ilakkiyainfo

ilakkiyainfo

எதிர்ப்புகளுக்கு மத்தியில் படேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோதி

எதிர்ப்புகளுக்கு மத்தியில் படேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோதி
October 31
07:44 2018

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உலகின் உயரமான சிலை இன்று பிரதமர் மோதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

‘ஒற்றுமைக்கான சிலை’ (Statue of Unity) என்று அழைக்கப்படும் அந்த 182 மீட்டர் உயர சிலை, குஜராத்தின் சர்தார் சரோவர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது.

சிலைக்கு எதிராக அந்த பகுதியை சேர்ந்த பழங்குடி இனமக்கள் பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், இன்று பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோதி திறந்து வைத்துள்ளார்.

உலகின் மிக உயரமான இந்த சிலை 3000கோடி செலவில் கட்டமைக்கப்பட்டது.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

இந்த சிலையை தேசத்துக்கு அர்பணிப்பதாக சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோதி தெரிவித்தார்

இந்த தினம், இந்திய வரலாற்றில் நினைவு வைத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பலர், இந்தியா போன்ற பல வேற்றுமைகள் நிறைந்த நாடு ஒற்றுமையாக இருக்க இயலாது என கருதினர்; ஆனால், சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியா ஒற்றுமையாக இருக்க இயலும் என்ற வழியை காட்டியவர் என்றும் அவர் தெரிவித்தார்.

_104109567_sardar  எதிர்ப்புகளுக்கு மத்தியில் படேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோதி 104109567 sardar

இந்திய சுதந்திரத்துக்கு பின் சண்டையிட்டுக் கொண்டிருந்த மாநிலங்களை ஒன்றிணைத்ததாக சர்தார் படேலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கட்டப்பட்டுள்ளது இந்த சிலை.

படேலின் இந்த வெண்கல சிலை அமைக்கும் பணி 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மேலும், இது பிரதமர் மோதிக்கு மிக நெருக்கமான திட்டமாக பார்க்கப்படுகிறது.

பட்டேல் சிலை: வலுக்கும் எதிர்ப்பு, கைது செய்யப்படும் பழங்குடிகள்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உலகின் உயரமான சிலை இன்று பிரதமர் மோதியால் திறந்து வைக்கப்படுகிறது.

அதே சமயம் `ஸ்டச்யூ ஆஃப் யூனிட்டி` (Statue of Unity) என்று அழைக்கப்படும் அந்த சிலையின் பிரம்மாண்ட திறப்பு விழாவுக்கு எதிராக போராடிய மக்களை போலிஸார் தடுத்து வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை இன்று பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோதியால் திறந்து வைக்கப்படவுள்ளது.

சிலையும், கைதும்

அந்த 182மீட்டர் உயர சிலை, சர்தார் சரோவர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. சிலையின் கட்டுமானாத்திற்கும், அதன் பிரம்மாண்ட திறப்பு விழாவிற்கும் உள்ளூர் பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சுமார் 90 பேர் போலிஸார் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவில்லை என்றும் பழங்குடியின தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

_104109138_ee8c8df8-a915-42e6-9a31-5ff356966aa7  எதிர்ப்புகளுக்கு மத்தியில் படேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோதி 104109138 ee8c8df8 a915 42e6 9a31 5ff356966aa7

ஆனால் சிலை அமைந்துள்ள நர்மதா மாவட்டத்தின் ஆட்சியிர் ஆர்.எஸ். நினாமா, இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என பிபிசி குஜராத்தி சேவையிடம் தெரிவித்தார்.

சிலை அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள 90 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பழங்குடியின தலைவர் ஆனந்த் மஸ்கயோன்கர் தெரிவிக்கிறார்.

இத்தனை பேர் போலிஸாரால் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை என தெரிவித்தார்.

அம்லெதா காவல் நிலையத்தில் ஐந்து பேர் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என அம்லெதா காவல் நிலையத்தின் பார்மார் பிபிசியின் குஜராத்தி சேவையிடம் தெரிவித்தார்.

அவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக எங்களுக்கு தகவல் வெளியானது என அதன் அடிப்படையில் அவர்களை தடுத்து வைத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

அழைப்புவிடுத்த பழங்குடிகள்

பிடிஎஸ் மற்றும் பிபிடி போன்ற நிறுவன்ங்கள் இந்த சிலை திறப்பு எதிராக உள்ளன எனவே அந்த நிறுவன ஊழியர்கள் 16 பேரை தடுத்து வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

இந்த சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பழங்குடியினர் முழு கடை அடைப்புக்கு அறிவிப்பு விடுத்திருந்தனர்.

அம்பாஜி முதல் உமர்கம் என்ற கிராமங்கள் அந்த கடையடைப்பில் பங்கேற்பதாக அறிவித்திருந்தது.

_104109140_3c0ba594-60b9-43fa-bc46-3a195334ae9f  எதிர்ப்புகளுக்கு மத்தியில் படேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோதி 104109140 3c0ba594 60b9 43fa bc46 3a195334ae9f

சிலை உள்ள பகுதியை சேர்ந்த மக்கள் சிலையின் கட்டுமானத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பாக இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய குஜாரத்தை சேர்ந்த சோட்டா உதய்பூ, பஞ்மஹால், வதோதரா மற்றும் நர்மதா நீரில் மூழ்கபோவதாகவும் அச்சுறுத்தினர்.

கரும்பு ஆலையை சேர்ந்த தொழிலாளிகள் தங்களுக்கு வழங்க வேண்டிய கூலியை வழங்க சொல்லி கரும்பு விவசாயிகள் போராடி வருகின்றனர்.

தங்கள் கரும்புகளை வாங்கிய ஆலைகள் கூலிகள் தரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

ஆலை நிர்வாகத்திடம் பல நாட்களாக தங்களுக்கு கூலி வழங்க கோரி வருகின்றனர்.

<

சிலையின் கட்டுமானம்

சிலையின் கட்டுமானம் முடிந்தவுடன் மாநில அரசால் நடத்தப்பட்ட`ஏக்தா யாத்ரா` என்ற பேரணிக்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த பேரணி குறித்து ஒட்டப்பட்ட சுவரோட்டிகளையும் பழங்குடியின மக்கள் கிழித்தெறிந்தனர்.

போஸ்டர்களுக்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்த பின், முக்கியமான மற்றும் வரலாற்று புகழ்மிக்க பழங்குடியின தலைவர் பிஸ்ராமுண்டாவுடன் பிரதமரும், முதல்வரும் இருப்பது போன்ற போஸ்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த சிலையின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணத்தை பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் என பழங்குடியின மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த சிலையை சுற்றியுள்ள 22 கிராமத்தின் உள்ள பழங்குடியினர் பிரதமர் மோதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதினர். அதில் சிலையை திறக்க வரும்போது மோதிக்கு தாங்கள் வரவேற்பளிக்க மாட்டோம் என்றும் தெரிவித்திருந்தனர்.

மேலும் உள்ளூர்வாசிகள் திறப்பு விழாவை புறக்கணிக்கவுள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News