ilakkiyainfo

ilakkiyainfo

எனது மூளைக்குள் இரும்புத் தகட்டைச் சொருகி என்னிடமுள்ள இரகசியங்களை பெற முயற்சித்தனர்- டான் தொலைக்­காட்சி பணிப்பாளரை தாக்­கிய சந்­தேக நபர் பொலி­ஸா­ரிடம் தெரி­விப்பு

எனது மூளைக்குள் இரும்புத் தகட்டைச் சொருகி  என்னிடமுள்ள இரகசியங்களை பெற முயற்சித்தனர்- டான் தொலைக்­காட்சி பணிப்பாளரை தாக்­கிய சந்­தேக நபர் பொலி­ஸா­ரிடம் தெரி­விப்பு
January 11
17:51 2018

 

யாழில் உள்ள டான் தனியார் தொலைக்­காட்சி நிலை­யத்தின் கலை­ய­கத்­துக்குள் கத்தி, பொல்­லுடன் நுழைந்து நிறு­வ­னத்தின் செய்திப் பணிப்­பாளர் தயா மாஸ்டர் மீது தாக்­குதல் நடத்­தி­ய­வரை எதிர்­வரும் 16ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு யாழ்ப்­பாணம் நீதிவான் நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.

யாழ்ப்­பாணம் வைத்­தி­ய­சாலை வீதியில் அமைந்­துள்ள குறித்த தொலைக்­காட்சி நிறு­வன கலை­ய­கத்­துக்கு திங்­கட்­கி­ழமை மாலை ஒருவர் அத்­து­மீறி நுழைந்து பணி­யி­லி­ருந்த செய்திப் பணிப்­பாளர் தயா மாஸ்டர் என அழைக்­கப்­படும் வே.தயா­நி­தியை தாக்­கினார்.

அவ்­வேளை அங்கு கூடிய நிறு­வன ஊழி­யர்கள் முதி­ய­வரை மடக்கிப் பிடித்து அவரை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­தனர். இத­னை­ய­டுத்து கைது செய்­யப்­பட்ட நப­ரிடம் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.

இதன் போது சந்­தேக நப­ரான முதி­யவர் மன­நிலை பாதிக்­கப்­பட்­டவர் போன்றே வாக்­கு­மூலம் வழங்­கி­ய­தாகப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

“எனது மூளைக்குள் இரும்புத் தகட்டைச் சொருகி குறித்த தொலைக்­காட்சி நிறு­வ­னத்­தினர் தன்­னி­ட­முள்ள இர­க­சி­யங்­களை பெற முயற்சித்­தனர் . என்­னிடம் கைபே­சி­யில்லை, எனது மூளைக்குள் மெம­ரிக்காட் உள்­ளது.

அதை தேவை­யான போது கைத்­தொ­லை­பே­சி­யாகப் பயன்­ப­டுத்­துவேன்” என அவர் விசா­ர­ணையின் போது கூறி­ய­தா­கவும், 20 வருடங்களுக்கு மேலாக ஐரோப்­பிய நாடு­களில் பணி­யாற்­றி­விட்டு நாடு திரும்­பிய குறித்த முதி­யவர் தற்­போது யாழ்.பிர­தான வீதியிலுள்ள அந்­தி­ம­கால சேவை நிறு­வ­னத்தில் பணி­யாற்­று­கிறார்” எனவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

முதி­ய­வரை யாழ்ப்­பாணம் நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­திய போது குறித்த நபர். மன­நிலை பாதிக்­கப்­பட்­டவர் போன்று நடந்­து­கொள்­கிறார் என நீதி­வா­னிடம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

“இத­னை­ய­டுத்து இந்த நபரின் செயற்­பா­டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News