ilakkiyainfo

ilakkiyainfo

உலக கோப்பை கால்பந்து – நாக் அவுட் சுற்றில் அர்ஜெண்டினாவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது பிரான்ஸ்

உலக கோப்பை கால்பந்து – நாக் அவுட் சுற்றில் அர்ஜெண்டினாவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது பிரான்ஸ்
June 30
16:04 2018

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

ரஷியாவில் நடந்து வரும் 2-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இதில் 2-வது சுற்றுக்கு உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்), பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஐப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.

இதற்கிடையே, 2-வது சுற்று ஆட்டங்கள் இன்று இரவு தொடங்கின. இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ் மற்றும் ’டி’ பிரிவில் 2-ம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். பிரான்ஸ் அணியின் அண்டோனி கிரிஸ்மான் 13வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

201806302125347874_1_arg-2._L_styvpf உலக கோப்பை கால்பந்து - நாக் அவுட் சுற்றில் அர்ஜெண்டினாவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது பிரான்ஸ் உலக கோப்பை கால்பந்து - நாக் அவுட் சுற்றில் அர்ஜெண்டினாவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது பிரான்ஸ் 201806302125347874 1 arg 2
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அர்ஜெண்டினா அணியின் ஏஞ்சல் டி மரியா 41வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து நாக் அவுட் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்சும் அர்ஜெண்டினாவும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 48வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் காப்ரிய்ல் மர்கோடா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து பிரான்ஸ் அணியின் பெஞ்சமின் பவார்ட் 57-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைப்படுத்தினார். அவரை தொடர்ந்து பிரான்ஸ் அணியின் மபாப்பி 64 மற்றும் 68-வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் அர்ஜெண்டினா வீரர் செர்ஜியோ அகுரோ ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து, பிரான்ஸ் அணி அர்ஜெண்டினாவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. லியோன் மெஸ்சியின் உலக கோப்பை கனவு தகர்ந்தது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News