ilakkiyainfo

ilakkiyainfo

ஒரு பெண்ணால் உண்மையாக நேசிக்கப்படுகிறவராக யாருமிருக்க முடியாது!!: (இந்து மதம் சொல்கிறது…பகுதி-2)

ஒரு பெண்ணால் உண்மையாக  நேசிக்கப்படுகிறவராக யாருமிருக்க முடியாது!!: (இந்து மதம் சொல்கிறது…பகுதி-2)
October 31
02:49 2016

43.24 இல், ”ஆண்கள் அவர்களை நேசமாகக் கொள்ளக்கூடாது. அவர்களிடம் பொறாமைப்படக் கூடிய நல்ல தன்மை ஒன்றுமில்லை. அவர்களுடன் தொடர்பு இல்லாமலே, உண்மை அன்பு வைக்காமல் போகத்துக்காக மாத்திரம் ஆண்கள் பெண்களின் சம்பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.

அந்தப்படிக்கு இல்லாமல் வேறுவிதமாக ஒருவன் பெண்ணிடம் நம்பிக்கை வைத்துக் கொண்டால் அவன் நிச்சயமாக அழிந்து போவான்.”

இராமாயணம் ஆரண்ய காண்டம் 13.5.6 இல், ”உலகம் தோன்றுவது முதல் பெண்கள் நிலைமை சூது நிறைந்தது. பெண்கள் தாமரை இலையில் தண்ணீர்போல் சலனப் புத்தியுடையவர்கள்.

வாள்போல் கூர்மையான கொடுமைத் தன்மையுடையவர்கள்.” பெண் உறுதியற்ற சலனத்தன்மை கொண்டவள். ஒன்றுக்குள் நிலை நிறுத்த முடியாதவள், எனவே, அடக்குங்கள் என்ற இராமனின் புகழ் பாடும் இராமாயணம் சமூகத்துக்குக் கற்றுக் கொடுத்தது.

பாகவத ஸ்கந்தம் 4-14,42.8-4-36 இல், ”ஒரு பெண்ணால் உண்மையாக   நேசிக்கப்படுகிறவராக யாருமிருக்க முடியாது.

ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்.”

இதையே சுக்ரன் ”பெண்கள் நிலையற்ற சுபாவமுடையவர்கள். அவர்கள் குற்றமுள்ளவர்கள்.”

சுக்ரா 3.163 இல்,‘பெண் இனத்திற்கே கீழ்க்கண்ட 8 கணங்களும் உரிமையானவைகள். 1.பொய், 2.நிலையில்லாமை, 3.வஞ்சகம், 4.மூடத்தனம், 5.பேராசை, 6.மாசு, 7.கொடுமை, 8.துடுக்குத்தனம்”

அர்த்த சாத்திரம் 3-3-59 இல், ”பெண்கள் தவறு செய்தால் மூங்கில் பட்டையினாலோ, கயிற்றினாலோ, கையினாலோ, பெண்களின் வாயின் உதட்டில் மீது அடிகள் கொடுக்கலாம்;.”

இதை இராமாயணம் 25-17 இல், ”ஒரு மனைவி தப்பிதம் செய்தால் கயிற்றினாலோ, மூங்கில் பிளப்பினாலோ அடிக்கலாம். சமுதாயத்திற்கு அவர்கள் (பெண்கள்) கேடானவர்கள் – அபாயமானவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால்  அவர்களைக் கொன்று விடலாம்.

உலகத்தையே விழுங்க எண்ணிய  மந்தாரா என்ற பெண்ணைச் சக்ரா கொன்றிருக்கிறார். ஆஸ்ரமங்களில் செய்யப்பட்ட யாகங்களை, சடங்குகளைத் தடுத்ததற்காகத் தாடகை என்ற பெண்ணை இராமன் கொன்றிருக்கிறான்.”

பார்ப்பனிய முட்டாள்த்தனம், மூடநம்பிக்கை, அடிமைப்படுத்துதல், அவதூறுகள், வன்முறை ஆகியவை மீது கேள்வி எழுப்பிய பெண்கள் கொல்லப்பட்டனர்.

ஆண் பரிசம் கொடுத்து பெண் பெற்ற முறைக்குப் பதில், பெண் சீதனம் கொடுக்கும் முறை பெண்ணைச் சுமையாக்கியது. சொத்துரிமை ஆணின் கையில் இருந்த நிலையில் மேலும் சீதனமூடாக அவளது சொத்தைத் தனதாக்கும் கண்ணோட்டத்தில், சீதனம் கொடுப்பது பெண் மீதான சுமையாக மாறியது.

எனவே, சொத்தற்ற பெண் சீதனம் கொடுக்க சொந்தக் குடும்பத்தில் ஆணைச் சார்ந்து இருப்பது தவிர்க்க முடியாத ஒழுக்கமாக மாறியது. இதனால் பெண்ணின் வாழ்வு மேலும் இழிநிலைக்குத் தரம்தாழ்ந்தது.

sculptures-erotiques-inde-688po  ஒரு பெண்ணால் உண்மையாக  நேசிக்கப்படுகிறவராக யாருமிருக்க முடியாது!!: (இந்து மதம் சொல்கிறது...பகுதி-2) sculptures erotiques inde 688po

அதர்வண வேதத்தில் 6-2-3 இல், ”குடும்பத்தில் பெண் பிறந்தால் அச்சம்பவம் மகிழ்ச்சிக்குரியதல்ல, வருந்துவதற்குரியது, வியாகூலப்பட வேண்டியது. ஆண் மகவை விரும்புகிறதேயல்லாது, பெண் மகவை விரும்புகிறதில்லை.

பெண் மகவு வேறு எங்காவது பிறக்கட்டும்; இங்கே ஆண் மகவு பிறக்கட்டும். புக்கா கடவுளை வணங்குவதில் ஆண் மகவே பிறக்கட்டும், பெண் மகவு பிறக்க வேண்டாம்.”

காதபாசன் ஹிதா 27ஏ யில், ”பெண் குழந்தைகள் சாக வேண்டியவர்கள்” 32 என்று சொத்துரிமை பறிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்திய விளக்கத்தினூடாக வெறுக்கப்பட்டாள்.

ஆண் குழந்தை வேண்டி வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆண் குழந்தைக்குப் பதில் பெண் குழந்தை பெற்ற தாய், குழந்தைப் பேறு இல்லாத பெண் சமூகத்தால் தூற்றுதலுக்கு உள்ளாக்கப்பட்டாள்.

ரிக் வேதத்தில், ‘‘யுத்தத்தில் எதிரியிடமிருந்து பிடிபட்ட பெண்களோ அல்லது விவாகச் சம்பந்தமாகக் கட்டாயப்படுத்தப்பட்டவளோ, இவர்களில் எவரையும் மனிதப்பிறவி என்று கருதாமல் தட்டுமுட்டுச் சாமான்களைப் போலவே நடத்தவேண்டும்.”

நீதியின் ஒழுக்கத்தில் சிறந்த கதாநாயகர்கள் ஆக்கி மக்களுக்கு ஒழுங்கமைத்த பாண்டவர் கதையில், பஞ்சபாண்டவர்கள் தமது மனைவியைச் (இங்கு திரௌபதி ஐவருக்குப் பொது மனைவியைக் கூட) சூதாட்டத்தில் பணயமாக வைத்தபோது பெண்ணை ஒரு பொருளாக, சரக்காகத் தரம் தாழ்த்தப்பட்டதையே காட்டுகின்றது.

இதுபோல் இராமாயணத்தில் இராமன் பரதனுக்குத் தான் வகிக்கும் பதவி, மனைவி என அனைத்தையும் கொடுத்தபோது, இங்கும் பெண்ணை எப்படி இந்து தர்மம் சரக்காக்கிக் கைமாற்றியதைக் காட்டுகின்றது. இதை வால்மீகி இராமாயணம் 2-19-14 இல், தெளிவாகவே உணர்த்தி விடுகின்றது.

அரிச்சந்திர மயானகாண்டம் எந்தக் கட்டத்திலும் சந்திரமதியை விற்றதைக் கண்டிக்கவில்லை.

இந்த இந்துப் புராணங்கள் இன்று மீண்டும் முன்னணிக்குக் கொண்டுவரப்படும் நிலையில், இராமனின் ஆணாதிக்கக் கற்பு நோக்கு சீதையை இழிவுபடுத்திய வக்கிரத்தைப் பார்ப்போம்.

