ilakkiyainfo

ilakkiyainfo

எனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த ராஜபக் ஷ கூறுகிறார்

எனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது   – மஹிந்த ராஜபக் ஷ கூறுகிறார்
September 23
12:46 2018

நான் சர்­வா­தி­கா­ரி தான் – வடக்கில் தேர்­தலை நடத்­தினேன்

பொரு­ளா­தா­ரத்தை பாது­காப்­பதில் அர­சாங்கம் தோல்வி

தேர்­தலில் மாற்று அர­சை உரு­வாக்கப் போராட்டம்

சர்­வ­தேச நாடு­க­ளுடன் இணைந்து சதித்­திட்டம் தீட்­டு­வதில் தற்­போ­தைய அர­சாங்கம் சிறந்த அனு­ப­வ­சா­லி­யாக விளங்­கு­கின்­றது.

வேறு எந்­த­வொரு உலக நாடோ எம்மை வழி­ந­டத்த முடி­யாது. எனவே எனது அர­சியல் நட­வ­டிக்­கை­களை இந்­தி­யா­விற்கோ அல்­லது வேறு எந்­த­வொரு நாட்­டிற்கோ தீர்மா­னிக்க முடி­யாது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

நான் சர்­வா­தி­கா­ரிதான் . ஆனால் போர் முடிந்த பின்னர் பல எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தியில் வடக்கில் தேர்­தலை நடத்தி ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­தினேன்.

தேசிய அர­சாங்கம் இன்று தேர்­தலை நடத்­தாது நல்­லாட்சி குறித்துப் பேசி வரு­கின்­றது . அமெ­ரிக்க டொல­ருக்கு நிக­ராக ரூபாயில் ஏற்­பட்­டுள்ள பாதாள வீழ்ச்­சி­யினால் நாட்டில் பாரிய நிதி நெருக்­கடி ஏற்­பட்டு பொரு­ளா­தாரம் வீழ்ச்­சிக்­கண்­டுள்­ளது.

அர­சாங்­கத்தின் இய­லா­மையே அனைத்து வீழ்ச்­சி­க­ளுக்கும் கார­ண­மாகும் . எனவே மாற்று அர­சாங்கம் ஒன்று உரு­வாக தேர்­தலை வலி­யு­றுத்­திய போராட்­டத்தை முன்­னெ­டுப்போம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பு – விஜே­ராம மாவத்­தையில் அமைந்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் இல்­லத்தில் நேற்று சனிக்­கி­ழமை இடம்­பெற்ற விசேட ஊடக சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன் போது மஹிந்த ராஜ­பக்ஷ ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் தொடர்ந்தும் பேசு­கையில் ,

நாடு இன்று பாதா­ளத்தை நோக்கி செல்­கின்­றது. அனைத்து துறை­க­ளி­லுமே பாரிய வீழ்ச்சி நிலையே காணப்­ப­டு­கின்­றது.

தேசிய பொரு­ளா­தா­ரத்தின் மிகவும் மோச­மான நிலைமை தற்­போது வெளிப்­பட்­டுள்­ளது. டொலரின் பெறு­மதி வர­லாறு காணா­த­ள­வுக்கு அதி­க­ரித்­துள்­ளது. இதனால் நாடு பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டி­களை சந்­தித்­துள்­ளது.

டொலரின் பெறு­மதி நாளுக்கு நாள் அதி­க­ரிப்­ப­தனால் சர்­வ­தே­சத்தில் பெற்றுக் கொண்ட கடன்­க­ளுக்­கான தவ­ணைகள் மற்றும் வட்டி என பல்­வேறு வகை­யிலும் நாடு செலுத்தும் தொகை பன் மடங்­காக அதி­க­ரித்து விட்­டது.

2014 ஆம் ஆண்டு ஆட்­சியை கைய­ளிக்கும் போது நாட்டின் கடன் சுமை 7391 பில்­லி­ய­னாக காணப்­பட்­டது. ஆனால் கடந்த மூன்று ஆண்­டு­களில் தேசிய அர­சாங்கம் 11 ஆயிரம் பில்­லி­ய­னுக்கும் அதி­க­மான கடனைப் பெற்று அதனை செலுத்திக் கொள்ள முடி­யாது திண்­டா­டு­கின்­றது.

மறு­புறம் முத­லீட்­டா­ளர்கள் நாட்­டை­விட்டு வெளி­யே­று­கின்­றனர். பங்குச் சந்தை மற்றும் தேசிய வர்த்­தக நட­வ­டிக்­கைகள் அனைத்தும் ஸ்தம்­பிதம் அடைந்து நிதிச் சந்­தையில் ஒரு நம்­பிக்­கை­யற்ற தன்மை உரு­வா­கி­யுள்­ளது.

