ilakkiyainfo

ilakkiyainfo

இழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)

இழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)
November 04
21:17 2018

மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக நிய­மித்­ததைக் கூட சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொண்­டி­ருக்கும். அதனை அவர் பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக செய்­தி­ருந்தால், யாரும் திருப்பிக் கேள்வி கேட்க முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருக்கும்.

ஆனால் அவர் அதனைச் செய்­ய­வில்லை. மஹிந்­தவைப் பிர­த­ம­ராக்கி விட்டு மறுநாள் பாரா­ளு­மன்­றத்­தையும், 21 நாட்­க­ளுக்கு முடக்­கினார். இதுதான் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இரா­ஜ­தந்­திரம், அர­சியல் அனு­பவம், எல்­லா­வற்­றை­யுமே தலை­கீ­ழாக புரட்டிப் போட்­டது

மஹிந்த ராஜபக் ஷவை ஏற்றுக் கொள்­வதா- ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஏற்றுக் கொள்­வதா என்ற குழப்பம் கடந்த 26ஆம் திக­திக்குப் பின்னர் வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­பட்­டது.

ஆனால், கிட்­டத்­தட்ட எல்லா நாடு­க­ளுமே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இந்த நட­வ­டிக்கை அல்­லது வழி­முறை சரி­யா­னதா என்ற சந்­தே­கத்­தையே பெரும்­பாலும் கொண்­டி­ருந்­தன.

பிர­த­ம­ராகப் பத­வி­யேற்க வரு­மாறு மைத்­தி­ரி­பால சிறி­சேன அழைத்தார், நான் பத­வி­யேற்றேன் என்று, என்றோ ஒரு நாள் மஹிந்த ராஜபக் ஷ தன்னை நியா­யப்­ப­டுத்திக் கொள்­ளலாம்.

ஆனால், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் அவ்­வாறு செய்­ய­மு­டி­யாது. எனினும், அவர் வேறொரு கதை­யையும், கூறத் தயங்­க­மாட்டார், ஏனென்றால், கடந்த மூன்­றரை ஆண்­டு­களில் அவர் முன்­னுக்குப் பின் முர­ணாக கதை­களை விடு­வதில், தனது ஆற்­றலை நிரூ­பித்­தி­ருக்­கிறார்.

சட்ட நிபு­ணர்­க­ளுடன் ஆலோ­சித்து விட்டு அர­சி­ய­ல­மைப்­புக்கு அமை­யவே நட­வ­டிக்கை எடுத்தேன் என்று மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறு­கின்ற கதை­களை நம்­பு­வ­தற்கு சர்­வ­தேச சமூகம் தயா­ராக இருக்­க­வில்லை. அதனை தெளி­வாக கூறி­ய­துடன், இறுக்­க­மான நிலையில் நின்­றதால் தான், அவர் முன்­கூட்­டியே பாரா­ளு­மன்­றத்தைக் கூட்டும் நிலை ஏற்­பட்­டது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்தின் மீது குற்­றச்­சாட்­டு­களைக் கூறும் மைத்­தி­ரி­பால சிறி­சேன, அதனை உரிய வகையில் கையா­ள­வில்லை என்­பதே, ஜனா­தி­பதி மீதான அவ­நம்­பிக்­கைக்கு முக்­கி­ய­மான காரணம்.

முதல் நட­வ­டிக்­கை­யாக, மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக நிய­மித்­ததைக் கூட சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொண்­டி­ருக்கும். அதனை அவர் பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக செய்­தி­ருந்தால், யாரும் திருப்பிக் கேள்வி கேட்க முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருக்கும். ஆனால் அவர் அதனைச் செய்­ய­வில்லை.

மஹிந்­தவைப் பிர­த­ம­ராக்கி விட்டு மறுநாள் பாரா­ளு­மன்­றத்­தையும், 21 நாட்­க­ளுக்கு முடக்­கினார். இதுதான் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இரா­ஜ­தந்­திரம், அர­சியல் அனு­பவம், எல்­லா­வற்­றை­யுமே தலை­கீ­ழாக புரட்டிப் போட்­டது.

