ilakkiyainfo

ilakkiyainfo

ஒரு சில தனி­ந­பர்­களின் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு ஏற்ப தமிழ் மக்­களின் எதிர்­காலம் தீர்­மா­னிக்­கப்­படக் கூடாது!!

ஒரு சில தனி­ந­பர்­களின் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு ஏற்ப தமிழ் மக்­களின் எதிர்­காலம் தீர்­மா­னிக்­கப்­படக் கூடாது!!
February 07
06:37 2018

பல­வீ­ன­மா­க­வுள்ள எமது தமிழ்த் தலை­மை­களின் செயற்­பா­டு­க­ளினால் தமிழ் மக்­களின் நீண்­ட­கால கோரிக்­கை­களும், அபி­லா­ஷை­களும் அழிந்து போகும் நிலை ஏற்­பட்டு வரு­கி­றது.

ஆகவே, இன்று நாம் ஒரு மிக முக்­கி­ய­மான கால­கட்­டத்தில் இருக்­கின்றோம். தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை வென்­றெ­டுப்­ப­தற்கு உறு­தி­யு­டனும் பற்­று­று­தி­யு­டனும் செயற்­பட வேண்­டிய கால­கட்டம் இது.

சலு­கைகள் பத­வி­க­ளுக்கு அடி­ப­ணி­யாமல் பணி­யாற்­றக்­கூ­டிய அர­சி­யல்­வா­தி­களை நாம் உரு­வாக்க வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இடைக்­கால அறிக்­கைக்­கான தயா­ரிப்பு நட­வ­டிக்­கை­களில் ஒவ்­வொரு கட்­சி­களும் தத்­த­மது முன்­மொ­ழி­வு­களை முன்­மொ­ழிந்­தி­ருந்த நிலையில் ஆக்­க­பூர்­வ­மான எந்த முன்­மொ­ழிவும் தமிழ்க் கட்­சியின் தரப்­பினால் ஆணித்­த­ர­மாக முன்­வைக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் கவலை தெரி­வித்­துள்ளார்.

உள்­ளூ­ராட்சி தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில் வாராந்த கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே முத­மைச்சர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

இன்­றைய காலத்தை தமி­ழர்­களின் அர­சியல் ரீதி­யாக எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள் என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளித்­துள்ள முதலமைச்சர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

தமிழ் மக்கள் தம­து­அ­ர­சியல் எதிர்­காலம் தொடர்பில் மிகவும் விழிப்­புடன் செயற்­ப­ட­வேண்­டி­ய­காலம் இது. எம் முன்னே காணப்­ப­டு­கின்ற ஆபத்­துக்­க­ளையும் அச்­சு­றுத்­தல்­க­ளையும் இனங்­கண்டு சரி­யான முடி­வு­களை எடுத்து உறு­தி­யுடன் செயற்­பட தவ­று­வோ­மாயின் கடவுளால் கூட எம்மைக் காப்­பாற்ற முடி­யாத ஒரு­நிலை ஏற்­படும்.

ஒரு சில தனி­ந­பர்­களின் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு ஏற்ப தமிழ் மக்­களின் எதிர்­காலம் தீர்­மா­னிக்­கப்­படக் கூடாது.

இது­காறும் ஆட்டுமந்தைகள் போல மக்கள் தம்­பின்னே பின் தொடர்­வார்கள் என்று எமது தலை­வர்கள் எதிர்­பார்த்­தார்கள்.

தாம் எதைச் செய்­தாலும் மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்­வார்கள் என்ற மம­தையில் இருந்­தார்கள். தற்­போது மக்கள் விழித்துக் கொண்­டு­விட்­டார்கள்.

