ilakkiyainfo

ilakkiyainfo

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது  ஏழை இளைஞனின் உயிரை பறித்து  உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!
October 17
01:52 2017

வெளிவந்த அதிா்ச்சி தகவல்கள்!!

•  கூலி தொழி­லா­ளி­யான கார்த்­திக் எனும் 19வயது  இளைஞன்  ஒருவனின்  மூளையை சாவடைய வைத்து, அவனின் உடல் உறுப்புகளை திருடி  சசி­க­லாவின் கணவர் நட­ரா­ஜனுக்கு  பொருத்தப்­பட்­ட­தாக தகவல் வெளியா­கியுள்ளது.

• ஏழை கூலித்­தொ­ழி­லா­ளி­யான கார்த்­திக்கின் குடும்­பத்­தினர், குளோபல் மருத்­து­வ­ம­னையில் வைத்து கார்த்­திக்­கிற்கு மேல்­ சி­கிச்சை செய்யத் துணிந்­தது எப்­படி?

• மருத்­து­வர்களின் அறி­வு­ரையை மீறி கார்த்திக், ஹெலி அம்­புலன்ஸ் மூலம் திருச்­சியில் இருந்து சென்­னைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு கார்த்திக் மூளை சா­வ­டைந்­த­தாக கூறப்­ப­ட­வில்லை.

………………………………………….

ஒரு மன்னர் வயது முதிர்வால் மர­ணிக்கும் தறு­வாயில் இருக்கும் போது அவர் இளைஞன் ஒரு­வனின் இள­மையை பெற்று மீண்டும் திடகாத்­தி­ர­மா­ன­வராக 100 ஆண்­டுகள் வாழ எத்­த­னித்­த­தாக கதை­களில் கேட்­டி­ருக்­கின்றோம்.

அந்த கதை தற்­போ­தைய கால கட்­டத்­துக்கு மிகவும் பொருத்­த­மா­னதே.

இக்கால கட்­டத்தில் மர­ணத்தை வெல்லும் மார்­கண்­டே­யர்கள் யாரும் பிறக்­க­வில்லை. ஆனால் ஆண்­டுகள் 1000 கடந்து வாழ­வேண்டும் என்ற பேராசை எல்லோருக்கும் உள்­ளது.

அதற்­காக எதையும் செய்யும் மனமும் பணமும் இருந்தால் சொல்­வ­தற்­கில்லை. தான் வாழ எத்­தனை தலை­களை வேண்­டு­மா­னாலும் உருள வைக்க சிலர் எத்­த­னிக்­கின்­றனர்.

மனித உரி­மைகள், நீதி, மானுடம் என எத்­தனை விட­யங்கள் பேசப்­பட்­டாலும் மனி­தத்தை கொல்­ப­வர்கள் தொடர்ந்து கொன்று கொண்டே இருக்­கின்­றனர்.

இன்­றைய உலகில் மனிதன் கன­விலும் நினைக்­காத விந்­தை­களை கூட தனது விஞ்­ஞான தொழில்நுட்ப வளர்ச்­சியால் கண்­முன்னே நடத்­தி­கொண்­டி­ருக்­கின்றான்.

என்றோ ஒருநாள் மர­ணத்­திடம் தோற்று போகும் அவன், அதனை வெல்ல பல முயற்­சிகளை மேற்­கொள்­வ­தோடு தன் ஆயுளை இரட்டிப்பாகும் முயற்­சி­யிலும் ஈடு­பட்­டுள்ளான்.

அதுவும் மருத்­துவம் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி இன்று எல்­லை­யில்லா அளவு வளர்ந்து விட்­டது. கண் தொட்டு இதயம் வரை பல உறுப்­பு­களை மாற்­றி­வி­டு­கின்றான்.

