ilakkiyainfo

ilakkiyainfo

ஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம்

ஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம்
May 24
11:24 2019

சேலத்தில் சினிமாவை விஞ்சும் வகையில், ஒரே நேரத்தில் பல ஆண்களை திருமண வலையில் வீழ்த்தி லட்சக்கணக்கில் பணம் பறித்த பெண் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கவுதம் மேனன் இயக்கத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம், ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’. நாயகி ஜோதிகா, கையில் காசு புரளும் ஆண்களுக்கு வலை விரித்து, காதல் நாடகமாடி, தன் குடும்ப கஷ்டத்தைச் சொல்லி பணம் பறிக்கும் மோசடி பெண் பாத்திரத்தில் அசத்தி இருப்பார். கலையரசன் நடிப்பில் வெளியான ‘அதே கண்கள்’ படத்தில் வரும் நாயகியோ, பார்வையற்ற வசதியான இளைஞர்களை குறிவைத்து காதல் நாடகம் நடத்தி, பணம் பறிப்பாள்.

இப்படி கற்பனை கதாபாத்திரங்களை விஞ்சும் வகையில் நிஜத்திலும் சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரே நேரத்தில் பல ஆண்களை தன் காதல் + காம வலையில் விழவைத்து நூதன முறையில் ஏமாற்றியிருக்கும் பரபரப்பு தகவல்கள் அம்பலமாகி உள்ளன.

பாலமுருகனுடன்..

b ஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம் ஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம் selfie 20with 20balamurugan 20copy

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவியைச் சேர்ந்த பத்மநாதன் மகன் பாலமுருகன் (35). பழைய தங்கம், வைர நகைகளை ஏலத்தில் எடுத்து வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கல்யாணத்திற்கு பெண் தேவை என்று, கடந்த 2016ம் ஆண்டு தமிழ் மேட்ரிமோனி இணையதளத்தில் தன் புகைப்படம், வேலை, ஊதியம் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்திருந்தார்.

அதைப்பார்த்த சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள மருளையாம்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகள் மேகலா, இவருடைய செல்போன் நம்பருக்கு மேட்ரிமோனியல் புரஃபைல் பிடித்து இருப்பதாக எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.

அன்றுமுதல் இவர்கள் அடிக்கடி தங்களுக்குள் புகைப்படம், குடும்ப விவரங்களை பகிர்ந்து கொள்வது என நட்பை தொடர்ந்துள்ளனர்.

ஒருகட்டத்தில், மேகலாவை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து விட்டதாகவும் பாலமுருகன் கூறும் அளவுக்கு வாட்ஸ்அப் மூலம் பழகி வந்துள்ளனர். இத்தனைக்கும் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

கணபதியுடன்…

g ஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம் ஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம் selfie 20with 20ganapathi 20in 20a 20hotel 20copy

இந்நிலையில்தான் மேகலா, தனது குடும்ப கஷ்டங்களைச் சொல்லி அடிக்கடி தன்னிடம் பணம் கேட்க ஆரம்பித்தார் என்கிறார் பாலமுருகன். அதன்பின் நடந்ததை அவரே நம்மிடம் விலாவாரியாக கூறினார்.

”மேட்ரிமோனி பக்கத்தில் மேகலா, தனக்கு தந்தை இல்லை என்றும், தனியார் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளதாகவும், 5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் பதிவிட்டிருந்தார்.

தம்பி சத்யமூர்த்தியும், தாயார் யசோதாவும்தான் மேகலாவுடன் இருப்பதாகவும் சொல்லி இருந்தார். தந்தையை இழந்த பெண் என்பதால் எனக்கும் அவர் மீது இரக்கம் ஏற்பட்டது.

நாங்கள் பேச ஆரம்பித்த சில நாள்களிலேயே அவர் தன் சொந்த விஷயங்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார். என்னிடமும், ‘நீங்கள் சாப்பிட்டீங்களா…?’ என்று அன்பாக நலம் விசாரிப்பார்.

திடீரென்று இரவு 8.30 மணிக்கு போன் பண்ணி, ‘எனக்கு என்னமோ உங்ககிட்ட என் கஷ்டத்தையெல்லாம் சொல்லி அழணும்னு தோணுது பாலா,’ என்பார். ‘என் தம்பி ஒரு பொம்பள பொறுக்கி.

அவனுக்கு கொஞ்சம்கூட பொறுப்புங்கிறதே இல்ல. டெக்ஸ்டைல் ஃபேக்டரி ஆரம்பிச்சு 16 லட்சம் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திட்டான்,’ என்றெல்லாம் அழுது கொண்டே சொல்வார்.

