இளவரசர் ஹரிக்கு திருமணம்; இங்கிலாந்து தேவாலயம் அனுமதி!

அமெரிக்காவில் பிறந்த Meghan Markle(35) என்ற மொடல் அழகியை கடந்த பத்து மாதங்களாக பிரித்தானிய இளவரசரான ஹரி(32) காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருந்தும் இவர்களின் திருமணத்தில் சில சட்ட சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த மொடல் அழகி அமெரிக்காவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரான, Trevor Engelson என்பவரை 2011-ம் ஆண்டு திருமணம் செய்து, 2013-ம் ஆண்டில் விவாகரத்தும் செய்தார்.
விவாகரத்து பெற்ற பெண்ணை அரசுக் குடும்பத்தை சேர்ந்த இளவரசர் திருமணம் செய்யலாமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பிரித்தானிய நாட்டு சட்டப்படி, இங்கிலாந்து தேவாலயத்தின்(Church of England) சட்டவிதிகளின்படி திருமணம் செய்தால் மட்டுமே, அது சட்டப்பூர்வ திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
இது இவ்வாறிருக்க, இங்கிலாந்து தேவாலயம் நேற்றைய தினம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, கடந்த 2002-ம் ஆண்டு இங்கிலாந்து தேவாலயத்தில் சில சட்ட திருத்தங்கள் கொண்டு வந்ததால் அதன் அடிப்படையில் விவாகரத்து பெற்ற தோழியை இளவரசர் ஹரி திருமணம் செய்வதில் எவ்வித தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தும், இங்கிலாந்து தேவாலயம் அனுமதி அளித்தாலும் கூட தனது பாட்டியும் பிரித்தானிய மகாராணியுமான இரண்டாம் எலிசபெத் இத்திருமணத்திற்கு அனுமதி வழங்குவாரா? என்பதை பொறுத்திருந்து தான் அவதானிக்க வேண்டியுள்ளது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment