ilakkiyainfo

ilakkiyainfo

எடப்பாடி ‘எக்ஸ்க்ளூசிவ்’ பதில்கள்: ரஜினி – கமல் ‘அட்டாக்’, 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்?

எடப்பாடி ‘எக்ஸ்க்ளூசிவ்’ பதில்கள்: ரஜினி – கமல் ‘அட்டாக்’, 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்?
November 28
18:49 2019

நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் என்று எடுத்துக்கொண்டால், அதில் முதலாவது வருகிறவர், இரண்டாவது வருகிறவர் என்று ஓடவிட்டுத்தானே கண்டுபிடிக்கிறோம்.

எடப்பாடி

”சார், முதலமைச்சர் போர்டுடன் போட்டோ எடுக்கவேண்டும்” என்று புகைப்படக்காரர் கேட்க, “நன்றாக எடுங்கள்” என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உதவியாளரை அழைத்து தன் டேபிளில் இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை முதலமைச்சர் என்கிற போர்டுக்கு இருபக்கமும் வைக்கச் சொல்லிவிட்டு, “இப்போது எடுங்கள். நான் முதலமைச்சரே இல்லை. அவர்கள் இருவரும்தான் உண்மையான முதலமைச்சர்கள். நான், பணியாள்” என்று சொல்லியபடி நிமிர்ந்து உட்கார்ந்தார்.

கொடுத்த நேரத்தைத் தாண்டி கேள்விக் கணைகளை நாம் தொடுத்துக்கொண்டேயிருக்க, முதல்வரும் ஆச்சர்யம், பெருமை என உணர்வுக் கலவையாய் பதில்களைக் கொட்டிக்கொண்டே இருந்தார். இடையிடையே, “சார் நேரமாகி விட்டது… வெளியில் வேறு வி.ஐ.பி-க்கள் வெயிட்டிங்” என்று உதவியாளர்கள் குறுக்கிட்டதெல்லாம் அவருடைய கவனத்தைப் பெறவே இல்லை.

“ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது குழந்தைகளுக்கு அதிக சுமை கொடுப்பதாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் ஒரு கருத்து இருக்கிறதே… உங்கள் கருத்து என்ன?

நீங்கள், நான் படித்த காலத்தில் ஒன்றாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு எல்லாவற்றிலுமே நன்றாகப் படிக்காதவர்களை ஃபெயில் செய்வார்கள்.

அப்போது இருந்த ஸ்டாண்டர்டு என்ன… இப்போது இருக்கும் ஸ்டாண்டர்டு என்ன? ஒரு குழந்தையின் கல்வித்தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது? தரத்தை எப்படி ஒப்பீடு செய்வது? எட்டாம் வகுப்பு வரை அப்படியே சென்றுவிட்டு, திடீரென பொதுத்தேர்வுக்காகப் படி என்றால், எப்படிப் படிக்கும்?

நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் என்று எடுத்துக்கொண்டால், அதில் முதலாவது வருகிறவர், இரண்டாவது வருகிறவர் என்று ஓடவிட்டுத்தானே கண்டுபிடிக்கிறோம். எட்டாம் வகுப்புக்கு வரும்போது இரண்டாம் வகுப்பு படிக்கும் தரத்தில் இருந்தால், மேற்கொண்டு எப்படி புத்திசாலி மாணவராக உருவாக முடியும்? நாமே அவர்களுக்கு துரோகம் இழைத்த மாதிரி ஆகிவிடும்.

பொதுத்தேர்வுகள் நடந்தால்தான் கல்வித்தரத்தை கண்டுபிடிக்க முடியும். அப்போதுதான் தேவைப்படும் கல்விக்கான பயிற்சியை ஆசிரியரால் தர முடியும். மக்களுக்கு குவாலிட்டியான கல்வி கொடுக்கவேண்டும் என்கிற எண்ணத்தில்தான் அந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

“உங்கள் பொழுதுபோக்கு என்ன… சினிமாவெல்லாம் பார்ப்பீர்களா?’’

“தியேட்டருக்குப் போய் இருபது ஆண்டுகள் ஆகின்றன.”