ஒரு வண்ணான் சந்தேகப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இறை அவதாரமாகக் கருதப்படும் இந்து நாயகன் இராமன், தனது மனைவி சீதையை, ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த போதும் காட்டுக்குத் துரத்திவிட்டான்.

இறை அவதாரம் பெற்ற  இராமனாகப் புராணங்கள் புளுகிய போதும், இராவணன் இடம் இருந்து சீதையை மீட்டபோது, (முரண்பட்ட பல வரலாற்றுக் கதைகள் இருந்தபோதும்) சீதை தனது கற்பை நிலை நாட்ட தீ மிதித்து  ஒழுக்கத்தை நிறுவ வேண்டி ஏற்பட்டது.

பஞ்சபாண்டவர்களின் ஒரே மனைவியான திரௌபதி தனது ஐந்து புருசனுக்கு வெளியில் இன்னுமொரு ஆணை விரும்புவதாகக் கூறி விபச்சார நிலையில் நியாயப்படுத்தியது.

மனைவியை முன்நின்று கணவன் கூட்டிக் கொடுக்க ஆணாதிக்க இந்து தர்மம் கோருகின்றது. அதாவது கடவுளின் தொண்டர்களான பார்ப்பனர்கள், பக்தர்கள் இடம் கேட்டால், கேட்பதைக் கொடுக்கும்படி இந்து தர்மம் கோரியது.
indumathammm  ஒரு பெண்ணால் உண்மையாக  நேசிக்கப்படுகிறவராக யாருமிருக்க முடியாது!!: (இந்து மதம் சொல்கிறது...பகுதி-2) indumathammm1
இயற்பகை  நாயனாரிடம் ஒரு பக்தன் பெயரில் சிவபெருமான்   அவரின் மனைவியைப் பிச்சையாகக் கேட்டாராம். உடனே மனைவியை அவர் கொடுத்தார்.

பெண்ணின் பெற்றோர்கள் இதைத் தட்டிக் கேட்க, தனது பெண்டாட்டியை வெட்டிச் சாய்த்தார். உடனே பரமசிவன் கேட்ட உடனே கூட்டிக் கொடுத்ததுக்கும், மனைவி மறுபேச்சு  இன்றி விபச்சாரம் செய்ததற்கும் அங்கீகாரம் வழங்கி, அவரை முதல்தரப் பக்தன் ஆக்கி மோட்சத்துக்கு அழைத்துப் போனாராம் சிவன்.

இதேபோல் ஆழ்வார் வீட்டில் ஒரு பக்தன் சாப்பாட்டுக்குப் போனார். உணவு சமைக்க உணவு இல்லாத நிலையில், கடையில் கடன் உதவி கேட்க, அவன் இவன் மனைவியைக் கேட்டான். இதற்கு அவன் பெண்டாட்டியைப் படுக்க விட்டு விருந்து வைத்தாராம்.

எவ்வளவு கேவலமான வகையில் பெண்களைப் பக்தியின் பின்னால் படுக்கைக்குப் பயன்படுத்தியுள்ளனர். இன்றும் கேடிகள், பணக்காரக் கும்பல்கள் இப்படித்தான் பெண்ணைப் பயன்படுத்துகின்றனர்.

இராமாயணத்தின் கதாநாயகன் இராமனின் பெயரில் ஒரு வானரக்கூட்டம் இன்று இந்தியாவில்; ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றும், கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால், இராமாயணப் புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது.

%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d  ஒரு பெண்ணால் உண்மையாக  நேசிக்கப்படுகிறவராக யாருமிருக்க முடியாது!!: (இந்து மதம் சொல்கிறது...பகுதி-2)
கந்த புராணம் ஏற்பட காரணம்
சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம் விடாமல் புணர்ந்து கொண்டிருந்ததால், வீரியமும் கர்ப்பமும் கொடுமை செய்துவிடும் என்று தேவர்கள் அஞ்சி முறையிட்டதால், கலவி முற்றுப்பெறுமுன் சிவன் நிறுத்தியதால் இந்திரியம் நிலத்தில் விழுந்து  நிறைய ஆபாசமாகி  இறுதியாகச் சுப்பிரமணியன் தோன்றவும், கந்தபுராணம் உருவாகவும் காரணமாகி விடுகின்றது. இந்த மாதிரி இந்து மத வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்;?!

rama-t  ஒரு பெண்ணால் உண்மையாக  நேசிக்கப்படுகிறவராக யாருமிருக்க முடியாது!!: (இந்து மதம் சொல்கிறது...பகுதி-2) Rama tஇராமாயணம் இராமனின் வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டது.