நம்மை ஒரு பெண் நம்பி இத்தனையும் பகிர்ந்துக்கறாளே என்று மயங்கித்தான் அவரையே திருமணம் செய்து கொள்வது என தீர்மானித்தேன்.

குணசேகருடன்…

g ஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம் ஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம் selfie 20with 20Erode 20gunasekar 20copy

அதன்பின் அவரைத்தேடி கோவையில் அவர் பணியாற்றும் அம்பாள் மோட்டார்ஸ் நிறுவனத்திற்குச் சென்று சந்தித்தேன். அப்படி பலமுறை நாங்கள் சந்தித்து இருக்கிறோம்.

ஒருநாள் திடீரென்று தான் 4000 சதுர அடி நிலம் வாங்கி இருப்பதாகவும், அதனால் கடன் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த கடனை அடைத்தால்தான் நாம் சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்று புலம்பினார்.

பிறகு ஒருமுறை தம்பியால் கடன் ஏற்பட்டு விட்டதாகவும் சொல்வார். அவர் இப்படிச் சொல்லும்போதெல்லாம் அவருக்கு பலமுறை பண உதவி செய்திருக்கிறேன்.

நாங்கள் பழக ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய்க்கு மேல் 450 செட் உயர்ரக சுடிதார்கள், உள்ளாடைகள், சேலைகள் வாங்கி கொடுத்திருக்கிறேன்.

அதுமட்டுமின்றி தங்க சங்கிலி, வைர தோடு, வைரக்கல் பதித்த சங்கிலி வாங்கி தந்தேன். இத்தனையும் எனது வருங்கால மனைவிக்குத்தானே செய்கிறேன் என்று கருதியதால், இதையெல்லாம் அப்போது ஒரு பொருட்டாக கருதவில்லை.

இந்நிலையில்தான், கோவையில் இருந்து அவர் சென்னையில் வேலை கிடைத்திருப்பதாகச் சொல்லி ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

அங்கே சேர்ந்த நாள் முதல் பூந்தமல்லியைச் சேர்ந்த கணபதி என்பவரை தனது மாமா மகன் என்று எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

அவர்தான் அடிக்கடி மேகலாவை அவர் தங்கியிருக்கும் விடுதியில் இருந்து அலுவலகத்திற்கு பைக்கில் கொண்டு சென்று விடுவார் என்பதால், மேகலாவுக்கு தேவைப்பட்டதை வாங்கிக் கொடுக்கும்படியும், வாகன செலவுக்காகவும் கணபதியிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வருவேன்.

பாலமுருகன்

ப் ஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம் ஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம் balamurugan complainant 20copy

ஆனால், மேகலா தனது மாமா மகன் என்று சொல்லிவிட்டு கணபதியுடன் ஷாப்பிங் மால், ஹோட்டல், பீச் என்று பல இடங்களில் நெருக்கமாக ஒன்றாக சுற்றியதை சென்னையில் உள்ள நண்பர்கள் மூலம் தெரிய வந்தது.

கடந்த 2018 புத்தாண்டு அன்று, மேகலாவின் விடுதி அருகே சென்றுவிட்டு அவரை போனில் அழைத்தேன். அப்போது அவர் தலைவலியாக இருப்பதால் அறையிலேயே தூங்கிக் கொண்டிருப்பதாக கூறினார்.

ஆனால், அதேநேரம் அவர் கணபதியுடன்  பெசன்ட் நகர் பீச்சுக்கு சென்றுவிட்டு, அன்று இரவு ஈசிஆர் சாலையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

இதை கணபதியே குடிபோதையில் மறுநாள் உளறிவிட்டார். இருவரின் செல்பிக்களை வைத்தும் உறுதிப்படுத்தினேன். அதன்பிறகுதான் மேகலாவின் நடவடிக்கைகளில் எனக்கு பெரிய அளவில் சந்தேகம் ஏற்பட்டது.

கோவையில் மேகலா இருக்கும்போது ஊட்டிக்கும், சென்னைக்கும் அலுவலக ஊழியர்களுடன் பயிற்சிக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்று விடுவார். அதனால் என்னை கோவைக்கு வர வேண்டாம் என்பார்.

அந்த நாள்களில் அவர் கரூர் சிவக்கொழுந்து, பல்லடம் ஆனந்த், ஈரோடு குணசேகர், கோவை ஸ்ரீதர் திருப்பதி, கணபதி உள்ளிட்ட 17 பேருடன் உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளதை கண்டுபிடித்தேன்.

இதையெல்லாம் கண்டுபிடித்து கேட்டபோது, ‘ஆமாம்… நான் ஒரு விலைமாதுதான். நீ என்ன வேணும்னாலும் செய்துக்கோ. உன்னால் ஒரு கூந்தலும் ….. முடியாது,’ என்றார். எனக்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டது.