‘`ரஜினியின்மீது இப்போது திடீர்த்தாக்குதல் நடத்த ஆரம்பித்திருக்கிறீர்கள். அ.தி.மு.க-வின் ‘நமது அம்மா’வில்கூட அவர்களைத் தாக்கி அதிகம் எழுதப்படுகிறது. ‘சபாஷ், சரியான போட்டி’ என்று சொல்லலாமா?’’

“திடீர்த்தாக்குதலா… அப்படியெல்லாம் ஏதுமில்லை. எங்கள் அரசாங்கத்தை, கட்சியை அவர்கள் விமர்சனம் செய்கிறபோது, பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்!’’

“ ‘2021 தேர்தலில் அரசியலில், தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை 100க்கு 100 சதவிகிதம் நிகழ்த்திக்காட்டுவார்கள்’ என நடிகர் ரஜினி சொல்கிறாரே?’’

“நடிகர் ரஜினி சொல்வது என்ன அதிசயம், என்ன அற்புதம் எனத் தெரியவில்லை. முதலில் அவர் கட்சியை ஆரம்பிக்கட்டும், பிறகு பேசுகிறேன்.’’

“ரஜினி திரும்பத் திரும்ப ‘தமிழக அரசியலில் வெற்றிடம்’ இருக்கிறது என்கிறார். அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“அவர் எதை வெற்றிடம் என்று சொல்கிறார் என்றே தெரியவில்லை. ரஜினி கட்சியைத் தொடங்கினால்தானே முழுமையான விளக்கத்தைத் தெரிந்துகொள்ளமுடியும். அரசியல் என்றால் நாட்டுநடப்பு தெரிந்திருக்க வேண்டும்; மக்களுடைய எண்ணங்கள் புரிந்திருக்க வேண்டும்; எல்லாவகையிலும் தாக்குப்பிடித்து மக்களுடைய தேவைகளுக்கு ஏற்ப சேவை புரியவேண்டும். அதற்காகத்தான் அரசியல் கட்சிகளே!

Edappadi K. Palaniswami

சுயநலத்துக் காக அரசியல் கட்சிகளைத் தொடங்கினால் வெற்றி கிடைக்காது. இதையெல்லாம் திசைதிருப்பத்தான் ‘வெற்றிடம்’ என்று பேசிவருகிறார்கள்.’’

“கமலிடமிருந்து அடிக்கடி உங்களை நோக்கி அம்புகள் பாய்கின்றனவே?’’

“அவர் நடித்த ஒரு படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை வந்தபோது, ‘நாட்டை விட்டே வெளியேறுவேன்’ என்றார். அப்படிச் சொன்னவர், தான் எப்படி அரசியலில் சாதிக்கப்போகிறோம் என்பதைப் பற்றி முதலில் யோசிக்கட்டும். பிறகு, அடுத்தவர்மீது அம்பு விடட்டும்.’’

“சீனியர் அமைச்சர்கள் பலரின் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் அடுக்கப்படுகின்றனவே?’’

“தி.மு.க ஆட்சிக்காலத்தில் இருந்த அமைச்சர்கள் ஊழல் செய்ததாக அம்மா முதல்வராக இருந்தபோது வழக்கு போட்டார்கள். அதையெல்லாம் அவர்கள் இன்றும் சந்தித்து வருகிறார்கள். அதையெல்லாம் திசைதிருப்ப எங்கள்மீது பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்துகிறார்கள். அனைத்தையும் சட்டப்படி சந்திப்போம்.’’

“உங்கள் ஆட்சி இன்று போய்விடும்… நாளை போய்விடும்… என்று விமர்சிக்கப்பட்ட சூழலில், மூன்றாவது வருடத்தை நெருங்கிவிட்டீர்கள். அதன் சூட்சமம் என்ன?’’

“ஆரம்பத்திலேயே என்னைப் பற்றித் தப்புக்கணக்குப் போட்டுவிட்டார்கள். அரசியலில் அழுத்தம் கொடுத்தால் நான் போய்விடுவேன்.