நாம் இறந்த பின்பு மண்­ணுக்கு போகும் உறுப்­பு­களை மற்­ற­வர்­க­ளுக்கு வழங்கி அதன் மூலம் இன்­னொரு உயிரை வாழ­வைக்க வேண்டும் என்ற விழிப்­பு­ணர்வு அனு­தி­னமும் நடத்­தப்­பட்டு கொண்­டி­ருக்­கின்­றது.

இது ஒரு ஆரோக்­கி­ய­மான விட­யமே. ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக தனக்கு இயற்­கை­யாக வரும் ஒரு உடல் உபா­தைக்கு நல­முடன் வாழும் ஒரு உயிரை அழித்து அதன் மூலம் தான் சுகதேகியாக வாழும் செயல் இன்று நடை­மு­றைக்கு வந்­து­விட்­டது.

எந்த கொடிய மிரு­கமும் செய்­யாத இச்­செ­யலை மனிதன் திற­முடன் செய்­து­கொண்­டி­ருக்­கிறான்.

இதனை இயக்­குநர் கௌதம் வாசு­தேவின் இயக்­கத்தில் அஜித் நடிப்பில் வெளி­யா­கிய ‘என்னை அறிந்தால்’ திரைப்­ப­டத்தில் மிக தெளிவாக விளக்­கி­யி­ருந்தார்.

அது வெறும் கதை என்று பார்த்­த­வர்­க­ளுக்கு இன்று அது­போல தன்னை சுற்றி நடக்கும் சாத­ாரண சம்­பவங்கள் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்து விடுகின்­றன.

அந்­த­வ­கையில் தமி­ழ­கத்தில் கடந்த வாரம் சசி­க­லாவின் கணவர் நட­ரா­ஜனின் அறுவை சிகிச்­சையும் இது போன்ற ஒரு பெரும் சர்ச்­சையை, சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஆம். கடந்த வாரம் சசி­க­லாவின் கணவர் நட­ரா­ஜ­னுக்கு செய்­யப்­பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பல்­வேறு சர்ச்­சை­களை எழுப்­பி­யுள்­ளது.

1486378602-4046 எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது  ஏழை இளைஞனின் உயிரை பறித்து  உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!! எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது  ஏழை இளைஞனின் உயிரை பறித்து  உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!! 1486378602 4046

சசி­க­லாவின் கண­வ­ரான நட­ராஜன் கடந்த சில நாட்­க­ளுக்கு முன், சென்­னையில் உள்ள தனியார் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டார். தொடர்ந்து நட­ரா­ஜனின் உடல்நிலை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாக இரு முறை தனியார் மருத்­து­வ­மனை அறிக்கை வெளியிட்டது.

கல்­லீரல் மற்றும் சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும். இதற்காக தமி­ழக அரசின் உறுப்பு மாற்று ஆணையகத்தில் பதிவு செய்­தி­ருந்த போதிலும் அவ­ருக்கு உட­ன­டி­யாக மாற்று உறுப்பு கிடைக்­கப்­பெ­ற­வில்லை.

குளோபல் மருத்­து­வ­மனை நிர்­வாகம் நட­ராஜனின் உடல்­நிலை கவ­லைக்­கி­ட­மாக உள்­ளது என்று ௨அறிக்­கைகள் வெளி­யிட்ட நிலையில், “விரைவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்­ளது’ என்று நம்­பிக்­கை­யுடன் சொன்னார் தின­கரன்.

அவ­ரது உற­வி­னர்கள் இருவர் அவ­ருக்கு கல்­லீரல் மற்றும் சிறு­நீ­ர­கத்தை தான­மாக கொடுக்க உள்­ள­தாக செய்­திகள் பர­வின.

