தமிழகத்தில், எஜமானரை கொத்த வந்த பாம்பை அவருடைய வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறி கொன்ற சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கோவை ஒத்தகால் மண்டபம் அருகே உள்ள பூங்காநகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயியான இவர், வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக தனது நண்பருடன் சென்றார். அப்போது, அவர் வளர்க்கும் 3 நாய்களும் உடன் சென்றன.

82623018_1254683548057743_7023773131131060224_n எஜமானரை குறிவைத்த பாம்பை கடித்துக் குதறிய நாய்கள்..! எஜமானரை குறிவைத்த பாம்பை கடித்துக் குதறிய நாய்கள்..! 82623018 1254683548057743 7023773131131060224 nஇவர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென வழியில் 6 அடி நீளமுள்ள கொடிய வி‌ஷம்கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ராமலிங்கத்தை நோக்கி வந்தது. இதைப் பார்த்து ராமலிங்கமும் அவருடைய நண்பரும் அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது 3 நாய்களும், பாம்பால் தனது எஜமானருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து பாம்பை நோக்கி சீறிப் பாய்ந்தன. பின்னர், பாம்பை கடித்து குதறிக் கொன்றன. இந்தக் காட்சியைம் ராமலிங்கத்தின் நண்பர் செல்போனில் வீடியோ எடுத்தார்.

தனது எஜமானுக்கு ஆபத்து என்றதும் துரிதமாக செயல்பட்ட நாய்கள், பாம்பை கடித்துக் குதறி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.