ilakkiyainfo

ilakkiyainfo

எஸ்.பி.பி -க்கு முதல் பரிசு வழங்கக்கோரி சண்டை போட்ட பின்னணி பாடகி; காத்திருந்த எம்.ஜி.ஆர் – சுவாரஸ்ய தகவல்கள்

எஸ்.பி.பி -க்கு முதல் பரிசு வழங்கக்கோரி சண்டை போட்ட பின்னணி பாடகி; காத்திருந்த எம்.ஜி.ஆர் – சுவாரஸ்ய தகவல்கள்
June 04
12:18 2019

எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று சொல்கிறோம். அந்த எஸ்.பி.பி-யின் முழு பெயர் என்ன தெரியுமா? ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம்.

இன்று ஜூன் 4ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும், சங்கீத உலகின் அத்தியாயம் பற்றியும், அவரது சுவாரஸ்ய பக்கங்கள் பற்றியும் தொகுத்து வழங்குகின்றோம்.

தனது 20வது வயதில் 1966ஆம் ஆண்டு ஒரு தெலுகுத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாலசுப்ரமணியம் பாடத் தொடங்கினார்.

பாடகர் மட்டுமல்லாது திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் என பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்L பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது.

107226054_4 எஸ்.பி.பி -க்கு முதல் பரிசு வழங்கக்கோரி சண்டை போட்ட பின்னணி பாடகி; காத்திருந்த எம்.ஜி.ஆர் - சுவாரஸ்ய தகவல்கள் 107226054 4

தமிழில் முதலில் பாடியது ‘சாந்தி நிலையம்’ படத்தில் வரும் ‘இயற்கையெனும் இளையகன்னி’ என்ற பாடலாகும். ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த ‘அடிமைப் பெண்’ திரைப்படத்தில் பாடிய ‘ஆயிரம் நிலவே வா’ வெளிவந்தது.

நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார் எஸ்.பி.பி.

முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் ‘சங்கராபரணம்’ திரைப்படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.

இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்கும் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார்.

எஸ்.பி.பி.க்கு முதல் பரிசு வழங்கக்கோரி சண்டை போட்ட பின்னணி பாடகி

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியன் ஒரு தேசிய ஒற்றுமை சின்னம். ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் பாடிய பெருமை அவருக்கு உண்டு. இன்று எஸ்.பி.பி. என்றும் பாலு என்றும் செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் மனிதரின் வாழ்க்கை போராட்டங்கள் நமக்கு தெரியாது.

எஸ்.பி.பியின் இளம் வயதில் மெல்லிசை பாடல் போட்டி ஒன்றில் பாட எஸ்.பி.பி.க்கு தெரியாமலேயே அவருடைய நண்பர் ஒருவர் விளையாட்டாகப் பெயர் கொடுக்க எஸ்.பி.பி. அந்தப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக பாடினார்.

ஆனால் பரிசு கிடைக்கவில்லை. ஆனாலும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. கோதண்டபாணி என்ற இசையமைப்பாளர் அந்த போட்டியின் போது இருந்தார்.

எஸ். பி. பி.யிடம் ‘உனக்கு நல்ல குரல்வளம் இருக்கிறது. உன்னை சினிமாவில் பாட சேர்த்து விடுகிறேன்’ என்று உற்சாகமூட்டி பாலுவை பல சினிமா இசையமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்றார்.

எப்படி முதல் பாட்டு போட்டியில் எஸ்.பி.பி.க்கு பரிசு கிடைக்கவில்லையோ, அதே போல் முதல் சினிமா முயற்சியும் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை.

107226020_2 எஸ்.பி.பி -க்கு முதல் பரிசு வழங்கக்கோரி சண்டை போட்ட பின்னணி பாடகி; காத்திருந்த எம்.ஜி.ஆர் - சுவாரஸ்ய தகவல்கள் 107226020 2

எஸ்.பி.பி யும் அவரை அழைத்து சென்ற கோதண்டபாணியும் மனம் தளரவில்லை. அவர்களின் முயற்சி வெற்றியடைய பல நாட்கள் ஆயின. ஆனால் பல நாட்கள் காத்திருந்து, பலமான அஸ்திவாரத்தோடு எழுப்பப்பட்ட இசை மாளிகைதான் எஸ். பி. பி. யின் பாடல்கள்.

