ilakkiyainfo

ilakkiyainfo

உலக கோப்பை கால்பந்து: அறிமுக ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என அதிரடியாக வீழ்த்தியது ரஷியா

உலக கோப்பை கால்பந்து: அறிமுக ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என அதிரடியாக வீழ்த்தியது ரஷியா
June 14
19:35 2018

உலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் ரஷியா அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது.

மாஸ்கோ: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.

இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் ரஷியா – சவுதி அரேபியா பலப்பரீட்சை நடத்தின.

முன்னதாக இரவு 8 மணிக்கு கோலாகலமான தொடக்க விழாவுடன் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளித்தார்.

அப்போது பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அதன்பின் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் நடைபெற்றது.

201806142231557802_1_AP6_14_2018_000225B._L_styvpf  உலக கோப்பை கால்பந்து: அறிமுக ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என அதிரடியாக வீழ்த்தியது ரஷியா 201806142231557802 1 AP6 14 2018 000225B

இந்த போட்டியை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சவுதி அரேபியா இளவரசர் மொகமது பின் சல்மான், பீபா அமைப்பின் தலைவர் ஜியான்னி இன்பாண்டினோ ஆகியோர் கண்டுகளித்தனர்.

இப்போட்டி தொடங்கிய 12-வது நிமிடத்தில் ரஷியா அணியின் கசின்ஸ்கீ கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 43-வது நிமிடத்தில் டென்னிஸ் செரிஷேவ் இரண்டாவது கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேர ஆட்டத்தில் ரஷியா அணி 2-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் ரஷியா அணியின் டிசியூபா கோல் அடித்தார். இறுதிநேர ஆட்டத்தில் ரஷியாவின் டென்னிஸ் செரிஷேவ் தனது இரண்டாவது கோலை அடித்தார்.

அதன்பின் ரஷியாவில் கோலோவின் மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார். சவுதி அரேபியா அணியினர் இறுதிவரை முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் ரஷியா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை தட்டிச்சென்றது.

201806142231557802_2_AP6_14_2018_000224B._L_styvpf  உலக கோப்பை கால்பந்து: அறிமுக ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என அதிரடியாக வீழ்த்தியது ரஷியா 201806142231557802 2 AP6 14 2018 000224B

ரஷியா வீரர் டென்னிஸ் செரிஷேவ்
இந்த போட்டியில் ரஷியா அணி வெல்லும் என ‘அசிலிஷ்’ என்ற பூனை ஏற்கனவே கணித்தது. தற்போது அந்த பூனையின் ஆருடம் பலித்துவிட்டது. நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் எகிப்து – உருகுவே, மொராக்கோ – ஈரான், போர்ட்டுகல் – ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

பெரும் மதிப்புக்குரிய திரு. கோட்டாபய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]

இலங்கை பத்திரிகைகள்

English News