ஆனால் , திடீ­ரென மூளைச் சாவு அடைந்த ஒரு­வரின் உடல் உறுப்­புகள் நட­ரா­ஜ­னுக்கு வெற்­றி­க­ர­மாக அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்­பட்­ட­தாக தகவல் வெளியா­னது. இது பல்­வேறு சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

புதுக்­கோட்டை மாவட்டம் அறந்­தாங்கி அருகே உள்ள கூத்­தா­டி­வ­யலை சேர்ந்த 19 வயது கூலி தொழி­லா­ளி­யான கார்த்திக் கடந்த மாதம் 30ஆம் திகதி விபத்தில் சிக்கி படு­கா­ய­ம­டைந்­துள்ளார்.

இதை­ய­டுத்து அறந்­தாங்கி அரசு மருத்­து­வ­ம­னையில் சேர்க்­கப்­பட்ட அவர் சுய­நி­னை­வின்றி பின்னர் புதுக்­கோட்டை மற்றும் தஞ்­சாவூர் மருத்­து­வ­ம­னை­க­ளிலும் சேர்க்­கப்­பட்டார்.

இத­னி­டையே மருத்­து­வர்­களின் அறி­வுரையை மீறி கார்த்­திக்கை அழைத்து சென்ற உற­வி­னர்கள் மேல்­சி­கிச்­சைக்­காக சென்னை தனியார் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­தித்ததாக நட­ரா­ஜ­னுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்­துவமனை நிர்­வாகம் தகவல் தெரி­வித்­துள்­ளது.

மேலும் அங்கு இளைஞர் கார்த்திக் மூளை சாவு அடைந்­ததால் அவ­ரது உடல் உறுப்­புகள் தான­மாக பெறப்­பட்­ட­தாக விளக்கம் அளிக்­கப்­பட்­டுள்­ளது. மருத்­து­வ­ம­னையின் இந்த முரண்­பட்ட தக­வல்கள் பல்­வேறு சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ளன.

அதா­வது குடி­சையில் வாழும் குடும்பம், உழைத்தால் மட்­டுமே அடுத்த வேளை உணவு என்ற நிலையில் கூலி தொழி­லா­ளி­யான கார்த்­திக்கை சில இலட்­சங்கள் செல­வாகும் ஏர் அம்­பு­லன்ஸில் சென்னை கொண்டு வந்­தது யார் என்று கேள்வி எழுந்­துள்­ளது.

பணம் செல­வ­ழிக்க முடி­யா­ததால் தான் கார்த்திக் அறந்­தாங்கி, புதுக்­கோட்டை என மாறி மாறி அரசு மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

திடீ­ரென அவரை சென்­னைக்கு அழைத்து வர எங்­கி­ருந்து பணம் வந்­தது? அத்­தோடு அவ­ருக்கு சிகிச்சையளித்த மருத்­து­வர்கள் அவ­ரது உடல்­நி­லையை கருத்தில் கொண்டு சென்­னைக்கு அழைத்து செல்ல வேண்டாம் என தெரி­வித்­துள்­ளனர்.

ஆனால் மருத்­து­வர்களின் அறி­வு­ரையை மீறி கார்த்திக், ஹெலி அம்­புலன்ஸ் மூலம் திருச்­சியில் இருந்து சென்­னைக்கு அழைத்து செல்­லப்­ப­ட்டுள்ளார்.

அங்கு கார்த்திக் மூளை சா­வ­டைந்­த­தாக கூறப்­ப­ட­வில்லை. ஆனால் சென்னை குளோபல் மருத்து­வ­ம­னைக்கு பின்னி­ரவு 01:45 மணிக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட கார்த்­திக்கை மறுநாள் காலை 10:30- மணிக்கு சோதித்த நரம்­பியல் மருத்­துவர், கார்த்திக் மூளைச்­சாவு அடைந்துவிட்ட­தாக தெரி­வித்­துள்ளார்.

கார்த்திக் மூளைச்­சாவு அடைந்­ததால் அவ­ரது கல்­லீ­ர­லையும் சிறு­நீ­ர­கத்­தையும் நட­ரா­ஜ­னுக்கு மாற்றி அறுவை சிகிச்சை செய்­துள்­ளனர்.