இது அவ­ரது திட்டம் அல்ல என்­பதும், மஹிந்த தரப்பின் திட்டம் தான் என்­பதும் அனை­வ­ருக்கும் தெரியும். எவ்­வா­றா­யினும், துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, அதற்குப் பொறுப்­புக்­கூற வேண்­டிய நிலையில் இருப்­பவர், மைத்­தி­ரி­பால சிறி­சேன தான்.

பாரா­ளு­மன்­றத்தை முடக்­கி­யதை, நியா­யப்­ப­டுத்தும் வகையில் மஹிந்த தரப்­பினர் கூறிய, ஏற்­றுக்­கொள்ள முடி­யாத நியா­யங்­களும், அதனை அவர்கள் வெளிப்­ப­டுத்­திய முறையும், அவர்கள் இன்­னமும் அப்­ப­டியே தான் இருக்­கி­றார்கள் – மாற­வில்லை என்­பதை உணர்த்­தி­யது.

அதனால் தான் சர்­வ­தேச அழுத்­தங்­களை ஒரே நேரத்தில் சமா­ளிக்க வேண்­டிய நிலைக்­குள்­ளானார் மைத்­தி­ரி­பால சிறி­சேன. அவர் பத­வி­யேற்ற மூன்­றரை ஆண்­டு­களில், இது­போன்­ற­தொரு அழுத்­தத்தை, நெருக்­க­டியை வெளி­யு­லகில் இருந்து சந்­தித்­த­தே­யில்லை.

பத­வி­யேற்ற புதிதில், அமை­திக்­கான நோபல் பரி­சுக்­கான பரிந்­துரைப் பட்­டி­யலில் கூட இடம்­பி­டித்­தவர். ஐ.நா பொதுச்­சபைக் கூட்­டத்தில் பங்­கேற்கச் சென்­ற­போது, அவ­ருடன் படம் எடுத்துக் கொள்­வ­தற்கு முக்­கிய வெளி­நாட்டுத் தலை­வர்கள் முண்­டி­ய­டித்­தனர் என்ற கதையும் அப்­போது அவ­ரது அமைச்­சர்­களால் கூறப்­பட்­டது.

ஏன், கூட்­ட­மைப்புக் கூட அவரை நெல்சன் மண்­டேலா என்­றது. மார்ட்டின் லூதர் கிங்கின் மறு அவ­தாரம் என்­றது.

அப்­ப­டிப்­பட்ட – சர்­வ­தேச அள­விலும் உள்­நாட்­டிலும் பெரி­ய­தொரு நம்­பிக்­கையைப் பெற்­றி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஒரே நாளில் தனது ஒட்­டு­மொத்த நம்­பிக்­கை­யையும் தொலைத்து விட்டு நிற்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

மஹிந்த ராஜபக் ஷ பெரும்­பான்மைப் பலத்தை நிரூ­பிக்க உட­ன­டி­யா­கவே அவர் இட­ம­ளித்­தி­ருந்தால், இந்­த­ள­வுக்கு நெருக்­கடி அவ­ருக்கோ நாட்­டுக்கோ ஏற்­பட்­டி­ருக்­காது.

எனினும், அவ்­வாறு பாரா­ளு­மன்­றத்தைக் கூட்­டி­யி­ருந்தால், மஹிந்த ராஜபக் ஷவினால், பெரும்­பான்மைப் பலத்தை நிரூ­பிக்க முடி­யாமல் போயி­ருக்கும். அதனைத் தெரிந்து கொண்டே குதிரை பேரத்­துக்­கா­கவும், ஆட்­களை விலைக்கு வாங்­கு­வ­தற்­கா­கவும், ஒரு கால இடை­வெ­ளியை ஏற்­ப­டுத்திக் கொடுத்தார்.

