ilakkiyainfo

ilakkiyainfo

உலக கோப்பை கால்பந்து – ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் காலிறுதியில் நுழைந்தது

உலக கோப்பை கால்பந்து – ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் காலிறுதியில் நுழைந்தது
July 03
01:52 2018

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் பெல்ஜியம் அணி 3 – 2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் – ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டத்தின் தொடக்கத்தி இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் – ஜப்பான் அணிகள் 0-0 என சமனிலை வகித்தன.

201807030137564695_1_jpn-2._L_styvpf  உலக கோப்பை கால்பந்து - ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் காலிறுதியில் நுழைந்தது 201807030137564695 1 jpn 2ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஜெங்கி ஹராகுசி ஒரு கோல் அடித்தார்.

மேலும், ஆட்டத்தின் 52 வது நிமிடத்தில் டகாஷி இனுல் ஒரு கோல் அடிக்க ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெல்ஜியம் அணியின் ஜேன் வெர்டோகன் ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

அதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 74 வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மரானே பெலானி ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் சமனிலை வகித்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி பெல்ஜியம் வீரர் நாசர் சடி 94வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

இறுதியில், ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி காலிறுதிக்குள் நுழைந்தது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

டேய் சாஸ்திரி இது M16 அல்ல MI6 ( Military Intelligence, Section 6) , [...]

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

Nice pair i think and manmadhan ,saravana,CCV, காற்றின் மொழி super ha irukkum my thalaivan str [...]

ஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]

இலங்கை பத்திரிகைகள்

English News