ilakkiyainfo

ilakkiyainfo

உலகக்கோப்பை 2019 : ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றது

உலகக்கோப்பை 2019 : ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றது
June 09
19:35 2019

 

உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஞாயற்றுக் கிழமை மோதின. இப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 353 ரன்கள் இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாமிடத்துக்கு முன்னேறியது.

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் உலகக்கோப்பையின் 14-வது லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி களம் இறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன் எடுத்தது. முன்னணி வீரர்களான ரோகித் சர்மா (57) தவான் (117) விராட் கோலி (82) ஹர்திக் பாண்டியா 48 ரன் எடுத்தனர்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்ச்சும் ஆடினர். இருவரும் 10 ஓவர் வரை 48 ரன் சேர்த்தனர். பிஞ்ச் 36 ரன் இருக்கும்போது எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
201906092327583319_1_aus._L_styvpf உலகக்கோப்பை 2019 : ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றது உலகக்கோப்பை 2019 : ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றது 201906092327583319 1 aus
 
அடுத்து வந்த சுமித், வானருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நேர்த்தியாக விளையாடி ரன் சேர்த்தனர். வார்னர் அரை சதம் அடித்த சிறிது நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அவர் 56 எடுத்தார். பின்னர் வந்த வீரர்களான உஸ்மான் கவாஜா 42 ரன்னிலும், மேக்ஸ்வெல் 28 ரன்னிலு அவுட் ஆகினர்.

அதைத்தொடர்ந்த வந்த அலெக்ஸ் கேரி அதிரடியாக ஆட இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 316 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.7470346f-8706-42e7-ae4d-e5837e52292d.png உலகக்கோப்பை 2019 : ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றது உலகக்கோப்பை 2019 : ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றது 7470346f 8706 42e7 ae4d e5837e52292d

ஆட்ட நாயகன் – ஷிகர் தவான்

இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஷிகர் தவான் வென்றார்.

”நாங்கள் சிறப்பாக ஃபீல்டிங் செய்தோம், நல்ல பௌலிங் உள்ளது. சிறப்பான ஸ்பின்னர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். நாங்கள் வலைப்பயிற்சியில் கடுமையாக உழைத்தோம். அதற்கான பலன் தான் இந்த வெற்றி. இன்றைய போட்டியில் அனைத்துத் துறையிலும் சிறப்பாக விளையாடினோம்” எனக் கூறியுள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News