மேலும் தஞ்­சா­வூரில் மூளைச்­சாவு அடைந்த இளைஞர் ஒரு­வரின் உடல் உறுப்­புகள் தான் நட­ரா­ஜ­னுக்கு பொருத்­தப்­ப­ட­வுள்­ள­தாக 2 நாட்­க­ளுக்கு முன்பே தக­வல்கள் வெளி­யா­கின.

இது­போன்ற முன்­னுக்­குப்பின் முர­ணான தக­வல்­களால் உடல் உறுப்பு தானத்தில் பேரம் நடந்­தி­ருக்­கலாம் என சந்­தேகம் எழுந்­துள்­ளது. இத­னி­டையே தான­மாக பெறப்­பட்ட உட­லு­றுப்­பு­களை நட­ரா­ஜ­னுக்கு பொருத்த அனு­மதி வழங்­கி­யது ஜெய­ல­லிதா கைரேகை சர்ச்­சையில் சிக்­கிய மருத்­துவர் பாலாஜி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­தோடு கார்த்­திக்கின் உறுப்­பு­களை நட­ரா­ஜ­னுக்கு சிகிச்சை அளித்த மருத்­து­வ­மனை அவ­ருக்­குத்தான் பொருத்­தப்­பட்­ட­தாக கூறாமல் 74 வயது நப­ருக்கு என மட்­டுமே குறிப்­பிட்­டி­ருக்­கி­றது.

அதா­வது கல்­லீரல் மற்றும் சிறு­நீ­ரகம் செய­லி­ழப்பால் உயி­ருக்குப் போராடி வந்த நட­ரா­ஜ­னுக்கு மூளைச்­சாவு அடைந்த ஏழை இளைஞர் ஒரு­வரின் கல்­லீரல் மற்றும் சிறு­நீ­ர­கத்தைப் பொருத்தி அறுவை சிகிச்சை வெற்­றி­க­ர­மாக நடை­பெற்­ற­தாக குளோபல் மருத்­து­வ­மனை அறிக்கை வெளி­யிட்­டது.

Daily_News_2017_5261455774308 எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது  ஏழை இளைஞனின் உயிரை பறித்து  உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!! எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது  ஏழை இளைஞனின் உயிரை பறித்து  உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!! Daily News 2017 5261455774308ஆயினும் குளோபல் மருத்­து­வ­மனை வெளி­யிட்ட அறிக்­கையின் மூலம் எழும் கேள்­விகள்;

ஏழை கூலித்­தொ­ழி­லா­ளி­யான கார்த்­திக்கின் குடும்­பத்­தினர், குளோபல் மருத்­து­வ­ம­னையில் வைத்து கார்த்­திக்­கிற்கு மேல்­ சி­கிச்சை செய்யத் துணிந்­தது எப்­படி?

உயிரை காப்­பாற்ற வேண்டும் என்ற வேட்­கையில் தனியார் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்து சென்­றி­ருக்­கலாம். ஆனால் கல்­லீ­ரலும் சிறு­நீ­ர­கமும் எப்­போது கிடைக்கும் என ஏங்கிக் கொண்­டி­ருக்கும் நட­ராஜன் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள அதே குளோபல் மருத்­து­வ­ம­னைக்கு சென்றது எப்­படி?

அது எதேச்­சை­யாக நடந்­ததா? அல்­லது கார்த்திக் திட்­ட­மிட்டு குளோபல் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்து செல்­லப்­பட்­டாரா?

கார்த்திக் உண்­மை­யா­கவே மூளைச்­சாவு அடைந்­தாரா? அல்­லது மூளைச்­சாவு அடைய வைக்­கப்­பட்­டாரா?

கார்த்­திக்கின் பெற்றோர் மருத்­து­வர்­களின் பேச்சை மீறி இர­வோடிர­வாக அவரை அழைத்து சென்­றுள்­ளனர். எனவே மகன் இனி பிழைக்க மாட்டார்.

