ilakkiyainfo

ilakkiyainfo

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
April 10
21:51 2018

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

203 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய சென்னை அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் வாட்சன் 19 பந்துகளில் 42 ரன்களும் சாம் பில்லிங்ஸ் 23 பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள் உதவியுடன் 56 ரன்களும் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

_100789165_gettyimages-528175026 ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 100789165 gettyimages 528175026

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் தலைவர் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் அனுபவம் வாய்ந்த வீரரான ராபின் உத்தப்பா 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.

5 விக்கெட்டுகள் இழப்புக்கு 89 ரன்கள் மட்டும் எடுத்து ஒரு கட்டத்தில் கொல்கத்தா தடுமாறிக் கொண்டிருந்தது.

கொல்கத்தா அணியின் பேட்டிங் தரவரிசையில் ஏழாவதாக களமிறங்கிய ஆந்த்ரே ரஸல் 36 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரஸல் 11 சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைதானத்தில் காலணி வீச்சு

தற்போது தனது இன்னிங்ஸில் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்களை எடுத்து சென்னை அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.

_100788972_gettyimages-154555503 ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 100788972 gettyimages 154555503

ஆட்டத்தின் முதல் பாதியில் மைதானத்தில் ரசிகர்கள் மைதானத்திலும், சில வீரர்கள் மீதும் காலணிகள் வீசியதால் பதற்றம் நிலவியது.

முன்னதாக, சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழகத்தை சேர்ந்த பல தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தப் போராட்டங்களால் அண்ணாசாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

_100789168_whatsappimage2018-04-10at6.42.49pm ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 100789168 whatsappimage2018 04 10at6

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், இந்தப் போட்டி நடப்பதற்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து மாலை 4 மணிக்கே புறப்பட வேண்டிய கிரிக்கெட் வீரர்கள் சற்று தாமத்தித்தே மைதானம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

உண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]

bis

திருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]

உண்மை, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் , சம்பந்தன் போன்ற வகையறாக்கள் கோழைகள் , இவர்களை விட புலிகள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News