நல்­லாட்சி, ஊழ­லற்ற தூய்­மை­யான நிர்­வாகம், என்­பன போன்ற விட­யங்­களை வலி­யு­றுத்தி வந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும், மோச­மான நிலைக்குத் துணை போயி­ருக்­கிறார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்தில் மோச­டிகள், முறை­கே­டுகள் நடந்­த­தாக குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார் ஜனா­தி­பதி. அதற்­கா­கவே அந்த அர­சாங்­கத்தை நீக்கும் முடிவை எடுத்­த­தா­கவும் கூறி­யி­ருந்தார். அந்த அர­சாங்­கத்­துக்கு மூன்­றரை ஆண்­டுகள் அவர் தான் துணை­யாக இருந்­தவர்.

அது­போலத் தான், முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் மஹிந்த ராஜபக் ஷவினர் பெரி­ய­ளவில் நாட்டைச் சூறை­யா­டி­ய­தா­கவும், வெளி­நா­டு­களில் பணத்தைக் குவித்து வைத்­தி­ருப்­ப­தா­கவும் குற்­றம்­சாட்­டி­யவர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. அந்த அர­சாங்­கத்­திலும் அவர் பங்­கா­ளி­யாக இருந்­தி­ருக்­கிறார். இப்­போது யாரைக் கொள்ளைக் கூட்டம் என்றும், சர்­வா­தி­கா­ரிகள் என்றும் வர்­ணித்­தாரோ, அவர்­களை மீண்டும் ஆட்­சியில் அமர்த்­தி­யி­ருக்­கிறார். இங்கும் அவர் துணை போயி­ருக்­கிறார்.

அது­மாத்­தி­ர­மன்றி, பாரா­ளு­மன்­றத்தை முடக்கி வைத்து, நாட்டின் அர­சியல் கலா­சா­ரத்தை மோச­மான நிலைக்குள் தள்ளி, குதிரை பேரத்­துக்கும், பாரா­ளு­மன்­றத்தை விலைக்கு வாங்கும் அர­சி­ய­லுக்கும் அவர் ஆத­ர­வ­ளித்­தி­ருக்­கிறார். ஆக, மைத்­தி­ரி­பால சிறி­சேன என்­னதான் நியா­யங்­க­ளையும், கார­ணங்­க­ளையும் முன்­வைத்­தாலும், தன்னைத் தூய்­மை­யா­ன­வ­ராக – ‘கிளீன்’ அர­சியல் செய்­ப­வ­ராக காட்டிக் கொண்­டாலும், ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் – அவர் நேர்­மை­யற்ற அர­சி­ய­லுக்கும், ஊழ­லுக்கும் மோச­டி­க­ளுக்கும் துணை போயி­ருக்­கிறார் என்­பதே உண்மை.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நட­வ­டிக்கை சர்­வ­தேச அரங்கில் பெரும் ஏமாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. அதுதான், அவர் மீதான சர்­வ­தேச அழுத்­தங்கள் ஒன்று குவி­வ­தற்கும் காரணம்.

இலங்­கையில் ஆட்சி மாற்­றத்­துக்­கான சூழலை உரு­வாக்­கு­வதில் முன்­னின்று செயற்­பட்­டது அமெ­ரிக்கா. அந்தக் கால­கட்­டத்தில், ஐ.நாவுக்­கான அமெ­ரிக்க தூது­வ­ராக இருந்த சமந்தா பவர், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நட­வ­டிக்­கைகள் இலங்­கையில் ஜன­நா­ய­கத்தை தலை­கீ­ழாக புரட்டி விட்­டது என்று கருத்து வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

பொறுப்­புக்­கூறல், ஜன­நா­யகம் என்று வாக்­கு­றுதி கொடுத்து விட்டு, போர்க்­குற்­றங்­க­ளுக்கும், காணாமல் போன­மை­க­ளுக்கும் கார­ண­மா­ன­வரை அவர் ஆட்­சியில் அமர்த்­தி­யி­ருக்­கிறார் என்று அவர் விச­னத்தை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

அர­சியல் குழப்­பங்கள் ஏற்­பட்­டதும், அமெ­ரிக்கா தான் முதலில் வாய் திறந்­தது. எது­ந­டந்­தாலும், அது அர­சி­ய­ல­மைப்­புக்­குட்­பட்­ட­தாக இருக்க வேண்டும் என்று முதலில் கூறி­யது. அதற்குப் பின்னர், பிரித்­தா­னியா, ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களும் அத­னையே வழி­மொ­ழிந்­தன.