ஆனால் மண்­ணுக்கு போகும் அவ­ர்களுக்கு உறுப்­பு­களை மற்­ற­வர்­க­ளுக்கு வழங்­கு­வதன் மூலம் பல இலட்­சங்­களை பெறலாம் என அவ­ருக்கு மூளைச்­ச­லவை செய்­யப்­பட்­டி­ருக்கலாம்.

இறக்க போகி­ற­வரை கட்­டி­லுக்கு பாரமாக வைத்­தி­ருப்­பதை விட அவன் இறந்தும் தம்மை வாழ வைக்க போகின்றான் என்ற மன திருப்திக் கூட பெற்­றோ­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கலாம்.

ஆனால் உறுப்பு மாற்­றுக்கு நாங்கள் பணம் பெற­வில்லை என அவ­ரது அம்மா கூறி­யுள்ளார். ஆயினும் விதி­களை மீறி நடத்­தப்­பட்ட அறுவை சிகிச்சை என இது தொடர்பில் பல்­வேறு சர்ச்­சைகள் ஏற்­பட்­டுள்­ளன.

இது தொடர்பில் வெளியான தகவல் ஒன்று இது திட்­ட­மிட்ட படு­கொ­லையா என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அதா­வது நட­ரா­ஜ­னுக்கு உறுப்பு தேவை என்று அனைத்து மருத்­து­வ­ம­னை­க­ளுக்கும் அவ­ரது மன்னார்குடி உள­வா­ளி­க­ளினால் அறி­விக்­கப்­பட்ட நிலையில் அவ­ருக்கு ஒத்த பொருந்த கூடிய உறுப்­புகள் உள்ள ஒருவர் கிடைக்­கப்­பெற்­ற­தும் குறித்த நப­ரை­திட்­ட­மிட்டு கடத்தி தமக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னரா என்ற கேள்வி எழு­கின்­றது.

அதா­வது கார்த்திக் கடந்த செப்ெ­டம்பர் 30ஆம் திகதி மதியம் பைக்கில் சென்ற போது அறந்­தாங்­கியில் இருந்து கீர­மங்­கலம் நோக்கிச் சென்ற காரின் வேகம் கண்டு தடு­மாறி, மோதி­யதில் 10 அடி உய­ரத்­திற்கு மேலே சென்று கீழே விழுந்­ததில் இரத்த சக­தி­யானார்.

அரு­கி­லி­ருந்த மருத்­து­வ­ம­னையில் முத­லு­த­விக்குப் பின் புதுக்­கோட்டை மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னைக்கு சென்றும் பய­னில்­லா­ததால், தஞ்சை மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­துள்­ளனர்.

மருத்­து­வ­ம­னையில் கார்த்திக் அனு­ம­திக்­கப்­பட்ட அன்று இரவு 7 மணிக்கு வந்த ஒருவர் தன்னை வழக்­க­றிஞர் என்று அறி­முகம் செய்து கொண்டு கார்த்திக்கின் உற­வி­னர்கள் கூடவே மருத்­து­வ­ம­னைக்குள் சென்­றுள்ளார்.

“தலையில் பலத்த காயம் இருக்கு. உடனே ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்­கணும்’ என்று மருத்­து­வர்கள் சொல்ல அதற்­கான ஏற்­பா­டுகள் நடந்­தன. ஊழி­யர்­க­ளிடம் ரூ. 2 ஆயி­ரத்தை வழக்­க­றிஞர் கொடுத்­து­விட்டு, கார்த்­திக்கின் உற­வி­னர்­க­ளி­டமும் பணத்தை நீட்ட அவர்கள் மறுத்­து­விட்­டனர்.

