ilakkiyainfo

ilakkiyainfo

ஒட்டுசுட்டான் சம்பவமே, கர்ப்பிணி பெண்களின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கோர காரணம்?

ஒட்டுசுட்டான் சம்பவமே, கர்ப்பிணி பெண்களின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கோர காரணம்?
July 13
21:20 2018

கடந்த மாதம் 22 ஆம் திகதி ஒட்டுசுட்டான் பகுதியில் கிளைமோர் மற்றும் புலிகளின் சீரூடை, புலிக்கொடி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் ஒருவரை கைது செய்யவே மே மாதம் 25 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலத்தில் குழந்தை பெறும் நிலையில் இருந்த கர்ப்பவதிகளின்  விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி தகவல்களை கோரி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினருக்கு அனுப்பிய கடித்தத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் ஊடாக நடைபெற்று வரும் விசாரணை சம்பந்தமாக கிளிநொச்சி சுகாதார சேவை காரியாலயத்திற்குரிய பிரதேசங்களில் இருந்த கர்ப்பிணி பெண்களில்  2018.05.25 தொடக்கம்  2018.05.30 ஆம் திகதி வரை உள்ள காலங்களில் குழந்தை பெற்றெடுப்பதாக  இருந்த பெண்களின் பெயர் முகவரி, அவரின் கணவரின் பெயர் முகவரி குழந்தை பெற்றெடுப்பதற்கு வழங்கப்பட்ட திகதி போன்ற விபரங்களை மிக விரைவாக தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 22 ஆம் திகதி ஒட்டுசுட்டான் வழியாக புதுக்குடியிருப்புக்கு செல்லும் வழியில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து கிளைமோர் மற்றும் புலிகளின் சீரூமை புலிக்கொடி போன்றவற்றை காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர். இது தொடர்பில் ஆறுபேர் வரை கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவத்தோடு தொடர்புபட்டவர் என பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகப்படும் நபர் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார் என்றும் அவரது மனைவி மேற்படி காலப்பகுதியில் குழந்தை பிரசவிக்க இருந்தார் என்ற தகவலுக்கமையவுமே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இந்த தகவல்களை கோரியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

விறுவிறுப்பு தொடர்கள்

    ராஜிவ் காந்தியை  படுகொலை  செய்ய “சிவராசன்”  மரகதம் சந்திரசேகரின் தொகுதியான   ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

0 comment Read Full Article
    “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

    நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள்   எவரையேனும்  இணைத்துக்கொள்ளவில்லை!!   (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

1 comment Read Full Article

Latest Comments

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இலங்கை பத்திரிகைகள்

English News