தனக்கு முதன்முதலில் வாய்ப்பிற்காக அழைத்து சென்ற இசையமைப்பாளரை இன்று வரையிலும் எஸ். பி. பி. மறக்கவில்லை.

20 ஆண்டுகளுக்கு பிறகு தான் உருவாக்கிய ரிக்கார்டிங் தியேட்டருக்கு ‘கோதண்டபாணி ஆடியோ ரிக்கார்டிங் தியேட்டர்’ என்று குருவின் பெயரையே சூட்டி தன் நன்றிக் கடனைச் செலுத்தினார்.

முதல் போட்டியில் பரிசு கிடைக்காதது பெரிய தோல்வி என்றால் அதைவிட சுவையான நிகழ்ச்சியையும் பாலு சந்தித்திருக்கிறார்.

ஒரு தெலுகு சங்கத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பரிசு வாங்கி கொண்டிருந்தார் எஸ். பி. பி.. மூன்றாவது ஆண்டும் வெற்றி பெற்றால் பாலுவிற்கு ஒரு பெரிய வெள்ளிக் கோப்பை ஒன்று பரிசாக கிடைக்கும்.

107226022_3 எஸ்.பி.பி -க்கு முதல் பரிசு வழங்கக்கோரி சண்டை போட்ட பின்னணி பாடகி; காத்திருந்த எம்.ஜி.ஆர் - சுவாரஸ்ய தகவல்கள் 107226022 3

இந்நிலையில் மூன்றாவது ஆண்டு போட்டியில் சங்கத்தின் பொறுப்பாளர்களில் சிலர் எஸ். பி. பி.யை இரண்டாவது பரிசுக்கு தள்ளி விட்டார்கள். நீதிபதிகளின் முடிவை பாலு மனமார ஏற்றார்.

போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு ஒரு பிரபலமான பின்னணி பாடகி தலைமை தாங்கினார். பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாட மேடைக்கு அழைக்க, முதல் பரிசு பெற்ற இளைஞர் போட்டியில் பாடிய அதே பாடலை பாடிச் செல்ல, இரண்டாவது பரிசு பெற்ற எஸ்.பி.பி. தன் பாடலைப் பாடி முடித்தார்.

பரிசளிக்க வந்த பாடகியின் முகத்தில் ஏக கோபம். அவரே மைக் முன்னால் வந்து ‘இன்று இரண்டாவது பரிசு வாங்கியிருக்கும் இளைஞன், முதல் பரிசு வாங்கியிருக்கும் இளைஞனை விட மிக நன்றாகப் பாடியுள்ளான்.

ஆகையால் போட்டியின் முடிவுகளை ஏற்க என் மனம் சம்மதிக்கவில்லை’ என்று கூறி எஸ்.பி.பி. க்கு முதல் பரிசையும் அந்த வெள்ளிக் கோப்பையையும் வாங்கி தந்தார்.

திரையுலகத்தின் ஒரு பிரபலமான பாடகியால், சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அங்கீகாரம் பெற்றவர் எஸ். பி. பி. பிற்காலத்தில் அன்று பரிசளித்த பாடகியுடனேயே பல பாடல்களைப் பாடியிருக்கின்றார் எஸ். பி. பி.

107226386_6 எஸ்.பி.பி -க்கு முதல் பரிசு வழங்கக்கோரி சண்டை போட்ட பின்னணி பாடகி; காத்திருந்த எம்.ஜி.ஆர் - சுவாரஸ்ய தகவல்கள் 107226386 6

இன்றும் அந்தப் பாடகியின் மீது மட்டற்ற மரியாதை வைத்திருக்கிறார். சண்டை போட்டு எஸ். பி. பி.க்கு பரிசு வாங்கிக் கொடுத்த அந்தப் பாடகி யார் தெரியுமா?

பாலுவின் திறைமைக்காக போராடி முதல் பரிசை வாங்கி தந்த அந்த பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி தான். அன்றிலிருந்து இன்றுவரை சகோதரி திருமதி எஸ். ஜானகியை பெரிதும் மதித்து வருகிறார் பாலு.

எஸ்.பி.பி.க்காக காத்திருந்த எம்ஜிஆர் – ஆயிரம் நிலவே வா ரகசியம்

உழைப்பு உயர்வைக் கொடுக்கும். நல்ல நேரம் இருந்தால் உழைப்புக்கேற்ற பலனாக பெயரும் புகழும் பணமும் கிடைக்கும்.