வழக்­க­றிஞர் என்று சொல்­லிக்­கொண்­ட­வரோ, “உங்­க­ளுக்கு மண­மேல்­குடி கார்த்­தி­கேயன் அண்­ணனை தெரி­யும்ல.… அவ­ருக்கு வேண்­டிய நான்தான் இந்த விபத்து வழக்கை நடத்­தப்­போறேன்’ என்று சொல்லிக் கொண்டு, சில வெளி மருத்­து­வர்­க­ளையும் அழைத்து வந்து காட்­டியுள்ளார்.

அவர்களும் “பைய­னுக்கு நினைவு திரும்பி கண் விழித்த பிற­குதான் ஆப­ரேசன் செய்ய முடியும். அது­வரை இருக்­கட்டும்’ என்று சொல்லிச் சென்­றுள்ளனர்.

இளைஞர் கார்த்திக் கண் விழிக்­காத நிலையில், 2-ஆம் திகதி அதி­காலை கார்த்­திக்கின் அக்கா புவ­னா­விடம் “உங்க வீட்டில் உள்­ள­வர்­களின் ஆதார் அட்­டை­களை கொண்டு வாங்க’ எனக் கேட்டு வாங்­கிய குறித்த வழக்­க­றிஞர் .

அதன்பின், இரவு 8 மணிக்கு திடீ­ரென ஒரு­வரை அழைத்­து­வந்து பரி­சோ­த­னைக்­கென கார்த்­திக்­கி­ட­மி­ருந்து இரத்தம் எடுத்­துள்ளார்.

இரவு 10 மணிக்குப் பிறகு வந்த வழக்­க­றிஞர் கூட இருந்த நண்­பர்­க­ளிடம் “இந்த விபத்­துக்கு ரூ.8 இலட்சம் வரை இழப்­பீடு கிடைக்கும். அதை நான் பார்த்துக் கொள்­கிறேன். இப்­பவே சென்னை அப்­பலோ கொண்டு போய் சிகிச்சை எடுத்து பிழைக்க வைக்­கலாம்.

பணம் நீங்க தர வேண்டாம். இன்­சூரன்ஸ் வந்­ததும் தரலாம்’ என்று சொல்ல. “அனை­வரும் சரி போகலாம்’ என்று சொல்­லி­யுள்­ளனர்.

இரவு 11 மணிக்கு சில கார்கள் வர “கார்த்­திக்கின் அம்மா, அப்பா, அக்கா எல்­ேலாரும் அம்­பு­லன்ஸ்ல வரட்டும்’ என்று சொன்ன வழக்­க­றிஞர் கார்த்­திக்கின் நண்­பர்­களை காரில் ஏற்றி சென்­னைக்கு அனுப்­பி­யுள்ளார்.

பின் அம்­பு­லன்ஸை திருச்சி விமான நிலை­யத்­திற்கு கொண்டு செல்­லும்­படி உத்­த­ர­விட, அங்­கி­ருந்து சென்­னைக்கு ஏர் அம்­புலன்ஸ் மூலம் கார்த்­திக்கைக் கொண்டு வந்­துள்­ளனர்.

ஆனால், அப்­பலோ­வுக்குப் பதில் குளோபல் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்­றுள்ளனர். காரில் வந்­த­வர்­க­ளையும் அங்­கேயே அழைத்துச் சென்­றுள்­ளனர்.

அவ­சர சிகிச்சைப் பிரிவில் கார்த்திக் சேர்க்­கப்­பட்ட நிலையில், அவ­ரது அம்மா, அப்பா, அண்ணன், அக்கா ஆகி­யோரை மட்டும் தனி­யாக ஒரு அறையில் தங்க வைத்­துள்ளனர்.

வழக்­க­றிஞர் கூடவே வேறு அறையில் கார்த்­திக்கின் நண்­பர்கள் தங்க வைக்­கப்­பட்­டனர். செல்போன் பேச்­சு­க­ளுக்குத் தடை போடப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த நிலை­யில்தான், நட­ரா­ஜ­னுக்கு வெற்­றி­க­ர­மாக உறுப்பு மாற்று சிகிச்சை நடந்­த­தாக தக­வல்கள் வெளி­யாகிக் கொண்­டி­ருந்­தன.