இந்த இராமனின் சொந்தத் தந்தை தசரதன் அல்ல. தசரதன் மூன்று பெண்டாட்டியையும், 60 ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவன்.   மூன்று பெண்ணுக்கும் குழந்தை பிறக்காததால், சிரங்கன் இடம் மூன்று பெண்ணையும் ஒப்படைத்து யாகம் செய்தான்.

இங்கு மூன்று பெண்களின்  தந்தை சிரங்கன் என்பது, இன்று மரத்தைச் சுற்றி பிள்ளை பெறும் பக்தியின் பின்னால் வேறு ஆண்களுடன் புணர்ச்சி நடப்பதும், கர்ப்பம் தரிப்பதுமே நிகழ்கின்றது.

தசரதன் அல்லாத சிரங்கனுக்குப் பிறந்த இராமனை, இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னைத் திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின் மூக்கு, முலை, முடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்டதன் மூலம் இராமன், பெண்களைக் கொச்சைப்படுத்துகின்றான்.

வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல், இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது.

இராவணனை வென்ற இராமன் சீதையைப் பார்க்க மறுத்த நிலையில், ”இராவணனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந்தொல்லையை மேற்கொள்ளவில்லை” என்று தனது வக்கிரத்தை வெளிப்படுத்தினான்.

மேலும் அவன் ”உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்கவேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது. சகிக்கவில்லை.

ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள  இடத்திற்கெங்காவது   நீ போய்ச் சேரலாம்… அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா..”33 என்று கேட்கின்றபோது, தனது நிலையில் நின்றே உரைக்கின்றான். தான் இராவணன் இடத்தில் இருந்தால் கற்பழித்திருப்பேன் என்பதையே சொல்லாமல் சொல்லுகின்றான்;.

இந்த இடத்தில் சீதை தெளிவாக அவனை நிர்வாணப்படுத்திக் கூறுவதைப் பார்ப்போம். ”நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே.” இந்த இராமன், இராவணனிடம் இருந்து மீட்ட சீதை மீதான சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அவளைத் தீக்குளிக்கும்படி கட்டாயப்படுத்தினான்;.

. நாடு திரும்பிய பின் சீதை கர்ப்பமாக இருக்கும்போது, வண்ணான் ஒருவன் சீதையின் கற்பு ஒழுக்கத்தை சந்தேகப்பட்ட நிலையில், இராமன் அதன் வழியில் சீதையின் கண்ணைக்கட்டி, நடுக்காட்டில் துரத்திவிட்டான்.

சீதையைக் காட்டுக்குத் துரத்திய இராமன் ஆட்சி எப்படி இருந்தது.

 உத்தர காண்டம் சரகம் 42, 43 இல், முறையே சுலோகம் 8,1 இல், ”குடி, கூத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி, பெண்களைக் கூட்டம் கூட்டமாகக் கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்;.

சீதை அவனுடன் இருந்த போதும் இதையே செய்ததுடன், சீதையையும் இதில் ஈடுபடுத்தினான்.

இதில் இயல், இசை, நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா, அப்சரசுகள் போன்றவர்களும், பல அழகிகளும் அந்தப்புரத்தில் சிக்கி கிடந்தனர். சர்கா 4,2 செய்யுள் 18.21 இல், ”மதுபோதையில் மாமிசத்தைச் சுவைத்தபடி, சீதைக்கு மதுவைக் கொடுத்தபடி, மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாகப் பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.

சீதையை மீட்ட இராமன் இராவணனின் மனைவி மண்டோதரியைத் துரோகி வீபீஷணனுக்குக் கொடுக்கின்றான். இதுதான் இராமனின் நீதி. இதுபோல் வாலியின் மனைவி தாரகையைச் சுக்ரீவனுக்குக் கொடுக்கின்றான்.

