ilakkiyainfo

ilakkiyainfo

உலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்!

உலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்!
June 18
03:02 2018

”போர் கலையின் உச்சமே எதிரியுடன் போர் செய்யாமலேயே அவனை வெல்வதுதான்” என்ற போரின் தத்துவத்தை கி.மு. 544-இல் தனது போர் கலை என்ற நூலில் கூறியிருக்கிறார் சீனாவின் புகழ்பெற்ற போர் தளபதி சன் சூ.

இதைத்தான் தமிழில் ‘போர் கலை பழகு’ என சுட்டியிருக்கின்றனர். இந்த பொன்மொழி தற்போது சிங்கப்பூரில் நடந்து முடிந்த டெனால்டு டிரம்ப் – கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தைக்கு மிகவும் பொருந்தும். மூன்று மாதங்களுக்கு முன்பு வரை வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர்சூழல் உச்சத்தை தொட்டது.

kim trump  உலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்! kim trump

”குள்ள பயல், அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது” என டிரம்ப் சொன்னார். பதிலுக்கு கிம், ”மனநிலை பாதிக்கப்பட்ட அமெரிக்க கிழவனை வழிக்கு கொண்டுவருவேன்” என்று சபதமிட்டார்.

”அணுகுண்டுக்கான பட்டன் எனது டேபிள் மீது உள்ளது அமுக்கினால் அமெரிக்காவின் ஒரு பகுதி அழிந்துவிடும்” என கிம் சொல்ல ”எனது டேபிள் மீது பெரிய பட்டன் உள்ளது அமுக்கினால் வடகொரியா தரைமட்டமாகிவிடும்” என டிரம்ப் பதிலடி தர இருநாட்டு அதிபர்களின் சண்டை கேலிக்கூத்தாகி போனது.

திடீர் திருப்பமாக எல்லாம் மறந்து சிங்கப்பூரில் இருவரும் கட்டியணைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளனர். 68 ஆண்டுகால பகை மெல்ல அமைதிக்கு திரும்பியிருக்கிறது என்றால் எவ்வளவு பெரிய மாற்றத்தை உலகம் சந்தித்திருக்கிறது. இரு நாடுகளுக்கு போர் மூண்டிருந்தால் நிச்சயம் அது மூன்றாம் உலக போராக மாறியிருக்கும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனி போல கொரியா போரினால் வடகொரியா, தென்கொரியா என இரண்டாக உடைந்தது.

வடகொரியா சோவியத் ரஷ்யா ஆதரவுடன் கம்யூனிஸ்ட் நாடாக மாறியது. தென்கொரியா அமெரிக்காவின் ஆதரவுடன் ஜனநாயக ஆட்சி அமைத்தது. சோவியத் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடந்த பனிப்போர் கொரிய தீபகற்பத்தில் எதிரொலித்தது. ரஷ்யாவும், சீனாவும் வடகொரியாவுக்கு பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை செய்துவருகின்றன.

உலகில் ஆதிக்கம் செலுத்துவது யார் அமெரிக்காவா சோவியத் யூனியனா என்ற நிலையில் நடந்த பனிப்போரில் சோவியத் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி மாறிவிட சோவியத் யூனியன் சிதறிபோனது.

அதன் பின்னர் அமெரிக்கா உலகின் ஆதிக்கம் மிக்க வலிமையான நாடாக மாறியது. ராணுவம், பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், விண்வெளி, ஹாலிவுட் சினிமா என உலகின் முதன்மை நாடாக மாறிவிட்டது.

உலக போலீஸ்காரன் என வர்ணிக்கப்பட்டது அமெரிக்கா. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்க உலகின் உச்ச வல்லரசாக வலம் வந்தது. தனது அதிகாரத்தை பொருளாதார நலனுக்காக பயன்படுத்திக்கொண்டது. சோவியத் ரஷ்யா, சீனா, வியட்நாம், வடகொரியா, கியூபா, ஆப்கானிஸ்தான் போன்ற கம்யூனிஸ நாடுகளுக்கு எதிராக செயல்பட்டது அமெரிக்கா.

kim - xi ping cheers  உலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்! kim xi ping cheers

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் – சீன அதிபர் ஸி ஜின் பிங்

லத்தீன் அமெரிக்க நாடுகளில் பல உள்நாட்டுப் பிரச்சினைகளை ஏற்படுத்தியது. உலகின் பெட்ரோல் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் அமைப்பை பலவீனப்படுத்தியது. பெட்ரோல் உற்பத்தி நாடுகள் மீது போர் நடத்தி தனக்கு ஆதரவான அரசை அமைத்துக்கொண்டது.

இன்னொருபுறம் செர்பியா, ஆப்கானிஸ்தான், சூடான், ஈராக், லிபியா, சிரியா, நாடுகளில் போர் மூலம் தனக்கு ஆதரவான அரசை அமைத்தது. 1972 இந்தியா பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக போர்கப்பலை வங்காள விரிகுடாவில் நிறுத்தியது அமெரிக்கா.

சோவியத் ரஸ்யா இந்தியாவிற்கு உதவியாக நீர்மூழ்கி கப்பலை அனுப்பிதோடு, அமெரிக்காவை எச்சரித்தது. ஐநா சாபையில் இந்தியாவிற்காக அதரவு குரல் எழுப்பியது.

அப்போது சோவியத் ரஸ்யா அதரவு இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா உடைந்திருக்கும். இப்படிப்பட்ட அமெரிக்காதான் கொரிய தீபகற்பத்தில் தென்கொரியா, ஜப்பான் நாடுகளின் ஆதரவுடன் 68 ஆண்டுகளாக போர் பதற்றத்தை ஏற்படுத்தி வந்தது.

சோவியத் ரஷ்யா சிதைவுக்கு பின்னர் உலகில் அமெரிக்காவுக்கு எதிரான வலிமையான நாடாக மாறிவரும் சீனா கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவின் ராணுவ ஆதிகத்தை விரும்பவில்லை.

அதனால் சித்தாந்த ரீதியாகவும் அமெரிக்காவின் எதிரி நாடு என்ற வகையிலும் வடகொரியாவை ஆதரிக்கிறது. பொருளாதார உதவிகளை செய்து வருகின்றது.

இன்று உலகின் உச்ச வலிமை நாடாக இருந்து வரும் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் நடக்கும் பனிப்போர் களமாக வடகொரியா இருந்துவருகிறது. சுருக்கமாக சொன்னால் தென்கொரியா அமெரிக்காவின் அடியாள் என்றால் வடகொரியா சீனாவின் அடியாள் அவ்வளவுதான்.

இப்போது வடகொரியாவின் கோரிக்கை என்பது தம் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை நீக்கவேண்டும். தென் கொரியாவில் ராணுவத்தை நிறுத்தி போர்சூழலை ஏற்படுத்தி வரும் அமெரிக்கா அதை வாபஸ் பெறவேண்டும்.

ஆனால் அமெரிக்காவோ வடகொரியாவால் தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் ஆபத்து உள்ளது. இருநாடுகள் பாகாப்புக்காகத்தான் அமெரிக்கா ராணுவம் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது என்கிறது.

இருந்தும் அமெரிக்காவால் நேரடியாக வடகொரியா மீது போர்தொடுக்க முடியவில்லை. காரணம் ரஷ்யாவும், சீனாவும் வடகொரியாவுக்கு பக்கபலமாக இருப்பதுதான்.
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????  உலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்! america south korean soldiers Copy

தென்கொரிய ராணுவ வீரர்களுடன் அமெரிக்க ராணுவ வீரர்கள்

இப்போது வரலாறு மாறிவிட்டது. இத்தனை ஆண்டுகளாக வடகொரியாவை மிரட்டி வந்த அமெரிக்கா, வடகொரியா அணுகுண்டு மிரட்டல் மூலம் பயந்து தான் போய் விட்டது.

என்னதான் எதிரி நாட்டை அழித்தாலும் தனது நாட்டில் ஒரு பகுதி அழிந்துபோக எந்த நாடுதான் விரும்பும். அந்த நிலைதான் அமெரிக்காவுக்கும். அமெரிக்கா வரலாற்றில் எந்த ஒரு நாடும் இப்படி நேரடியாக போர் மிரட்டலை விட்டதில்லை.

அடுத்தடுத்த அணுகுண்டு சோதனை, ஹைட்ரஜன் குண்டு என்ற வடகொரியாவின் ராணுவ வலிமை அமெரிக்காவை கதிகலங்க வைத்துவிட்டது. இத்தனை ஆண்டு அமெரிக்கா போரில் தனது நாட்டிற்கு எந்த ஆபத்தும் இல்லாத அளவில்தான் போர் நடவடிக்கையில் ஈடுபட்டது.

இப்போது வடகொரியாவிடம் அமெரிக்கா பின்வாங்கியதை அமெரிக்க பத்திரிக்கைகள் தெளிவாக வெளியிட்டன. அதனால் தான் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை விஷயத்தில் கூட அமெரிக்க பத்திரிக்கைகளுக்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிபாடுத்தான் இனி அணுகுண்டு அபாயமில்லை நிம்மதியாக தூங்கலாம் என டிரம்ப் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தியது வரலாற்றின் திருப்புமுனை. அமெரிக்காவை பொறுத்தவரை இரண்டு அணுகுமுறைகள் பயன்படுத்தும். ஒன்று பலவீனமான நாடுகளை போர் செய்து தனது அதிகாரத்திற்குள் கொண்டு வந்துவிடும்.