யுத்­தத்தின் பின்னர் எம­து­மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு விட­யத்தின் அணு­கு­மு­றையில் நாம் பாரி­ய­த­வறு இழைத்­துள்­ளோமா என்று சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு என்ன என்­பது குறித்து எமது திட­மான கோரிக்­கை­களை முன்­வைத்து எமது அபி­லா­ஷை­களை வெளிப்­ப­டுத்தும் ஒரு பேச்­சு­வார்த்­தையை ஏற்­ப­டுத்­தாமல் அர­சாங்­கத்­துடன் இணைந்து அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் அல்­லது அர­சி­ய­ல­மைப்பு மாற்றத்­திற்குள் எமது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வி­னையும் கொண்டு சென்­றதன் மூலம் தமிழ் மக்­களின் பேரம்­பேசும் சக்­தி­முற்­றிலும் இன்று இல்­லாமல் செய்­யப்­பட்­டுள்­ளது.

யுத்­தத்தின் பின்னர் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த எமது பிரச்­சினை எமது தூர­நோக்­கற்ற செயற்­பா­டுகள் கார­ண­மாக சர்­வ­தேச சமூ­கத்தின் கைகளில் இருந்து விடு­பட்டு இலங்­கைக்குள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.

இதன் வெளிப்­பாடே மனித உரி­மைகள் சபையில் மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மானம் வலு­வி­ழந்­துள்­ள­மைக்­கான கார­ண­மாகும்.

அதே­போல, யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் வடக்கு, கிழக்கில் இருந்து இரா­ணுவம் முற்­றி­லு­மாக வெளி­யேற்­றப்­பட வேண்டும் என்று சர்வ­தேச ரீதி­யாக முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கைகள் இன்று தனியார் காணி­களில் இருந்து மட்டும் இரா­ணுவம் வெளி­யேற வேண்டும் என்ற கோரிக்­கை­யாக எம்­ம­வர்­க­ளி­னா­லேயே மாற்­றப்­பட்­டுள்­ளது.

இதன் கார­ண­மாக இரா­ணுவம் வடக்கு, கிழக்கில் பொதுக்­கா­ணி­களில் தொடர்ந்து நிலை­கொண்டு எதிர்­கா­லத்தில் பாரி­ய­ளவில் நிரந்­தர சிங்­களக் குடி­யேற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் ஆபத்து உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

காணி­களே எமக்கு எமது தனித்­து­வத்தைத் தரு­வது. எமது உணர்­வோடு ஒன்­றி­யது. அதே­கா­ணிகள் பறி­போ­கின்­றன என்றால் எமது தனித்­துவம் அழிந்து வரு­கின்­றது என அர்த்தம்.

இந்த நிலை­மை­களை கவ­னத்தில் எடுத்தே வட­மா­காண சபை சில முக்­கி­ய­மான அர­சியல் நகர்­வு­களை கடந்த சில வரு­டங்­களில் மேற்­கொண்­டி­ருந்­தது. குறிப்­பாக இன­வ­ழிப்பு தீர்­மானம் மற்றும் தமிழ் மக்­க­ளுக்­கான தீர்­வு­திட்ட முன்­மொ­ழிவு ஆகி­ய­வற்றைக் குறிப்­பி­டலாம்.

எமது அந்தத் தீர்­மானம் மற்றும் முன்­மொ­ழி­வு­களை சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி எமக்­கான அர­சியல் நகர்­வு­களை சர்­வ­தேச ரீதி­யாக பலப்­ப­டுத்த முயற்­சிக்­காமல் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அவற்றை மழுங்­க­டிப்­ப­தி­லேயே எம்­ம­வர்கள் கவனஞ் செலுத்தி வந்­துள்­ளனர். இடைக்­கால அறிக்­கைக்­கான தயா­ரிப்பு நட­வ­டிக்­கை­களில் ஒவ்­வொரு கட்­சி­களும் தத்­த­மது முன்­மொ­ழி­வு­களை முன்­மொ­ழிந்­தி­ருந்த நிலையில் ஆக்­க­பூர்­வ­மான எந்த முன்­மொ­ழிவும் தமிழ்க் கட்­சியின் தரப்­பினால் ஆணித்­த­ர­மாக முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

வட­மா­காண சபை முன்­மொ­ழிந்­தி­ருந்த தீர்­வுத்­திட்ட முன்­மொ­ழிவை ஆராய்ந்து பார்க்­கு­மாறு கூடக் கேட்­ப­தற்கு எமக்குத் துணிவு இருக்­க­வில்லை அல்­லது மனம் இடம்­கொ­டுக்­க­வில்லை.

