்­சியம் இந்த வழக்கில் பிர­தா­ன­மாக இருந்­த­தா­கவும், அவ­ருக்கு நன்றி கூறுவதாகவும், சமிலாவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பிரசந்த லால் டி அல்விஸ் தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

kolai  இளம் யுவதியின் உயிரை பறித்த டாக்டருக்கு மரணதண்டனை (crime strory) kolaiயுவதியின் மரணத்திற்கான காரணம்

தொடர்ந்து இடம் பெற்ற நீதி­மன்ற விசா­ர­ணையின் போது யுவ­தியின் மர­ணத்­திற்­கான காரணம் நீதி­ப­தியால் தெரி­விக்­கப்­பட்­டது.

மேலி­ருந்து கீழே விழுந்­ததால் இடுப்பு எலும்பும் முள்­ளந்­தண்டு எலும்பும் முறிந்­த­தாலும் மண்­டை­யோடு சிதைந்­த­தாலும் உள்ளே இரத்தம் கசிந்­த­தாலும் ஏற்­பட்ட மரணம் என நீதி­பதி குறிப்­பிட்டார். யுவ­தியின் கழுத்தும் நெரிக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் பிரேத பரி­சோ­தனை அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக நீதி­பதி குறிப்­பிட்டார்.

சமி­லா­வின பெற்றோர் நன்றி தெரி­விப்பு

இதே­வேளை, நீதி­மன்­றிற்கு வருகை தந்­தி­ருந்த சமிலா திசா­நா­யக்­காவின் பெற்­றோர்கள், ஊட­கங்­க­ளுக்கு வழக்கின் தீர்ப்பு தொடர்­பாக கருத்து தெரி­விக்­கையில், ஏழு வரு­டங்­களின் பின்னர் தமக்கு நீதி கிடைத்­தி­ருக்­கி­றது.
இதற்­காக ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கும், சுதந்­திர வர்த்­தக வலய ஊழி­யர்­க­ளுக்கும், பல்­வேறு வகை­யிலும் உத­வி­ய­வர்­க­ளுக்கும், சகல ஊட­கங்­க­ளுக்கும் நன்­றி­களைத் தெரி­விக்­கிறோம் என்­றனர்.

தீர்ப்பு வழங்­கப்­பட்ட பின்னர் வைத்­தியர் இந்­திக சுதர்­சன பாலகே நீதி­மன்றில் அமை­தி­யாகக் காணப்­பட்­டதை அவ­தா­னிக்க முடிந்­தது. ஆயினும், அங்கு வந்­தி­ருந்த பல­ரது முகங்­க­ளிலும் தீர்ப்பு குறித்து திருப்தி காணப்­பட்­டதை அவ­தா­னிக்க முடிந்­தது.

ஆயினும், இழந்த உயிரை யாராலும் மீட்டுத் தர முடி­யாது என்­பதை சமிலா திசா­நா­யக்­காவின் பெற்­றோரின் முகங்­களில் தெரிந்த சோகம் வெளிப்­ப­டுத்­தி­யது.

இந்த வழக்கின் தீர்ப்­பா­னது இனி வரும் பாலியல் வல்­லு­றவு மற்றும் கொலை தொடர்­பான பல வழக்­கு­களின் போது நீதிமன்றில் வாதிடும் சட்டத்தர ணிகளுக்கும், நீதி வழங்கும் நீதிபதிகளுக் கும் சட்ட ஆதாரமாகவும், உதாரணமாக வும் அமையப் போவது நிச்சயமாகும்.

(நீர்கொழும்பு நிருபர் எம்.இஸட் ஷாஜகான், கே.நிரோஷ்குமார்)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

விறுவிறுப்பு தொடர்கள்

    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

0 comment Read Full Article
    கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!:  ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க..  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

0 comment Read Full Article
    “நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று  எதிர்பார்த்திருந்த  புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து  காட்டிய  தலைவர்!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

“நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய தலைவர்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

1 comment Read Full Article

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News