ilakkiyainfo

ilakkiyainfo

ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை

ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை
April 18
02:22 2019

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஐதராபாத்:
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொண்டது.

சென்னை அணியில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சுரேஷ் ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்றார். டோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ் இடம் பிடித்தார்.

இதே போல் மிட்செல் சான்ட்னெர் நீக்கப்பட்டு கரண் ஷர்மா சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் ரிக்கி புய், அபிஷேக் ஷர்மா கழற்றி விடப்பட்டு யூசுப் பதான், ஷபாஸ் நதீம் திரும்பினர்.

201904180141552707_IPL-2019-SRHvCSK-IPL-33-League_SECVPF.gif  ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை 201904180141552707 IPL 2019 SRHvCSK IPL 33 League SECVPF
‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் ரெய்னா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்த சீசனில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங்குக்கு ஒரு அணி முன்னுரிமை கொடுப்பது இது 4-வது முறையாகும்.

இதன்படி ஷேன் வாட்சனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் சென்னை அணியின் இன்னிங்சை தொடங்கினர். வலுவான அடித்தளம் அமைத்து தந்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் (9.5 ஓவர்) திரட்டினர். இதில் பிளிஸ்சிஸ் அடித்த ஒரு சிக்சர் தொடரின் 400-வது சிக்சராக பதிவானது. வாட்சன் 31 ரன்களில் கிளன் போல்டு ஆனார்.

சென்னை அணி எப்படியும் 160 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தொடக்க ஜோடி பிரிந்ததும் ஆட்டத்தின் போக்கு மாறியது. பிளிஸ்சிஸ் 45 ரன்களில் (31 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்.

அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் கொடுத்த குடைச்சலில் சென்னை அணி தடம் புரண்டது. அவர், பொறுப்பு கேப்டன் சுரேஷ் ரெய்னா (13 ரன்), கேதர் ஜாதவ் (1 ரன்) இருவரையும் ஒரே ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆக்கினார்.

201904180141552707_2_rasid2._L_styvpf  ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை 201904180141552707 2 rasid2இதனால் ரன்வேகம் ஒரேயடியாக மந்தமானது. அடுத்து வந்த சாம் பில்லிங்சும் (0) தாக்குப்பிடிக்கவில்லை. கடைசி 6 ஓவர்களில் பந்து இரண்டு முறை மட்டுமே எல்லைக்கோடு பக்கம் சென்றது.

20 ஓவர்கள் முழுமையாக ஆடிய சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அம்பத்தி ராயுடு 25 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 10 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

ஐதராபாத் தரப்பில் ரஷித்கான் 2 விக்கெட்டும், நதீம், விஜய் சங்கர், கலீல் அகமது தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் களம் இறங்கிய ஐதராபாத் அணியில் டேவிட் வார்னர் பின்னியெடுத்தார். 24 பந்துகளில் தனது 41-வது அரைசதத்தை எட்டிய அவர் 50 ரன்களில் (25 பந்து, 10 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் (3 ரன்), விஜய் சங்கர் (7 ரன்), தீபக் ஹூடா (13 ரன்) சீக்கிரம் வெளியேறினாலும் அதனால் அந்த அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஐதராபாத் அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேர்ஸ்டோ 61 ரன்களுடன் (44 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். 9-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது தோல்வியாகும். ஐதராபாத் அணிக்கு 4-வது வெற்றியாகும்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News