ilakkiyainfo

ilakkiyainfo

‘உங்கள் அதிகாரம் மொத்தமும் பறிபோய்விடும்!’ – கார்டன் தூதுவரிடம் மனம் திறந்த ஓ.பன்னீர்செல்வம்

‘உங்கள் அதிகாரம் மொத்தமும் பறிபோய்விடும்!’ – கார்டன் தூதுவரிடம் மனம் திறந்த ஓ.பன்னீர்செல்வம்
January 11
14:26 2017

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்குப் போட்டியாக தொடர் கடிதங்களை எழுதி வந்த சசிகலா, தற்போது நிதானமாகச் செயல்பட்டு வருகிறார்.

‘கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்துக்குள் நூறு சதவீத அதிகாரத்தைக் கைப்பற்றும் வேலையில் நீங்கள் இறங்கினால், இருக்கும் அதிகாரங்களும் பறிபோய்விடும்’ என சசிகலா தூதுவரிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, கோட்டையை நோக்கிப் பார்வையை திருப்பினார் சசிகலா.

அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்பட கட்சியின் சீனியர்கள்  அனைவரும்  ஒரே குரலில், ‘முதல்வர் பதவியில் சசிகலா அமர வேண்டும்.

பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும்’ எனப் பேசி வந்தனர்.

இதற்கு பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து எந்த அசைவுகளும் இல்லை. ‘தங்களிடம் அடங்கி இருந்தவர், எஜமானன் போல் செயல்படுவதா?’ எனக் கோபத்தைக் காட்ட ஆரம்பித்தார் சசிகலா. மீனவர் பிரச்னை உள்பட தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னைகள் குறித்து பிரதமருக்குக் கடிதம் எழுதினார் பன்னீர்செல்வம்.

அதே கோரிக்கைகளை வலியுறுத்தி சசிகலாவும் கடிதம் எழுதினார். ஆட்சியில் இருந்தும் கட்சியில் இருந்தும் ஒரே கோரிக்கைக்காக இரண்டு பேர் கடிதம் எழுதியதை ஆச்சரியத்தோடு கவனித்தனர் அரசியல் விமர்சகர்கள்.

“அதிகாரத்தில் இருந்து விலகும் முடிவில் பன்னீர்செல்வம் இல்லை என்பதை அறிந்தபிறகுதான், நேரடியாகவே எதிர்ப்பை வெளிக்காட்டினார் சசிகலா.

இந்தியா டுடே மாநாட்டில் பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருக்கும்போதே மேடையில் இருந்து வெளியேறினார். ‘பொங்கலுக்குள் முதல்வர் ஆகிவிட வேண்டும்’ என்ற அவருடைய திட்டமும் கை நழுவிவிட்டது.

‘அவர் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்?’ என உளவுத்துறையின் உயர் அதிகாரி மூலம் தூது அனுப்பினார் சசிகலா. நேற்று அந்த அதிகாரியிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ்” என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

“ஆட்சி அதிகாரத்துக்குள் மத்திய அரசின் ஆதிக்கம் குறித்து அதிகாரியிடம் விளக்கினார் பன்னீர்செல்வம். நீண்ட நேரம் நடந்த விவாதத்தில், தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து கலங்கிய கண்களோடு விவரித்தார்.

‘கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டுத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். அரசின் கொள்கை முடிவுகளை கார்டன் ஆலோசனையின்படியே எடுத்து வருகிறோம்.

பாடநூல் கழகத் தலைவர் பதவிக்கு வளர்மதி பெயரை சின்னம்மா முன்மொழிந்தார். உடனே பதவியை வழங்கினோம். ‘முதல்வர் பதவியில் இருந்து நான் விலக வேண்டும்’ என்று அவர்கள் வற்புறுத்துகின்றனர்.

இந்தப் பதவியில் நான் இருப்பதால்தான், அதிகாரம் சீராகச் சென்று கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கு இணக்கமாக நடந்து கொண்டு பல திட்டங்களைக் கொண்டு வர முடிகிறது.

முதலமைச்சராக சின்னம்மா வந்துவிட்டால், இருக்கும் மொத்த அதிகாரத்தையும் பறித்துவிடுவார்கள். கோட்டையில் நடக்கும் விவகாரங்களை ஆளுநர் கவனித்துக் கொண்டு வருகிறார்.

அதிகாரத்துக்குள் குழப்பம் வந்துவிட்டால், ஆட்சி கைவிட்டுப் போய்விடும். நமக்கு அடுத்தபடியாக இருக்கும் தி.மு.கவுக்குத்தான் வாய்ப்பு போகும்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2017
M T W T F S S
« Apr    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

சீமான் கூறுவதில் தவறில்லையே. வேறு மாநிலத்தில் ஒரு தமிழன் அரசியல் எய்ய முடியுமா? நடிப்பவர்கள் எல்லாம் ஆட்சி செய்ய முடியாது. [...]

Your comment..nice movie [...]

இவங்களை ஸ்ரீலங்கா ஜெயிலுக்கு அனுப்பி லாடங் கட்டவேண்டும் ஐரோப்பாவில் வெளியில் இருப்பதைவிட ஜெயிலில் சொகுசு வாழ்க்கை. [...]

சொந்த மக்களுக்கு கக்குஸ் கட்டி கொடுக்க துப்பில்லை. சிறிலங்காவுக்கு ஹோஸ்பிடல் கட்டி கொடுத்து இருக்கிறான் காவி மோடி. [...]

This Vickneswaran was a judge and in true a big criminal , he had raped [...]

இலங்கை பத்திரிகைகள்

English News