ilakkiyainfo

ilakkiyainfo

ஒருபாலுறவு: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் 5 முக்கிய தகவல்கள்

ஒருபாலுறவு: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் 5 முக்கிய தகவல்கள்
September 07
11:28 2018

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஒருபாலுறவைக் குற்றமாக்குவதை நீக்கி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து முக்கியத் தகவல்களின் தொகுப்பு இதோ.

  1. சமூகத்தில் மாற்றம் உண்டாகும்போது, சட்டங்களிலும் மாற்றம் உண்டாக வேண்டும். 158 ஆண்டுகால பழமையான சட்டம் என்பதால் அது தொடர்ந்து நீடிக்க வேண்டிய கட்டாயமில்லை.
  2. ஒரு ஆண் இன்னொரு ஆணையும், ஒரு பெண் இன்னொரு பெண்ணையும் தன் துணையாக தேர்வு செய்வது அவர்களின் அடிப்படை உரிமை. அதில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை.
  3. எதிர் பாலினத்தவரை தன் துணையாகத் தேர்வு செய்பவர்களுக்கும் ஒரே பாலினத்தவரைத் தேர்வு செய்பவர்களுக்கும் இடையே எவ்விதமான பாகுபாடும் காட்டக்கூடாது.
  4. சமூகத்தின் பார்வையில் ஒருபாலுறவு தவறாக இருந்தாலும் அரசியல்சாசனத்தின் அடிப்படையில் இது தவறில்லை. ஒரு சமுதாயம் முன்னேறும்போது, அதன் அடிப்படையில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே அரசியல் சாசனத்தின் நோக்கம்.
  5. சுயவிருப்பதின் அடிப்படையில் இல்லாமல், வற்புறுத்தல் மற்றும் மிரட்டல் ஆகியவற்றாலும், குழந்தைகளிடமும் ஒருபாலுறவு வைத்துக்கொண்டால் அது பிரிவு 377இன் கீழ் குற்றமாகவே கருதப்படும். அதேபோல விலங்குகளிடம் பாலுறவு கொள்வதும் குற்றமாகவே நீடிக்கும்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News