உத்­தேச அர­சியல் யாப்பின் இடைக்­கால அறிக்­கை­யா­னது எவற்­றுக்­காகக் கடந்த 70 வரு­டங்­க­ளாக நாம் போரா­டி­னோமோ அவற்றை எல்லாம் முற்­றாக மறு­த­லித்து முற்­றிலும் சிங்­கள பௌத்த மக்­க­ளுக்­கான ஒரு முன்­மொ­ழி­வா­கவே வெளி­வந்­துள்­ளது.

பௌத்த மதத்­திற்கு முன் உரிமை எனும் போது ஏனைய மக்கள் இலங்­கையில் இரண்டாம் தர­மா­ன­வர்கள் என்று ஆகி­வி­டு­கின்­றார்கள் என்­பதே உண்மை. அதன் பின்னர் நாம் இறைமை, தாயகம், சுய­நிர்­ணயம், சுயாட்சி என்­ப­வற்றை பற்றிக் கதைப்­பதில் எந்த அர்த்­தமும் இல்லை. மேற்­கொண்டு கட்சித் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் உள்­ள­டக்­கு­வ­திலும் பய­னில்லை.

இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் வட­கி­ழக்கில் 1000 விகா­ரை­களைக் கட்­டு­வார்கள். நாளைய ஆட்­சி­யா­ளர்கள் 10,000 விகா­ரை­களைக் கட்­டு­வார்கள்.

அதன் பின் வரு­ப­வர்கள் அவற்றைச் சுற்­றிய பிர­தே­சங்கள் தொல்­பொருள் திணைக்­க­ளத்­துக்கு உரித்­தா­னவை என்று பிர­க­டனம் செய்­வார்கள்.

இவ்­வாறே ஏட்­டிக்குப் போட்­டி­யாக மாறி­மாறி ஆட்­சிக்கு வரு­ப­வர்கள் தமி­ழின அழிப்­பி­னூ­டாக எவ்­வாறு சிங்­களப் பேரி­ன­வாத்தை திருப்­திப்­ப­டுத்­தலாம் என்று நான் முந்தி, நீ முந்தி என்று செயற்­ப­டு­வார்கள்.

இவற்றைத் தட்­டிக்­கேட்க நீதி­மன்றம் சென்றால் அர­சி­ய­ல­மைப்பில் அவ்­வா­றுதான் உள்­ளது. நீங்கள் இரண்­டாம்­தரப் பிர­ஜைகள் தான் என்று எமது நீதிமன்றங்கள் கூறி அவற்றுக்கு சட்ட அந்தஸ்து கொடுக்கப்படும் நிலைமையே ஏற்படும்.

பலவீனமாகவுள்ள எமது தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகளினால் தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளும், அபிலாஷைகளும் நூர்ந்துபோகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

ஆகவே, இன்று நாம் ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு உறுதியுடனும் பற்றுறுதியுடனும் செயற்படவேண்டிய காலகட்டம் இது. சலுகைகள் பதவிகளுக்கு அடிபணியாமல் பணியாற்றக்கூடிய அரசியல் வாதிகளை நாம் உருவாக்க வேண்டும்.

தூரநோக்குடன் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற மக்கள் பிரதிநிதிகளை நாம் உருவாக்க வேண்டும். ஆகவேதான் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]

இவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]

North korea not Americas slave Toilet India, any ways what happend in syria ? are [...]

பின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]

உலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News