உண்மையான திறமையிருந்தால்தான் உயர்ந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். இது எல்லாமே பாலுவின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

தமிழில் பாட வருவதற்குள் சில தெலுங்கு படங்களுக்காகப் பாடியிருக்கிறார். தமிழில் முதலில் பாடிய பாடல் ‘இயற்கையென்னும் இளைய கன்னி’ என்ற டூயட்.

இது ‘சாந்தி நிலையம்’ படத்திற்காக மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடியது. ஆனால் பாலுவை தமிழ்ப் பட உலக ரசிகர்களிடையே பிரபலமாக்கிய பாட்டு ஒன்று உண்டு.

107226056_7 எஸ்.பி.பி -க்கு முதல் பரிசு வழங்கக்கோரி சண்டை போட்ட பின்னணி பாடகி; காத்திருந்த எம்.ஜி.ஆர் - சுவாரஸ்ய தகவல்கள் 107226056 7

அந்தப் பாடல் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எல்லாரையும் கவர்ந்த பாடல். ஒரே பாடலால் தமிழகம் முழுவதும் தெரிந்த பின்னணி பாடகர் எஸ். பி. பி. ஒருவராகத்தான் இருக்க முடியும். அவருக்கு புகழை வாங்கித் தந்த பாடல் ‘ஆயிரம் நிலவே வா’ என்று ‘அடிமைப் பெண்’ணில் ஒலித்த பாடல்தான்.

‘ஆயிரம் நிலவே வா’ பாடலை எஸ்.பி.பி. பாடக் காரணமாயிருந்தவர் மக்கள் திலகம் தான். பாலு அந்தப் பாடலைப் பாட வேண்டிய நாளில், நல்ல காய்ச்சலில் படுத்திருந்தார் என்பதை முன்பே சொல்லியிருந்தார்.

பாலு இல்லாமல் கார் திரும்பி வந்ததும், விஷயத்தைப் புரிந்துகொண்ட மக்கள் திலகம், ரிக்கார்டிங்கை ரத்து செய்துவிட்டார்.

இந்த விவரம் பாலுவிற்குத் தெரியாது. தனக்கு பதிலாக வேறு யாரோ ஒருவர் அந்தப் பாட்டைப் பாடியிருப்பார் என்று தான் நினைத்திருந்தார்.

இரண்டு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் கார் பாலுவை அழைக்க வந்தபோது, பாலுவிற்கு அதை நம்பவே முடியவில்லை.

107226058_9 எஸ்.பி.பி -க்கு முதல் பரிசு வழங்கக்கோரி சண்டை போட்ட பின்னணி பாடகி; காத்திருந்த எம்.ஜி.ஆர் - சுவாரஸ்ய தகவல்கள் 107226058 9

தன்னைப்போல பிரபலமாகாத ஒரு பாடகனுக்காக எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனம் இரண்டு மாதங்கள் காத்திருப்பார்கள் என்பதை பாலுவால் நம்ப முடியவில்லை.

பாடலைப் பாடிய பிறகு மக்கள் திலகத்தைச் சந்தித்து நன்றி சொன்னார். அப்பொழுது மக்கள் திலகம் பாலுவிடம் ‘தம்பி என் படத்திலே பாட்டுப் பாடப் போறீங்கன்னு நீங்க எல்லார்கிட்டேயும் சொல்லியிருப்பீங்க.

உங்க நண்பர்கள் இந்தப் படத்தில் உங்க பாடலை ஆவலோடு எதிர்பார்த்திருப்பாங்க, உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரைப் பாடவைத்து உங்களையும், உங்கள் நண்பர்களையும் ஏமாற்ற நான் விரும்பல. அதனால்தான் உங்களுக்காக இந்தப் பாட்டு காத்திருந்தது’ என்று கூறி வழியனுப்பினார்.

