ilakkiyainfo

ilakkiyainfo

உலக கோப்பை கால்பந்து – பிரேசிலை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்

உலக கோப்பை கால்பந்து – பிரேசிலை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்
July 06
20:15 2018

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் – பெல்ஜியம் அணிகள் மோதின.

201807070127154690_1_bra-2._L_styvpf  உலக கோப்பை கால்பந்து – பிரேசிலை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம் 201807070127154690 1 bra 2

தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் பெர்னாண்டோ லூயிஸ் ரோசா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் அணி தனக்கு கிடைத்த பல்வேறு வாய்ப்புகளை கோலாக மாற்றவில்லை.

ஆனாலும், ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரெனாடோ அகஸ்டோ ஒரு கோல் அடித்தார். இதனால் 2-1 என்ற கணக்கில் பிரேசில் பின்தங்கியது.

ஆட்டத்தின் இறுதிவரை யாரும் கோல் அடிக்காததால் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

டேய் சாஸ்திரி இது M16 அல்ல MI6 ( Military Intelligence, Section 6) , [...]

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

Nice pair i think and manmadhan ,saravana,CCV, காற்றின் மொழி super ha irukkum my thalaivan str [...]

ஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]

இலங்கை பத்திரிகைகள்

English News