ஆட்சியை வழிநடத்தமுடியாது என்று எதிர்பார்த்தார்கள். நான் 1989-ல் சேவல் சின்னத்தில் நின்று எம்.எல்.ஏ ஆனேன். ஸ்டாலினும் அப்போதுதான் முதல்முறையாக எம்.எல்.ஏ ஆனார்.

அவர் தன்னுடைய அப்பாவின் பின்புலத்தோடு அரசியலுக்குள் வந்து பல பதவிகளைப் பெற்றார். இப்போது முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு எதிர் அரசியலை மட்டுமே செய்துவருகிறார்.

ஆனால் சாதாரண விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த நான் முதல்வர் பதவியில் அமர்ந்து மூன்று ஆண்டுகள் நெருங்கிவிட்டன.

அரசியலில் என்னென்ன கஷ்டங்கள் இருக்கின்றன என்பதை அனுபவத்தின் மூலமாக உணர்ந்தவன் நான். மக்களோடு மக்களாக இருந்து, அவர்களின் கஷ்டத்தில் பங்குகொண்டு துன்பங்களை துயரங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். மக்களின நம்பிக்கையைப் பெறுவது எளிதான காரியமல்ல.

அந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன். பழைய நினைவுகள், அனுபவங்களை நினைத்துப் பார்க்கிறேன். அதற்குத் தகுந்தாற்போல ஆட்சியைக் கொண்டு செல்கிறேன். மக்களிடமும் வரவேற்பு கிடைக்கிறது.’’

“ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தீர்களே?’’

“2016 சட்டமன்றத் தேர்தலின்போது அமைத்த எதிர்க்கட்சிக் கூட்டணி தமிழக நாடாளுமன்றத் தேர்தலிலும் அப்படியே தொடர்ந்தது. அவர்கள் மோடி மீதான எதிர்மறை விமர்சனத்தை மக்கள் மனதில் விதைத்துவிட்டார்கள்.

அதற்கு சரியான முறையில் பா.ஜ.க தரப்பிலிருந்து விளக்கம் தரப்படவில்லை. அதுதான் எங்கள் வெற்றியை பாதித்தது. ஆனால், அதற்குப் பிறகு நடந்த வேலூர் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தலில் வெறும் எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்றுள்ளோம். இந்த வாக்குகளைக் கணக்கிட்டால், எங்களின் பலம் உங்களுக்குத் தெரியவரும்.’’

“தமிழகத்தில் ‘கோ பேக் மோடி’ என்று அரசியல்ரீதியில் மோடியைத் தாக்குவதாகச் சொல்கிறீர்கள். உண்மையிலேயே தமிழக மக்களுக்கு அவரிடமிருந்து நல்ல திட்டங்களைக் கேட்டுப் பெற்றுள்ளீர்களா?’’

“ ‘கோ பேக் மோடி’ என்று தி.மு.க-தான் சொல்லிவருகிறது. அதையெல்லாம் விஞ்சி தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்குப் பற்றுதல் இருக்கிற காரணத்தினால்தான் எத்தனையோ மாநிலங்கள் இருந்தும் சீன அதிபரைத் தமிழகத்துக்கு அழைத்துவந்து பெருமை சேர்த்திருக்கிறார். இங்கிருப்பவர்கள் சுயநலம் கொண்டவர்கள். குறுகிய எண்ணம் கொண்டவர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு பிரதமர் மோடியின் புகழைக் குலைக்கும் வகையில் நடந்துகொள்கிறார்கள்.’’

“அரசியல் விமர்சனங்கள் இருக்கட்டும். உண்மையிலேயே தமிழக மக்களுக்கு ஏதாவது நல்ல திட்டங்களைத் தந்திருக்கிறாரா மோடி?’’

“மாமல்லபுரம், உலக சுற்றுலாத் தலம். அதை அழகுபடுத்தினால், உலக அளவில் தமிழகத்தின் மதிப்பு உயரும். இதை உணர்ந்து, ‘தேவையான நிதி தருகிறேன். மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக மாமல்லபுரத்தை மாற்றுங்கள்’ என்று ஆக்கபூர்வமாக உதவியுள்ளார்.

