ஏலியனுக்கு என்ன ஆச்சு! விரைவில் அறுவை சிகிச்சை!!

ஏலியன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முழங்கை காயத்திற்காக அடுத்த வாரம் அறுவை சிகிச்சை செய்ய உள்ளார்.
கிரிக்கெட்டில் களத்தில் எதிரணியை பந்தாடும் டிவில்லியர்ஸ் சிறுவயதிலே பலப் போட்டிகளில் எல்லாம் பட்டையை கிளப்பியவர். கடைசியாக கிரிக்கெட்டுக்கு வந்து சேர்ந்து விட்டார்.
அவரது அசாத்தியமான திறமையின் காரணமாகவே ரசிகர்கள் அவரை வேற்றுகிரகவாசி என்றும், மிஸ்டர் 360 என்றும் செல்லமாக அழைப்பர்.
இந்நிலையில் கடந்த மாதம் நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்கா சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையடியது.
இந்த தொடருக்கு முன் டிவில்லியர்ஸின் முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்து தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இன்று டிவில்லியர்ஸ் தனது உடல்தகுதியை சோதித்தார்.
அப்போது காயம் ஏற்பட்ட இடத்தில் வலி ஏற்பட்டதாக உணர்ந்தார். இதனால் அடுத்த வாரம் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
அதன்பின் குறைந்தது 8 வாரங்கள் அல்லது 10 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment