ilakkiyainfo

ilakkiyainfo

உல்­லாசம் அனு­­ப­விக்க இடை­யூறாக இருந்த இரண்டரை வயதுக் குழந்தை கள்­ளக்­கா­த­லர்­களால் கொலை

உல்­லாசம் அனு­­ப­விக்க இடை­யூறாக இருந்த  இரண்டரை வயதுக்   குழந்தை கள்­ளக்­கா­த­லர்­களால் கொலை
January 10
10:43 2017

உல்­லாசம் அனு­ப­விக்­க இடை­யூ­றாக இருந்த இரண்­டரை வயது குழந்­தையை தண்ணீர் தொட்­டிக்குள் வீசி கொன்ற ஜோடியை பொலிஸார் கைது செய்­துள்ள சம்­ப­வ­மொன்று தமி­­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தமி­ழ­கத்தில் கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் முஹமது அலி. தள்ளுவண்டியில் நூடுல்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் இவரது முதல் மனைவி ஆஷாவுக்கும் இரண்டரை வயதில் ஆஷா என்ற பெண் குழந்தை இருந்தது.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர்கள் பிரிந்து விட்டனர். குழந்தை ஆஷா அவரது தந்தையிடம் வளர்ந்து வந்தது.

இதனையடுத்து முஹமது அலி வேலூரைச் சேர்ந்த சகீலா பானுவை இர­ண்­டா­வது திருமணம் செய்தார். இந் நிலையில் கடந்த 3ஆம் திகதி குழந்தை ஆஷா திடீரென மாயமானது.

உறவினர்கள் பல இடங்களிலும் குழந்தையை தேடி அலைந்தனர். அப்போது முஹமது அலி வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை சடலமாக மிதந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலி­ஸார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். ஆய்வில் குழந்தை கழுத்தை நெறித்து கொன்று பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் வீசப்பட்டமை தெரியவந்தது.

குழந்தை சகிலா பானு இருந்தபோதுதான் கொல்லப்பட்டமை என்பதால் பொலி­ஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சகிலா பானுவும் அவரது கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்று தண்ணீர் தொட்டிக்குள் வீசியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து சகிலா பானுவையும் அவரது கள்ளக்காதலன் பூவராக மூர்த்தியையும் பொலி­ஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சகிலா பானுவுக்கும் பூவராக மூர்த்திக்கும் கடந்த 2 மாதங்களாக கள்ளக்காதல் இருந்துள்ளது.

முஹமது அலி வியாபாரத்துக்கு வெளியே சென்ற பின்னர் இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதற்கு குழந்தை ஆஷா இடையூறாக
இருந்துள்ளது.

கடந்த 3ஆம் திகதி சகிலா பானு வீட்டுக்­குச் சென்ற பூவராக மூர்த்தி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது குழந்தை ஆஷா சத்தம் போட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பூவராக மூர்த்தி குழந்தை ஆஷாவை கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.

பின்னர் யாருக்கும் சந்தேகம் வராது என நினைத்து இருவரும் சேர்ந்து குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசியுள்ளனர். இதனை வாக்கு மூலமா கவும் பூவராகமூர்த்தி பொலி­ஸா­ரி­டம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் இரண்டரை வயது குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2017
M T W T F S S
« Feb    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

நாட்டில போர் நடந்துகொண்டிருந்து போது தமிழக சினிமாக்கார்களும், போலி தமிழக சில்லறை அரசியல்வாதிகளான நெடுமாறன், வைகோ, சீமான்: திருமாவளவன்,தியாகு.தாமரை, .... [...]

Onb

Masha allah arumauyana pathiladi...senkodi pontra moolai illathavarkal satru sinthika vendum [...]

யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை பதிப்புரிமை பெற்றது. அனுமதியின்றி பகிர்துவது,. நகலெடுப்பது இந்திய பதிப்புரிமை சட்டப்படி குற்றம். எனவே இந்த [...]

எனக்கு இந்த வேண்டும்பு, த்தகம் எங்கு கிடைக்கும். [...]

Sumathiran M.P is a traitor, he want only all tamils convert to Christian. that also [...]

இலங்கை பத்திரிகைகள்

English News