ilakkiyainfo

ilakkiyainfo

உலக கோப்பை கால்பந்து – பெனால்டி ஷூட்டில் ரஷியாவை 4-3 என வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது குரோஷியா

உலக கோப்பை கால்பந்து – பெனால்டி ஷூட்டில் ரஷியாவை 4-3 என வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது குரோஷியா
July 07
21:07 2018

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் ரஷியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா அரையிறுதிக்குள் நுழைந்தது.

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று முன்தினம் காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ரஷியா – குரோஷியா அணிகள் மோதின.

தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ரஷியா வீரர் டெனிஸ் செரிஷேவ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ரஷியா அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரே கிரிமெரிக் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷியா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகித்தன.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் நேரம் வழ்ங்கப்பட்டது.

இதை பயன்படுத்தி ஆட்டத்தின் 100-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் டொமகோஜ் விஜே ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதலாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் 115வது நிமிடத்தில் ரஷியா அணியின் பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமனிலை வகித்தன. இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது.

முதலில் ரஷியாவின் வாய்ப்பை குரோஷியா கோல்கீப்பர் தடுத்துவிட்டார். ஆனால் குரோஷியா அணி முதல் வாய்ப்பில் கோல் போட்டது.

இர்ண்டாவது வாய்ப்பை ரஷிய கோலாக்கியது. ஆனால் குரோஷியாவின் வாய்ப்பை ரஷியா கோல் கீப்பர் தடுத்துவிட்டார்.
இதனால் மீண்டும் 1 – 1 என சமனானது.

மூன்றாவது வாய்ப்பை ரஷியா வீணாக்கியது. குரோஷியா மீண்டும் கோலாக்கியது. இதனால் 1-2 என முன்னிலை பெற்றது.

நான்காவது வாய்ப்பை ரஷியா கோலாக்கியது. குரோஷியாவும் கோல் அடித்ததால் 2-3 என முன்னிலை பெற்றது.

இறுதியாக, ஐந்தாவது வாய்ப்பை ரஷியா கோல் போட்டதால் 3-3 என சமனானது. குரோஷியா மீண்டும் ஒரு கோல் அடித்து 4-3 என வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

டேய் சாஸ்திரி இது M16 அல்ல MI6 ( Military Intelligence, Section 6) , [...]

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

Nice pair i think and manmadhan ,saravana,CCV, காற்றின் மொழி super ha irukkum my thalaivan str [...]

ஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]

இலங்கை பத்திரிகைகள்

English News