அவருடைய அழுகை, குடும்ப கஷ்டம் என்ற நடிப்பை நம்பி ஏமாந்து எல்இடி டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்ஸி என வீட்டுக்குத் தேவையான பொருள்களில் இருந்து தங்கம், வைர நகைகள் என இதுவரை 35 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறேன். அவர் அடகு வைத்திருந்த நகைகளைக்கூட மீட்டுக் கொடுத்திருக்கிறேன்.

மேகலாவிடம் இருக்கும் எனது பணம், நகைகளை மீட்டுத்தருவதற்காக சேலத்தில் உள்ள ராக்கிப்பட்டி ராஜா என்பவரின் உதவியை நாடினேன். அவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அவர் மூலமாக மேகலா முதல்கட்டமாக 2 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு வைர நெக்லஸ், ஒரு வைர தோடு ஆகியவற்றை மட்டும் திருப்பிக் கொடுத்தார்.

மீதப்பணம், நகைகளை பிறகு தருவதாகச் சொன்னார். ஆனால் இதுவரை மீதப்பணம், நகைகள் வரவில்லை. இந்த வேலையைச் செய்து தருவதற்காக ராக்கிப்பட்டி ராஜா என்னிடம் முன்பணமாக 2.50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டார். மேலும், 1.50 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தையும் பறித்துக்கொண்டார்.

கடைசியில் அவர் மேகலாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, என்னை மேகலாவுக்கு கட்டாய தாலி கட்ட வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ராக்கிப்பட்டி ராஜாவின் தூண்டுதலின்பேரில் மேகலா, அவருடைய பெரியம்மா கந்தாயி மற்றும் சில ரவுடிகள் வளையமாதேவியில் உள்ள என் வீட்டிற்கு வந்து, நான் மேகலாவுக்கு தாலி கட்டுவது போன்ற படத்தைக் காட்டி என்னிடம் 50 லட்சம் ரூபாய், ஒரு வீடு, ஒரு கார் ஆகியவற்றை கேட்டு பிளாக்மெயில் செய்தனர்.

இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தேன். அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த நடராஜ், மேகலா ஏமாற்றியதாகச் சொல்லப்படும் 17 பேரையும் அழைத்து வாருங்கள் எப்ஐஆர் போடுகிறேன் என்றார்.

இப்பிரச்னையில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு இன்ஸ்பெக்டர் நடராஜ் மிரட்டினார். அதன்பின் என் புகாரில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு எங்கேயும் நீதி கிடைக்கவில்லை. ஆனால், மேகலா இனி வாழ்நாளில் யாரையும் ஏமாற்றி விடக்கூடாது,” என்று கண்ணீர் மல்கக்கூறினார்.

மேகலா சிலருடன் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளார். அவர்களுக்கு தன் செல்போனில் இருந்து தனது அரை நிர்வாண, முழு நிர்வாண படங்களையும் அனுப்பி கிளுகிளுப்பு ஊட்டியிருக்கிறார்.

 பல்லடம் ஆனந்த், குணசேகர், கணபதி ஆகியோருடன் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கும் அளவுக்கு ரொம்பவே நெருக்கமாக இருந்துள்ளார்.

பல்லடம் ஆனந்த், ஆட்டோ லூம் பிஸினஸ் மூலம் கோடீஸ்வரன் ஆனவர் என்பதால், தனக்கு பல லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக கூறி அவரிடமும் பிராக்கெட் போட முயன்றிருக்கிறார். அவரோ ஆளை விட்டால் போதும் என்று இவரை தடாலடியாக கழற்றிவிட்டிருக்கிறார்.

பெரும்பாலும் மேகலா, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஆள்களையே குறிவைத்து திருமண ஆசை காட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். ஈரோட்டைச் சேர்ந்த குணசேகர் என்பவரும், மேகலாவின் கண்ணீரை நம்பி 3 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

 

இவர்களில் கணபதி, குணசேகர் ஆகியோரிடமும் நாம் விசாரித்தோம். அவர்களோ, ”பாலமுருகனுக்கும் மேகலாவுக்கும்தான் பிரச்னை.

அவர் ஏன் எங்களை எல்லாம் இந்த விவகாரத்தில் கோர்த்து விடுகிறார்? நாங்கள் கவுரவமாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் மேகலாவுடன் ஃபிரண்ட்லியாகத்தான் பழகினோம்.