அர­சாங்­கத்தின் இய­லா­மையின் வெளிப்­பா­டா­கவும், நிர்­வாகச் சீர் கேடு­க­ளினால் ஏற்­பட்ட நிலை­மை­க­ளுமே இவை­யாகும். நாட்டை பாது­காப்­பதில் அர­சாங்கம் முழு­மை­யாக தோல்வி கண்­டுள்­ளது. இந்த நிலைமை பொரு­ளா­தார துறையில் மிகவும் மோச­மாக வெளிப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு இடை­யி­லான புரிந்­து­ணர்­வுகள் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளன.

தேசிய பிரச்­சி­னை­களில் தீர்­மா­னங்கள் எடுக்கும் போது இரு தரப்­புமே வௌ;வேறு திசை­களில் பய­ணிக்­கின்­றனர். இவ்­வா­றா­ன­தொரு நிலைமை நாட்டின் எதிர்­கா­லத்­திற்கு ஆரோக்­கி­ய­மாக அமை­யாது.

நாட்டை இந்த நெருக்­க­டி­யான நிலை­மையில் இருந்து மீட்க வேண்­டு­மாயின் வலு­வா­ன­தொரு தலை­மைத்­துவம் உரு­வாக்­கப்­பட வேண்டும். இந்த விட­யத்தில் தேர்தல் முக்­கி­ய­மா­ன­தொன்­றாகும்.

ஜன­நா­ய­கத்தை பாது­காப்­ப­தாக ஆட்­சிக்கு வந்த தேசிய அர­சாங்கம் மாகாண சபைத் தேர்­தலை நடத்­தாது ஒத்­தி­வைத்­துள்­ளது. நான் சர்­வா­தி­கா­ரிதான். ஆனால் 2009 ஆம் ஆண்டில் போர் நிறை­வ­டைந்­த­வுடன் வடக்கில் தேர்­தலை நடத்தி ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­தினேன்.

நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி வேகம் 7.5 வீத­மாக எமது ஆட்சி காலத்தில் பதி­வா­கி­யது. ஆனால் இன்று அனைத்­துமே தலை­கீ­ழா­கி­யுள்­ளன. எனவே மாற்று அர­சாங்­க­மொன்று ஆட்சி அதி­கா­ரத்தை பொறுப்­பேற்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்கா, ஜேர்மன் மற்றும் இந்­தியா உள்­ளிட்ட உலக நாடு­க­ளி­ட­மி­ருந்து நாட்டின் அபி­வி­ருத்­திக்­காக நிதி உத­வி­களை பெற்றுக் கொள்­வது ஒரு சாதா­ரண விட­ய­மாகும்.

ஆனால் அவ்­வாறு பெற்றுக் கொள்­கின்ற கடனை செலுத்த முடி­யாது திண்­டா­டு­கின்ற நிலைமை எமக்கு ஏற்­ப­ட­வில்லை. சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு இலங்கை மீது நம்­பிக்­கை­யற்ற நிலைமை தற்­போது உரு­வா­கி­யுள்­ளது. அர­சியல் ஸ்திர­மற்ற தன்­மையே இதற்கு பிர­தான கார­ண­மாகும்.

ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் கூட்­டணி அமைத்துக் கொண்­டுள்ள சுதந்­திரக் கட்­சி­யிடம் இனி எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இணைந்து செயற்­பட முடி­யாது. பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் எம்­மீது சுமத்­தப்­பட்­டாலும் அவை ஆதா­ர­மற்ற அர­சியல் நோக்­கங்கள் கொண்­ட­வை­யாகும்.

எனது மீள் அர­சியல் பிர­வேசம் தொடர்­பான அச்சம் கார­ண­மா­கவே எனக்­கெ­தி­ரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சர்வதேச நாடுகளுடன் இணைந்து சூழ்ச்சி செய்வதில் தேசிய அரசாங்கம் திறமையாக செயற்பட்டுள்ளது. எந்தவொரு வெளிநாடுகளின் வழிநடத்தலுடனும் செயற்பட வேண்டிய தேவை எமக்கு கிடையாது.

இந்திய விஜயம் கூட சிறப்பானதாகவே அமைந்தது. எமது அரசியல் நடவடிக்கைகளை அவர்கள் தீர்மானிக்க முடியாது.

வேட்பாளர் குறித்தும் எவ்விதமான விடயங்களையும் நான் குறிப்பிடவில்லை. ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக்ஷ ஒருவர் வேட்பாளர் பட்டியலில் இருக்கலாம் என்றே கூறினேன் எனத் தெரிவித்தார்..

லியோ நிரோஷ தர்ஷன்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News