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நிதியை வழங்குகிறார். கோதாவரி காவிரி இணைப்புத் திட்டத்தைக் கொண்டுவந்து போதிய தண்ணீர் ஆதாரத்தைப் பெருக்குவதில் ஆர்வமாக இருக்கிறார்.

மாயனூர் அருகே காவிரியுடன் கோதாவரியை இணைக்கவிருக்கி றோம். இதன் மூலமாகத் தென்மாவட்டங்களும் வளம்பெறும். நிறைய சாலை வசதிகள், தமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவக் கல்லூரிகள் என்று உதவிகளைச் செய்துகொண்டேதான் இருக்கிறார்.’’

“மத்திய அரசு என்ன திட்டம் தந்தது என்று கேட்கிறீர்களே… சென்னை – சேலம் எட்டுவழி (பசுமைச் சாலை) திட்டத்துக்காகப் பத்தாயிரம் கோடி ரூபாய் தந்தார்கள். உலகத்தரத்துக்கு இணையான சாலை கொடுத்தார்கள். ஒரு முதல்வர் நினைத்தால் மட்டும் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது. உங்களைப் போனற பத்திரிகைகளும் துணை நிற்க வேண்டு மல்லவா? ஆனால், சில பத்திரிகைகளும் அரசியல் கட்சித் தலைவர்களும் தேவையில்லாத கருத்து களை மக்களிடம் தொடர்ந்து திணித்து, திட்டமே முடங்கும் அளவுக்கு ஆகிக்கிடக்கிறது.’’

‘`வேறு என்ன திட்டங்களையெல்லாம் கொடுத்துள்ளது மத்திய அரசு?’’

“எட்டுவழிச் சாலை பிரச்னைக்குப் பிறகு எங்குமே நிலத்தைக் கையகப்படுத்த முடிவில்லை. இதனால், நான்கு திட்டங்களுக்கான டெண்டரையே மத்திய அரசு கேன்சல் செய்துவிட்டது.

புதிய புதிய தொழில்கள் வருகின்றன. அவையெல்லாம் திறம்பட இயங்க வேண்டுமானால், தேவையான மின்சாரத்தைத் தடையில்லாமல் தரவேண்டும். இப்போதுள்ள மின் உற்பத்தியை அதிகப்படுத்தினால்தான் அது சாத்தியம்.

மின்பாதை அமைத்தால்தான் மின்சாரத்தைக் கொண்டு போகமுடியும். அதற்கு டவர் அமைக்கப் போனால், விவசாயம் பாதிக்கும் என்கிறார்கள். தி.மு.க ஆட்சிக் காலத்தில் மின்கோபுரம் போட்டார்கள். அப்போது எதிர்ப்புகளை யாரும் காட்டவில்லை.’’

“உங்கள் மகன் மிதுன் அரசியலுக்கு வருவாரா?”

“மிதுன், அரசியலில் பெரிதாக எந்தப் பதவியிலும் இல்லை. இளைஞர் பாசறை உருவாக்கியபோது, ‘உங்கள் மகன்/மகள்கள் எல்லாம் பாசறையில் இருக்கவேண்டும்.

அப்போதுதான், மற்ற தொண்டர்களுக்கும் ஆர்வம் வரும். தங்கள் வாரிசுகளை அதில் சேர்ப்பார்கள்’ என்று அம்மா சொன்னார். அதன்படி, எங்கள் கிராம இளைஞர் பாசறையில் துணைச் செயலாளராக இருக்கிறார். அவர் அரசியலில் ஈடுபடுகிறார், அதை வைத்து லாபம் பார்க்கிறார், இதற்காகவே வெளிநாடு செல்கிறார் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை.

‘`கடைசியாக ஒரு கேள்வி… 2021-ல் அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் யார்?’’

‘`இன்னும் அந்தக் கட்டத்துக்கு நாங்கள் போகவில்லை. இது தொண்டர்கள் நிறைந்த கட்சி. தொண்டர்களே ஆளுகிற கட்சி. அனைவரும் கூடித்தான் அதைப் பற்றி முடிவெடுப்போம்.’’

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News