இராமன் சீதையைக் காட்டிற்குத் துரத்திய பின் சீதை வால்மீகியின் ஆசிரமத்தில் வாழ்கின்றாள். அங்கு இரட்டைக் குழந்தைகளை அவள் பெறுகின்றாள்;. 12 ஆண்டுகளுக்குப் பின் இராமனைக் காணும் வரை, சீதையை இராமன் சென்று பார்த்தது கிடையாது.

12 வருடத்திற்குப் பின் இராமன் செய்த யாகத்துக்கு அழைப்பு திட்டமிட்டே கொடுக்க மறுத்த நிலையில், வால்மீகி சீதையின் மகனை அழைத்துக் கொண்டு யாகத்துக்குச் சென்றான்.

அங்கு இராமன் மகனைக் கண்டதுடன், சீதை மீதான சந்தேகத்தை மீளவும் சுட்டிக் காட்டினான். அதை நிவர்த்திக்க விரும்பினால் சீதை பெரும் மக்கள் கூட்டம் முன்பு மீண்டும் தனது கற்பை நிரூபிக்க வேண்டும் என்றான்.

சீதை அழைத்து வரப்படுகின்றாள். அங்கு இராமனின் அவமானகரமான அவதூறுகளைக் கேட்டுத் தன்னைத்தானே தற்கொலைக்கு இட்டுச் செல்லுகின்றாள்;. கடவுளாகக் காட்டப்படும் இராமனின் யோக்கியதை இது.

பெண்களைப் பகவத்கீதை மூலம் இழிவுபடுத்தவும் பின்நிற்கவில்லை. அதைக் கிருஷ்ணன் தன் வாயால் கூறுகின்றான்.

”மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய
யே பிஸ்யூ பாபயோயை
ஸ்தரீயோ வைஸ்யஸ்ததாஸீத்ர
ஸ்தேபி யாந்தி பராம்கதி”

இதன் அர்த்தம் ”அர்ச்சுனா! பெண்களோ, வைசியர்களோ, சூத்திரர்களோ, நீச குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப் பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்”

– என்று பெண்களைத் தாழ்ந்த சாதிக்கு, தாழ்த்தப்பட்டு இழிவு படுத்துவதைக் கடவுள் செய்யத் தவறவில்லை. இந்த இழிந்த கடவுள்களை வழிபடுவது சமுதாயத்தின் அறிவற்ற இழிநிலையால்தானே ஒழிய, அறிவியல் பூர்வமாக அல்ல.

”தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன்
தெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை”

– என்று கூறி நியாயப்படுத்தும்போது, பெண்கள் மீதான ஆண்களின் ஆணாதிக்கச் சேட்டைகள் வரைமுறையின்றி அங்கீகரிக்கப்படுகின்றது. இன்று வீதியில் பெண்கள் செல்லும்போது, குரங்குகளாகக் குந்தியிருக்கும் ஆணாதிக்கக் குரங்குகளின் சேட்டை எல்லையற்ற துன்பத்தைக் கொண்டவை என்பதைப் பெண்கள் அறிவர். ஆனால் இந்துமதம் இதை அங்கீகரிக்கின்றது.

இந்த இந்துமதத்தின் கீதை பெண்களை இழிவுபடுத்தியது

vallabay-ganapathi  ஒரு பெண்ணால் உண்மையாக  நேசிக்கப்படுகிறவராக யாருமிருக்க முடியாது!!: (இந்து மதம் சொல்கிறது...பகுதி-2) VALLABAY GANAPATHIபிள்ளையார் வரலாறு பெண்கள் மீது சிவபெருமான் முதல் கொண்டு கடவுள்களின் சேட்டைகளால் உருவானதே. இந்தப் பிள்ளையாரைக் கொண்டே இன்று மதத்தின் பெயரில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

பிள்ளையார் பிறப்பு வியக்கத்தக்க ஆணாதிக்கப் பாலியல் வக்கிரங்கள் பல கொண்டது, பலபிறப்பு வரலாற்றையும் கொண்டதாகும். அவைகளைப் பார்ப்போம்.