அப்போது எடுக்கப்பட்ட படங்களை எல்லாம் பாலமுருகன் பலருக்கும் அனுப்பி வைத்துள்ளார். நியாயமாக பார்த்தால் அவர் மீது நாங்கள்தான் புகார் கொடுக்க வேண்டும்,” என்று சொல்லி வைத்தாற்போல் பேசினர்.

ஆனால் ஓர் ஆணும், பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் நாள் கணக்கில் இரவில் தங்குவதும், நிர்வாண படங்களை பகிர்ந்து கொள்வதும் என்ன மாதிரியான ஃபிரண்ட்லி உறவுமுறைக்குள் வரும் என்று நமக்கும் புரியவில்லை.

ஒரு நிறுவனத்தில் ஹெச்.ஆர். அதிகாரியாக இருக்கும் ஸ்ரீதர் திருப்பதி என்பவரும், இன்னிக்கு நைட்டு வரட்டுமா? எனக்கு பணியாரம்னா ரொம்ப பிடிக்கும் என்று மேகலாவுடன் சாட்டிங்கில் கூறியிருக்கிறார். அவரிடம் கேட்டபோது, நட்புக்குள் இதெல்லாம் சகஜம் சார். இதைக்கூட குற்றம் என்றால் எப்படி? என்கிறார்.

ஆனால், மேகலா தன்னிடமும் கடன் சுமையைக் கூறி பணம் கேட்டதாகவும், நானே கஷ்டத்தில் இருப்பதாகச்சொல்லி தப்பித்துக் கொண்டேன் என்றும் கூறினார்.

இறுதியாக நாம், மேகலாவிடம் பேசினோம்.

நாம் அவரிடம் அறிமுகப்படுத்தி விட்டுத்தான் பேசினோம் என்றாலும், நீங்கள் எங்கே இருக்கீங்க? உங்க ஆபீஸ் எங்கே இருக்கு? பாலமுருகன் உங்களை எங்கே சந்தித்துப் பேசினார்? என்றெல்லாம் விசாரித்துவிட்டுத்தான் பதில் சொல்ல தொடங்கினார்.

”என்னிடம் 35 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பதாக உங்களிடம் பாலமுருகன் சொல்கிறார். சிலரிடம் ஒரு கோடி ரூபாய் வரை கொடுத்ததாகச் சொல்லி இருக்கிறார்.

இதில் எதை நம்புவது? இதையெல்லாம் கேட்டால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. எது எதுக்கோ ஆதாரம் வைத்திருப்பதாகக் கூறும் பாலமுருகன், அவர் பணம் கொடுத்ததற்கு ஏதாவது ஆதாரம் இருந்தால் காட்டட்டும்.

கணபதியுடன்..

க் ஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம் ஏமாந்துபோன 17 ஆண்கள்; சினிமாவை விஞ்சும் சேலம் பெண்ணின் களியாட்டம் jolly 20selfie 20with 20ganapathi 20copy

இது பரவாயில்லை. அவர் பல பேரிடம் என்னை ஒரு ‘கால் கேர்ள்’ என்றுகூட சொல்லி இருக்கிறார். பல பேருக்கு வாட்ஸ்அப் மூலம் என் புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்கிறார். நீங்கள் சொல்வதைக் கேட்டு எனக்கு ஷாக் ஆக இருக்கிறது,” என்றார் சிரித்தபடியே.

அவர் உங்களைப் பற்றி தவறாக சித்தரித்து இருந்தால் நீங்கள் அவர் மீது புகார் தரலாமே? என்று கேட்டதற்கு, ”சார்… இவங்க மேல புகார் கொடுக்கறது என் வேலை கிடையாது. நான் சம்பாதிச்சாதான் என் குடும்ப சாப்பிட முடியும்.

நாமளே அன்றாடங்காய்ச்சி. இதுல எங்க போய் புகார் கொடுக்கறது? சார்… ஓப்பனாக சொல்லணும்னா பாலமுருகன் என்னை லவ் பண்ணினாருங்க…,” என்றவர் என்ன நினைத்தாரோ திடீரென்று, ”சார், நான் பேசுவதை நீங்கள் ரெக்கார்டு செய்கிறீர்கள் என தெரியுது. நான் உங்களை நேரில் சந்தித்துப் பேசுகிறேன்,” என்று சொல்லி பேச்சைத் துண்டித்துவிட்டார்.

ஆணாதிக்கம் குறித்தும், பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது குறித்தும் பேசும் இதே நேரத்தில்தான் மேகலா போன்றவர்களின் கதைகளும் கசிகின்றன. காவல்துறை கள்ள மவுனம் சாதிக்காமல் உண்மையை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தி மூலம்: நக்கீரன் செய்தி

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

0 comment Read Full Article
    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

0 comment Read Full Article

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News