ஆனால் எந்த நாடுமே, மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஒரு சம்­பி­ர­தா­யத்­துக்­கா­வது வாழ்த்துக் கூற­வில்லை. இது மஹிந்த ராஜபக் ஷவுக்கு மாத்­தி­ர­மன்றி, அவரை இந்தப் பத­விக்குக் கொண்டு வந்த, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் கூட, அவ­மா­னத்­தையே ஏற்­ப­டுத்­தி­யது.

சீன ஜனா­தி­ப­தியின், வாழ்த்துச் செய்­தியைக் கொடுத்து, சீனத் தூதுவர் மட்டும், வாழ்த்துக் கூறினார். அதற்குப் பின்னர் தான் வேறு வழி­யின்றி இந்­தியா வாயைத் திறந்­தது. இந்­தி­யாவும் கிட்­டத்­தட்ட அர­சி­ய­ல­மைப்­புக்கு அமை­வாகச் செயற்­பட வேண்டும் என்றே கூறி­யது.

அதற்குப் பின்னர், ஐ.நா அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றியம் என்­பன இரண்­டா­வது சுற்று அறிக்­கையை வெளி­யிட்­டன. நாடா­ளு­மன்­றத்தைக் கூட்டி ஜன­நா­ய­கத்தை காப்­பாற்ற வேண்டும் என்று கோரின.

அந்த அழுத்­தங்­களின் பின்னர் தான், ஜனா­தி­பதி, வெளி­நாட்டுத் தூது­வர்­களை அழைத்து தன்னை நியா­யப்­ப­டுத்­தினார். அர­சி­ய­ல­மைப்பில் ஆங்­கி­லத்தில் இல்­லாத – சிங்­கள மொழி பெயர்ப்பில் உள்ள அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­தியே ஆட்­சியைக் கவிழ்த்­த­தாக அவர் கூறி­யி­ருக்­கிறார். இலங்­கையில் இரண்டு அர­சியல் சட்­டங்கள் உள்­ளன அது மொழிக்கு மொழி வேறு­ப­டு­கி­றது என்ற உண்­மையை மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒப்புக் கொண்ட தருணம் அது. ஒரு நாட்­டுக்கு இரண்டு அர­சி­ய­ல­மைப்­புகள் என்­பது ஆச்­ச­ரி­ய­மா­னது.

உலகில் வேறெங்கும் இது­போன்­ற­தொரு அர­சி­ய­ல­மைப்பும் குழப்­பமும் இருந்­தி­ருக்­குமா என்­பது ஐயமே. ஒவ்­வொரு மொழி­யிலும் ஒவ்­வொரு வித­மான அர­சி­ய­ல­மைப்பு இருக்கும் இலங்கை தான், பழம்­பெரும் ஜன­நா­யக நாடு என்று கொண்­டாடிக் கொண்­டி­ருக்­கி­றது.

இங்கு ஆச்­ச­ரி­ய­மான ஒரு விடயம் என்­ன­வென்றால், உலகில் எந்­த­வொரு நாடுமே, மைத்­தி­ரி­பால சிறி­சேன செய்­தது சரி­யான நட­வ­டிக்­கையே, என்று வாய் திறக்­க­வில்லை. இந்த இடத்தில் தான், அவர் உலக அரங்கில் இருந்து தனி­மைப்­பட்டுப் போயி­ருந்தார்.

