ilakkiyainfo

ilakkiyainfo

என் மீது பொய் புகார் கூறுகிறார்கள் – மதுமிதா பேட்டி

என் மீது பொய் புகார் கூறுகிறார்கள் – மதுமிதா பேட்டி
August 22
19:37 2019

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெளியேறிய நடிகை மதுமிதா, என் மீது தொலைக்காட்சி நிறுவனம் பொய் புகார் கூறுகிறது என்று பேட்டியளித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருந்தனர்.

கடந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகென், மதுமிதா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

இவர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி திடீரென வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சி சட்டப்பிரிவு மேலாளர், நடிகை மதுமிதா மீது சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் மதுமிதா ஒப்பந்தப்படி 11 லட்சத்தி, 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள 42 நாட்களுக்கு பாக்கி பணம் தருவதாக கூறி இருந்ததாகவும் ஆனால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை மதுமிதா தொடர்பு கொண்டு இரண்டு நாட்களில் பணம் தரவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

201908221742500873_1_mashumitha-1._L_styvpf என் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி என் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி 201908221742500873 1 mashumitha 1

இதற்கு மதுமிதா மறுப்பு தெரிவித்து பேட்டியளித்துள்ளார். அதில், ‘திரைத்துறையில் இதுவரை என் மீது எந்த புகாரும் வந்ததில்லை.

நான் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் தற்கொலை மிரட்டல் கொடுக்கவில்லை. மீதி பணம் கேட்டேன்.

அவர்களும் தர சம்மதித்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் என் மீது ஏன் பொய் புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இது குறித்து கேட்க, தொலைக்காட்சி நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. தனியார் தொலைக்காட்சி நிறுவனமும், கமல் சாரும் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும். இந்த விஷயத்தால் நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன்’ என்றார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2019
M T W T F S S
« Aug    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

காலம் கடந்து சொல்ல படும் எல்லோருக்கும் அறிந்த ரகசியம் , உலக பயங்கரவாதிகளின் தலைவன் அமெரிக்கா [...]

Jey

Losliya is 23 yrs old. Not a kid anymore. She has the right to live [...]

ராஜபக்சேக்கள் சொன்னால் அதை செய்யும் தீரர்கள், 2007ல் ஒரு ஐரோப்பிய நாட்டில் அவர்களை சந்தித்த போது [...]

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News