சென்னை சென்ற கார்த்திக்கின் நண்­பர்­களில் சிலர் “அப்­பல்­லோ­வுல வச்சு வைத்­தியம் செய்­யலாம், செலவை இன்­சூ­ரன்ஸ்ல இருந்து கட்­ட­லாம்னு வழக்­க­றி­ஞ­ர் ­சொன்னார்.

ஆனால் குளோ­ப­லுக்கு கூட்டி வந்­துட்­டாங்க. அவங்க அம்மா, அப்­பாவை உள்ளே கூட்­டிப்­போ­ன­தோட சரி வெளிய வரல. அதனால் உள்ள வச்சே அவங்­க­ளோட சம்­ம­தத்தை வாங்­கி­யி­ருக்­கலாம்” என்­கின்­றனர்.

இந்த முயற்­சி­களை எடுத்­தது யார்? என்ற கேள்­விக்கு அறந்­தாங்கி வட்­டா­ரத்தில் இருந்து வந்த பதில் என்று ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ள­மை­யா­னது… “”மன்­னார்­கு­டிக்கு ரொம்­பவே வேண்­டப்­பட்­டவர் மண­மேல்­குடி கார்த்­தி­கேயன்.

தற்­போ­தைய தின­கரன் அணி மாவட்ட செயலாளர். இவர் கலை­ஞரை எதிர்த்து திரு­வா­ரூரில் 2011-இல் போட்­டி­யிட்ட குட­வாசல் எம்.ராஜேந்­தி­ர­னோட மரு­மகன். அறந்­தாங்கி அ.தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர் ரெத்­தி­ன­ச­பா­ப­திக்கு தம்பி. அவர்தான் ஏற்­பா­டுகள் செய்­தி­ருக்­கிறார்.

மூளைச்­சாவு அடைந்­த­வரின் உட­லு­றுப்­பு­களை பிற­ருக்குப் பொருத்­து­வது என்றால் அந்த உறுப்­பு­களை மட்­டும்தான் எடுத்­துக்­கொண்டு போவார்கள்.

ஆனால் கார்த்­திக்கை மட்­டும்தான் ஆளையே கொண்­டுபோய் வைத்து உறுப்­பு­களை எடுத்­துள்­ளனர். இதற்கு அரசு அனு­ம­தியும் வேண்டும் என்­ப­தால்தான் 3ஆம் திகதி காலை தனது அண்ணன் ரெத்­தி­ன­ச­பா­பதி மற்றும் மாவட்ட ஆட்­சியர் கணேஸை நேரில் பார்த்து தகவல் சொல்­லி­யி­ருக்­கிறார் கார்த்­தி­கேயன்” என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்த நிலை­யில்தான் 3-ஆம் திகதி இரவு 10 மணிக்குப் பிறகு கார்த்­திக்­குக்கு அறுவை சிகிச்சை செய்து கல்­லீரல், சிறு­நீ­ரகம் மற்றும் செயல்­பாட்டில் உள்ள உறுப்­புகள் அகற்­றப்­பட்ட நிலையில், அவரது மரணம் அறி­விக்­கப்­பட்­டது.

மிகக் கச்­சி­த­மாக காய் நகர்த்­திய மன்­னார்­குடி தரப்பு, கார்த்திக் குடும்­பத்­திற்கு மொத்­த­மாக பத்­து­ லட்ச ரூபா தரவும் முன்­வந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஆயினும் இது உடல் உறுப்­புக்­காக நடந்த படு­கொலை. உயர் நீதி­மன்றம் தானாக முன்­வந்து விசா­ரிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்­வ­லர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

உடல் உறுப்பு தானத்தில் மோச­டிகள் அரங்­கே­றவும், பணத்­துக்­காக உற­வி­னர்­களே, தங்­களின் உற­வு­களை உயி­ரோடு விற்க, சிறந்த முன்­னு­தா­ரணம் என்றே கூறலாம்.