இரண்டு பலமான நாடுகள் என்றால் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துவிடும். இப்படிதான் 1972-இல் அமெரிக்க அதிபர் ரிச்சர்டு நிக்ஸன் சீனத் தலைவர் மாசே துங்வுடன் பேச்சுவார்த்தை நடத்தனார்.

1986-இல் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் சோவியத் ரஷ்யா அதிபர் மிகையில் கோர்பச்சேவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். 2007-ஆம் ஆண்டு பராக் ஒபாமா இதே வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரானார். அமெரிக்க செனட் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆக டிரம்ப் கிம் சிங்கப்பூர் பேச்சுவார்த்தையும் இப்படிபட்டதுதான்.

அணுகுண்டுகள், ஹைட்ரஜன் குண்டுகளை பயன்படுத்தினால் அதன் விளைவு எப்படியிருக்கும் என்பது இயற்பியல் பாடத்தில் பட்டம் பெற்ற கிம் ஜாங் உன்னுக்கு தெரியாமலில்லை.

சீனா, தென்கொரியா, ஜப்பான் போல பொருளாதார ரீதியாக முன்னேற தடையாக இருந்துவருவது வடகொரியா மீதான பொருளாதார தடை. அதை நீக்க அமெரிக்காவுடன் பேசுவதை தவிர வழியே இல்லை என்று முடிவுக்கு வந்தார்.

தனது தாத்தா கிம் இல் சுங் தந்தை கிம் ஜாங் இல் போன்று இல்லாமல் மாறுபட்டவர் கிம். என்னதான் அமெரிக்கவின் எதிரியாக இருந்தாலும் அமெரிக்காவின் கால்பந்து வீரர்களின் ரசிகர்.

அவர்களுடன் இன்னும் நட்புணர்வோடு பழகிவருபவர். வடகொரியாவின் ராணுவ வலிமையை அதிகரித்தாலும் அதன் முதல் கட்டமாக தென்கொரியாவுடன் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி ரஷ்யா, சீனாவுடன் ஆதரவை பெற்றது தான் கிம் அயல்நாட்டு கொள்கையின் தெளிவு.

இந்த பேச்சுவார்த்தை மூலம் ஆசிய நாடுகளில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு முடிவு ஏற்பட்டுள்ளது. கொரியா தீபகற்பத்தில் தற்காலிக அமைதி ஏற்பட்டுள்ளது. இதை தனிமனிதனாக கிம் ஜாங் உன் சாதனையாக வடகொரியா அறிவித்துள்ளது.

maxresdefault - Copy_1  உலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்! maxresdefault Copy 1

வடகொரியா – தென்கொரியா எல்லை

இன்னொருபுறம் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஆசியாவில் அமெரிக்க ஆதிக்கம் குறைந்து வருவதும் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதும் இப்போதல்ல. இலங்கை உள்நாட்டு போரில் சீனா பெரிய அளவில் சதி செய்தது.

அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்கிய விடுதலை புலிகளை வீழ்த்த சீனாவின் ஆதரவை பெற்றது ராஜபக்சே அரசு. இலங்கை சீனாவுடன் நெருங்கியதும் அதன் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டதும்  இரண்டு நாடுகளுக்கும் பௌத்த மதம் இணைப்பாக இருந்தது. தெற்காசியாவில் மறிய வல்லரசு அதிகாரத்தில் ஈழப்போராட்டம் அழித்தொழிக்கப்பட்டது. இந்தியாவும் சீனாவை பின்பற்றி இலங்கைக்கு உதவியது.

இந்த சிங்கப்பூர் பேச்சுவார்த்தை கூட நிரந்தரமான தீர்வு எதுவும் தரவில்லை. வெளியிடப்பட்டிருக்கும் கூட்டறிக்கையில் விரிவான தகவல் இல்லை. ஆனாலும் ஒரு சமாதான பேச்சுவார்த்தை வெற்றி பெற்றிருக்கிறது.

ஆக இனி எல்லாம் ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம்தான். ஆப்பிரிக்க கண்டத்தை ஏற்கனவே வளைத்துவிட்டது சீனா. பட்டு சாலை, கண்டம் தாண்டிய ரயில் போக்குவரத்து மூலம் ஐரோப்பிய நாடுகளுடன் நட்பு பாராட்டி வருகிறது. ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

எனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]

டேய் சாஸ்திரி இது M16 அல்ல MI6 ( Military Intelligence, Section 6) , [...]

Pon

ஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

இலங்கை பத்திரிகைகள்

English News