107226014_1 எஸ்.பி.பி -க்கு முதல் பரிசு வழங்கக்கோரி சண்டை போட்ட பின்னணி பாடகி; காத்திருந்த எம்.ஜி.ஆர் - சுவாரஸ்ய தகவல்கள் 107226014 1எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்

 • எஸ்.பி.பி பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொகேணட்டாம் பேட்டை. திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற காதல் மனைவி. பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும் , நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
 • பாடலைத் தவிர, நடிப்பிலும் அசத்தியவர். தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். `கேளடி கண்மணி’, `காதலன்’ இரண்டும் நினைவில் நிற்பவை.
 • `ஏக் துஜே கேலியே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடியவர் இவர்தான். எல்லா பாடகர்களையும் விட எஸ்.பி.பி-யின் வாழ்நாள் சாதனை இது.
 • இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் மிக நெங்கிய நண்பர்கள். இடையில் இருவருக்கும் மனதாங்கல் வந்து நீங்கியிருந்தாலும், இப்பொழுதும் இருவரும் `வாடா, போடா’ எனப் பேசிக்கொள்ளும் அழகு எல்லோரையும் வியக்க வைக்கும்.
 • இதுவரை 45,000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என ஒரு டஜன் மொழிகளில் பாடுபவர்.
 • மூச்சுவிடாமல், `கேளடி கண்மணி’யில் `மண்ணில் இந்தக் காதல்’ `அமர்க்களம்’ பட `சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் மிக பெரிதாக பேச பெற்றவை. இன்றளவும் அவரது தனிக் கச்சேரியில் விரும்பி கேட்கப்படுகின்றன இந்தப் பாடல்கள்.
 • எஸ்.பி.பி.-க்குப் பிடித்த பாடகர்கள் முகமது ரபியும் ஜேசுதாசும். முகமது ரபியின் பாடல்களை விரும்பி கேட்பார். டி.எம்.எஸ். அண்ணா பாடிய எந்த பாடலிலும் அபஸ்ருதியைக் கேட்கவே முடியாது எனப் பாராட்டி மகிழ்வார்.
 • பிடித்த இசையமைப்பாளர், இளையராஜாதான். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மீது மிகுந்த மரியாதை இருந்தாலும், `ராஜா… ராஜாதான்’ என்கிறவர்.
 • `மழை’ படத்துக்காக எஸ்.பி.பி. ஒரு பாடலை பாடினார். அவர் ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அடியெடுத்து வைத்து. பாடி வெளியேறியது வரையில் மொத்த பாடலும் 12 நிமிடகளில் முடிந்துவிட்டது.
 • கிரிக்கெட் விளையாட்டின் வெறியர். எஸ்.பி.பி. சச்சின் இவரது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, தன் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசு அளித்திருக்கிறார்.
 • `துடிக்கும் கரங்கள்’ படத்தில் ஆரம்பித்து 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். எல்லா மொழிப் படங்களும் இதில் அடக்கம்.
 • பிறந்த தினம் ஜூன் 4, 1946. இப்போது 73 வயதாகிறது. இன்றும் பிசியாக பாடிக்கொண்டே இருக்கிறார். பிறந்த நாளைக் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை.
 • `முதல் மரியாதை’ படத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடித்திருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும் கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டார்.
 • ரஷ்யா தவிர, எஸ்.பி.பாலசுப்ரமணியம் போகாத நாடுகளே பூமியில் இல்லை. `எப்படி அந்த கம்யூனிஸ்ட் பூமி விட்டுப் போச்சு’ என இப்போதும் அடிக்கடி சொல்லி குறைபட்டுக்கொள்வார்.
 • எஸ்.பி.பி.யின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்ப காலம் தொட்டு. இன்று வரை இவருடனே இருக்கிறார். திரையுலகின் ஆச்சர்ய நண்பர்களாக இவர்களைக் குறிப்பிடுவார்கள். கால்ஷீட், உணவு, உடல்நலம் எல்லாம் பேணிக்காப்பது விட்டலின் பொறுப்பு.
 • தெலுங்குப் படங்களில் நிறைய `ராப்’ பாடல்கள் எழுதியவர். `கவிஞர்கள் அமையாவிட்டால் நீங்களே எழுதிவிடுங்களேன் பாலு’ என இசையமைப்பாளர்கள் இவரிடம் வற்புறுத்துவார்கள்!
 • கடந்த 30 வருடங்களில் அதிகமான விமானப் பயணங்கள் மேற்கொண்டவர் என எஸ்.பி.பி-யைக் குறிப்பிடுகிறார்கள். மும்பைக்கும், பெங்களூருக்கும், ஹைதராபாத்துக்குமான அவசரப் பயணங்கள் அதிகம்.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News