1. சிவமகாபுராணத்தில், பார்வதியார் குளிக்கப்போனபோது உள்ளே யாரும் வராது இருக்க, தனது உடலில் இருந்த ஊத்தையைப் (அழுக்கு) பிராண்டி அதற்கு உயிர் கொடுத்து, அதைக் காவல் வைத்துவிட்டுச் சென்றார்.

சிவபெருமான் வந்து உள்ளேபோக முற்பட்டபோது சிவபெருமானுக்கும், பிள்ளையாருக்கும் மோதல் ஏற்பட, அதில் பிள்ளையாரின் தலை வெட்டப்படுகின்றது.

உமாதேவியார் தனது குழந்தையை வெட்டியதைக் கண்டு புலம்ப, சிவபெருமான் யானைத் தலையை வெட்டிப் பொருத்தியதாகப் பிள்ளையார் வரலாறு கூறுகின்றது.

இங்கு தெய்வமான உமாதேவியாரின் குளிக்கும் அறைக்குள் போகும் அளவுக்குத் துணிவுள்ளவர்கள் யார்? இது ஆணாதிக்க ஆண் கடவுள்கள் என்பதும் தெளிவாகின்றது.

ஆண் தெய்வங்களிடம் தமது பாதுகாப்பை வேண்டி வழிபடும் பெண்கள் எப்படிப் பாதுகாப்பைப் பெறமுடியும். ஏனெனில் அந்தத் தெய்வங்களே பல வக்கிரங்களில் பிறந்ததுடன், கற்பழிப்புகளும் கூடிய வன்முறைகளில் ஈடுபட்டவர்கள்.

பெண்கள் தமது  உடுப்பை மாற்றும் அறையில் வைத்திருக்கும்  ஆண் தெய்வங்களும் சரி, தூண்துரும்பில் இருக்கும் தெய்வங்களும் சரி, பெண்களின் நிர்வாணத்தை, ஆணாதிக்க   இரசனையில் இரசிக்கின்றன அல்லவா? இதைத்தான் பிள்ளையார் கதை தெளிவாக்குகின்றது.

பிள்ளையார் இன்று மதத்தின் ஆதிக்கச் சின்னமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்யும் பலவிதமான கொண்டாட்டங்களைத் தோற்றுவித்துள்ளது.

இந்தக் கொண்டாட்டம் ஆணாதிக்க வெறியர்களின் காமப்பசியைத் தீர்க்கும் கற்பழிப்புகளைச் செய்யும் ஊடகமாகியுள்ளது. பிள்ளையாரின் பெயரில் செய்யும் சதுர்த்தி இன்று மதக் கலவரத்தின் தூண்டுகோலாக மாறியுள்ளது.

சதுர்த்தி நான்காவது திதி (நாலாம் சடங்கு) என்பது திருமணத்தின் பின் மணமகனும் மணமகளும் உடலுறவைக் குறித்துக் கூடும் நாளைக் குறித்து உருவானது.

தொடரும்…

கி.பாஸ்கரன்

ஒரு ஆணைக் கொண்டு பெண்கள் எப்போதும் திருப்தியடையமாட்டார்கள்!!: இந்து மதம் சொல்கிறது.. (பகுதி-1)

கள்ள உறவு கொள்ளப்போய் உடம்பெல்லாம் பெண்குறி ஆகிய இந்திரன்! : (இந்து மதம் எங்கே போகிறது? பகுதி – 20)

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2017
M T W T F S S
« Jan    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Latest Comments

நாட்டிற்கு மிகவும் தேவையான விடயம். இதில் பெற்ற அறிவு -"சொந்த வீட்டில திருகுதாளங்கள் செய்ய வேண்டாம்" [...]

சீன ஆசியாவின் பாதுகாவலன் , அவர்களுக்கு இத்தகைய ஆயுதம் அவசியம், ஆனால் கக்கூசு புகழ் நாடு ஆசியாவின் துரோகி, அமெரிக்காவுக்கு [...]

This news good [...]

awesome dance [...]

Who is this bastard to tell to our great Mahinda Rajapakse ? we want Rajapakse [...]

இலங்கை பத்திரிகைகள்

English News