ilakkiyainfo

ilakkiyainfo

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கு தொடர்பா? ஐநா நிபுணர்கள் விசேட அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கு தொடர்பா? ஐநா நிபுணர்கள் விசேட அறிக்கை
August 03
16:31 2019

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உரிமை கோரியிருந்தார் ஆனால் உண்மையில் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து ஐஎஸ் அமைப்பிற்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு அதன் விசேட கண்காணிப்பாளர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை முன்னெடுத்த தேசிய தவ்ஹீத் ஜமாத்தும்  ஜேஎம்ஐ அமைப்பு 2014 இல் உருவாக்கப்பட்டவை என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தாக்குதலிற்கு முன்னர் 50 உறுப்பினர்களை கொண்டிருந்தது எனவும் ஐநா குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஜேஎம்ஐ அமைப்பு 2015 இல் உருவாக்கப்பட்டதாகவும் அது சுமார் 150 உறுப்பினர்களை கொண்டிருந்ததாகவும்  அவர்களில் பலர் சிரியா சென்று ஐஎஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்றனர் எனவும் ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு நிபுணர்கள் இணையம் மூலம் ஐஎஸ் அமைப்பு உள்ளுர் வெடிகுண்டுகளை தயாரிக்கும் முறை குறித்து கற்றுள்ளனர் மேலும் தாங்கள் தயாரித்த குண்டுகளை பரிசோதனை செய்துள்ளனர் எனவும் அறிக்கையில் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

86dd5235-8f0c-403c-806e-8584376a90e9-large16x9_AP19111459338478 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கு தொடர்பா? ஐநா நிபுணர்கள் விசேட அறிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கு தொடர்பா? ஐநா நிபுணர்கள் விசேட அறிக்கை 86dd5235 8f0c 403c 806e 8584376a90e9 large AP19111459338478 e1564849843220ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ள போதிலும் உறுப்பு நாடுகள் மேற்கொண்ட விசாரணைகள் ஐஎஸ் அமைப்பிற்கு இந்த தாக்குதலுடன் நேரடி தொடர்பில்லை என்பதும் அந்த அமைப்பு முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது எனவும் அறிக்கையில் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் உள்ளுரிலேயே உருவாக்கப்பட்டதுடன் ஐஎஸ் அமைப்பின் நடவடிக்கைகளால் உந்தப்பெற்று முன்னெடுக்கப்பட்டது எனவும் எனவும் அறிக்கையில் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஐஎஸ் அமைப்பின் பிரச்சாரங்கள் தொடர்ந்தும் கவனத்தை ஈர்ப்பவையாக உள்ளதையும் உள்ளுர் குழுக்கள் எதிர்பாராத இடங்களில் உருவாகி  குறிப்பிடத்தக்க பயங்கரவாத திறனை உருவாக்குபவையாக மாறக்கூடிய ஆபத்துள்ளதையும் புலப்படுத்தியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது எனவும் அறிக்கையில் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

.ஐஎஸ் அமைப்பு தற்போது இலங்கையில் இடம்பெற்றது போன்ற ஐஎஸ் அமைப்பினால் உத்வேகம் பெறப்பட்ட தாக்குதல்களை நம்பியுள்ளது என ஐநாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News