இந்த மனித உரிமை மீறலை தட்டிக் கேட்க நீதிமன்றத்துக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. ஆகவே, இந்த பிரச்சினையை தானாக முன்வந்து, வழக்காக எடுத்து, விசாரணை நடத்த வேண்டும்.என்று தெரிவித்துள்ளனர்.

ஆயினும் இது தொடர்பில் என்ன விசாரணை நடத்தினாலும் பரவாயில்லை என்று தினகரன் தரப்பு கூறிவிட்டனர். சிலவேளைகளில் எடப்பாடி, பன்னீர் தரப்பு இவ்விடயங்களை பெரிது படுத்தலாம்.

ஆனால் அதற்கும் அவசியம் இருக்காது என்றே தோன்றுகின்றது. ஏனெனில் சசிகலா பரோலில் வந்த போது கூட அவரை அமைச்சர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

எடப்பாடி, பன்னீர் தரப்பு சசிகலாவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. சசிகலாவும் அமைதியாக வந்து அமைதியாக சிறைக்கு சென்று விட்டார்.

இனி சசி தரப்பால் அ.தி.மு.க. ஆட்சிக்கு பெரிய பாதிப்பு வர வாய்ப்பில்லை. ஏனெனில் தினகரன் ஆட்சியை மாற்றுவோம் வீட்டுக்கு அனுப்புவோம் என்று ஏதேதோ கூறிவிட்டார் எதுவும் நடக்கவில்லை. இவ் ஆட்சிக்கு மத்திய அரசு முழு பாதுகாப்பு அளித்து வருகின்றமையால் அத்தனை எளிதாக ஆட்சியை கலைக்க முடியாது.

ஒருவேளை யாராவது இந்த நடராஜனின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் கார்த்திக் மரணம் தொடர்பில் வழக்கு தொடர்ந்தால் கூட உண்மைகளை கண்டறிவது சாத்தியமற்றதே. ஏனெனில் இங்கு எமனுக்கே எமனாக சில அதிகார வர்க்கங்கள் மாறிவிட்டன.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தன் கண் அசைவிலேயே ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டு அடிபணியவைக்குமளவு அத்தனை கம்பீரமாக வலம்வந்தவர்.

ஆனால் 75 நாட்கள் அவர் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியாது. வெளியுலகுக்கு இன்னும் தெரியவில்லை. இஸட் பிரிவு பாதுகாப்பில் இருந்த அவரது மரணமே மர்ம முடிச்சாக உள்ள போது சாதாரண கூலி தொழிலாளியின் மரணத்துக்கு எங்கிருந்து நீதி தேடுவது?

மர்மத்தை விளக்குவது? நிச்சயம் இதுவும் கடைசிவரை மர்மமாகவே இன்னும் சில காலங்களில் மறைந்து போகக்கூடும்.

– குமார் சுகுணா –

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

This idiot traitor must be killed too horror than LTTE leader Pirabakaran killed. [...]

குறைந்த ஊதிய தகவல் சரியானது. ஆனால், ஒரு கத்தார் ரியால் 42.2 ரூபாய்கள் மட்டுமே. ஆகவே குறைந்த ஊதியம் இலங்கை [...]

முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் எப்பவுமே நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பகீரங்க வெளியில் படங்களோடு கேழ்விக்குளாக்குவது அதிற்சியாய் இருக்கிறது.குறானில் [...]

புலி கூடடத்தால் மிஞ்சியது அழிவு மட்டுமே, இன்று தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் தீர்வான " மாகாண சபை [...]

How can you tell she is a Eelam girl, has she Sri Lankan Citizen ? [...]

இலங்கை பத்திரிகைகள்

English News