சர்­வ­தேச சமூ­கமே தனக்குப் பின்னால் இருக்­கி­றது என்று கூறிய அவரை, இன்று சர்­வ­தேசம் எப்­படிப் பார்க்­கி­றது என்­பது அவ­ருக்கே நன்­றாகத் தெரியும். அவ­ருக்கு இந்த நிலை ஏற்­பட்­ட­தற்கு, அவரைப் பற்­றிய இந்த மாற்­றத்­துக்குக் காரணம், பூகோள அர­சி­யலோ, அதி­காரப் போட்­டியோ அல்ல. ஆட்­சிக்­க­விழ்ப்பை அவர், அர­சி­ய­ல­மைப்­புக்கு அமை­வாக மேற்­கொள்­ள­வில்லை. அதற்குப் பின்­னரும், ஜன­நா­யகப் பண்­பு­களை மதிக்­க­வில்லை. அது தான். அந்தக் காரணம்.

அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தை மதிக்­கு­மாறும், அதற்­க­மைய நடக்­கு­மாறும், ஜன­நா­யக மாண்­பு­களைப் பாது­காக்­கு­மாறும், சர்­வ­தேசம் திரும்பத் திரும்ப அறிக்­கை­களை வெளி­யிட்டு நினை­வு­ப­டுத்தும் நிலைக்கு, ஒரே நாளில் நாட்டைக் கொண்டு வந்து நிறுத்­தி­யி­ருக்­கிறார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன. சர்­வ­தேச சமூ­கத்­து­ட­னான அவ­ரது உற­வு­களில் ஒரு பெரிய விரிசல்- அல்­லது ஓட்டை விழுந்­தி­ருக்­கி­றது, இதனை அவர் எப்­படிச் சரி செய்து கொள்ளப் போகிறார் என்று தெரி­ய­வில்லை. ஏனென்றால், அவர் விரும்­பியோ விரும்­பா­மலோ எடுத்த நட­வ­டிக்கை, அவரைப் பொறிக்குள் தள்­ளி­யி­ருக்­கி­றது.

இனி அவர் சூழ்­நிலைக் கைதி­யா­கவே காலத்தைக் கடத்த வேண்­டி­யி­ருக்கும் என்­பதால், சர்வதேச சமூகத்தின் கருத்துக்களை அவரால், அவ்வளவு இலகுவாக மதிக்க முடியாது.

பாராளுமன்றத்தைக் கூட்டுமாறும், ஜனநாயக மாண்புகளைக் காக்குமாறும், அமெரிக்கா அழுத்தங்களைக் கொடுத்தபோது. அதற்கு டலஸ் அழகப்பெரும போன்ற ராஜபக் ஷ சகபாடிகளிடம் இருந்து வந்திருக்கின்ற விமர்சனங்கள், 2015இற்கு முற்பட்ட காலத்தையே வெளிப்படுத்தியது.

இத்தகையவர்களை அருகில் வைத்துக் கொண்டு மைத்திரிபால சிறிசேனவினால், சர்வதேச சமூகத்துடன் ஏற்பட்டுள்ள தற்போதைய விரிசலை ஒட்ட வைக்க முடியாது.

இந்த ஆட்சிமாற்றச் சூதாட்டம் ஒரு சர்வதேச அரசியல் சதியாகவே பார்க்கப்படும் நிலையில், மைத்திரிபால சிறிசேனவுக்கு, இனி மேற்குலகின் கதவுகள் அவ்வளவு சுலபமாகத் திறக்கும் என்று நம்பி விட முடியாது.

சர்வதேச சமூகத்தின் பேராதரவுடன், ஆட்சிக்கு வந்த அவரால், அந்த ஆதரவுத் தளத்துடன் வெளியேபோகும் நிலை இருக்கப் போவதில்லை.

எப்போதுமே தன்னை ஒரு தியாகி போலக்காட்டிக் கொள்வதில், அக்கறை கொண்ட சிறிசேன, உண்மையில் மஹிந்த ராஜபக் ஷவுக்காக தனது, புகழையும், மதிப்பையும் தியாகம் செய்யும் நிலை வரும் என்று ஒருபோதும் எண்ணியிருக்கமாட்டார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த  இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

0 comment Read Full Article
    “ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

0 comment Read Full Article
    ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

0 comment Read Full Article

Latest Comments

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

இலங்கை பத்திரிகைகள்

English News