ilakkiyainfo

ilakkiyainfo

எரித்துக் கொலை செய்யப்பட்ட பட்டதாரி பெண்..! காணாமல் போன காதலருக்கு வலை வீச்சு

எரித்துக் கொலை செய்யப்பட்ட பட்டதாரி பெண்..! காணாமல் போன காதலருக்கு வலை வீச்சு
July 14
04:35 2018

ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை விலக்கு சாலை பகுதியில் பட்டதாரிப் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தப்பி ஓடிய காதலனை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை விலக்கு சாலை பகுதியில் பட்டதாரிப் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.   தப்பி ஓடிய காதலனை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகள் மாலதி(21). இவர் சென்னையில் தனியார் கல்லூரியில்  பி.ஏ.தமிழில் பட்டம் பெற்றவர்.

இவரை கடந்த மாதம் 29-ம் தேதி முதல் காணவில்லையென அவரது தாயார் கலைச்செல்வி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

மேலும் மாலதியை ராமநாதபுரம் அருகே கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்(24) என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கலாம் எனவும் அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது புகாரின் பேரில் போலீஸார் கடந்த 11-ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கைக்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான மிளகாய் குளிர்பதனக் கிடங்கு அருகே பெண் ஒருவரது உடல் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் எலும்புக்கூடாக கிடந்துள்ளன. அதன் அருகில் பெண்ணின் துப்பட்டா, வளையல் ஆகியனவும் கிடந்தன.

இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ராமநாதபுரம் டி.எஸ்.பி. எஸ்.நடராஜன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். இந்த விசாரணையில் சம்பவ இடத்தில் கிடந்த துணிகளை மாலதியின் உறவினர்களிடம் அடையாளம் காட்டிய போது எரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது மாலதி என்பது உறுதியானது.

இச்சம்பவம் தொடர்பாக மாலதியை காதலித்ததாக கூறப்படும் இளைஞர் சிவக்குமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகவும், அவரை கடந்த ஒரு வாரமாக காணவில்லையெனவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக சத்திரக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

எனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]

டேய் சாஸ்திரி இது M16 அல்ல MI6 ( Military Intelligence, Section 6) , [...]

Pon

ஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

இலங்கை பத்திரிகைகள்

English News