ilakkiyainfo

ilakkiyainfo

ஒரு பேஸ்புக்!.. ஒரு இளைஞன்!.. ஒரு கொலை……

ஒரு பேஸ்புக்!..  ஒரு இளைஞன்!..  ஒரு கொலை……
September 02
13:50 2014

ஒரு  காலத்தில் திரு­ம­ணத்­திற்கு ஒரு சில நொடி­க­ளுக்கு முன்­னரே மணப்­பெண்ணின் முகத்தை மண­ம­க­னுக்கு காட்டும் வழக்கம் நில­வி­யது. இதனை பெரும்­பாலும் எமது வீடு­க­ளி­லுள்ள பெரியோர் கூறக்­கேட்­டி­ருக்­கிறோம்.

ஆனால் இப்­போது இளைஞர், யுவ­திகள் மத்­தியில் வான­ளாவப் புகழ்ப்­பெற்­றுள்ள சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் ஒன்­றான முகப்­புத்­தகம் (பேஸ்புக்) அக்­கு­றை­யையும் தீர்த்­து­விட்­டது.

இன்று முன்பின் தெரி­யாத ஒருவர் முகப்­புத்­தகம் மூல­மாக அறி­மு­க­மாகி நண்­ப­ராகும் வாய்ப்­புள்­ளது. ஒரு சிலர் தமது அய­ராத முயற்­சி­யினால் நண்­ப­ராக இணைந்­து­கொள்­ப­வர்­களை தமது வாழ்க்கைத் துணை­வர்­க­ளாக மாற்­றிக்­கொள்­வ­து­முண்டு.

இது தான் பேஸ்­புக்கை மர­ணத்தின் நுழை­வா­யிலை திறந்­து­விடும் ஒரு சாத­ன­மாக அண்­மைக்­கா­லங்­களில் பலர் பார்ப்­ப­தற்கு தூண்­டு­கோ­லா­கி­யுள்­ளது. அந்­த­வ­கையில்.

கடந்த பெப்­ர­வரி மாதம் 5 ஆம் திகதி குரு­ணா­கலைப் பகு­தியில் பாட­சாலை மாண­வி­யொ­ருவர் பேஸ்­புக்கில் வெளி­யான தன் சர்ச்­சைக்­கு­ரிய புகைப்­ப­டத்தின் கார­ண­மாக தற்­கொலை செய்­து­கொண்டார்.

இத­னை­ய­டுத்து, அதே மாதம் 20 ஆம் திகதி  எல்­பிட்­டி­ய­விலும் ஒரு மாணவி முகப்­புத்­த­கத்­தினால் தற்­கொ­லை­ செய்­து­கொண்டார். இவற்­றை­விட பேஸ்புக் மூலம் ஒரு­வனை காத­லித்து கர்ப்­பி­ணி­யான யுவ­தி­யொ­ருவர் தனக்குப் பிறந்த குழந்­தையை துண்­டு­க­ளாக வெட்டிக் கொன்­று­விட்டு சட­லத்தை எரித்­து­விட்டு  மீத­மி­ருந்த  உடல்­ப­கு­தியை மொரட்­டுவை ஆற்றில் வீசிய சம்­ப­வமும் இடம்­பெற்­றமை நினைவில் இருக்­கலாம்.

இவ்­வாறு பேஸ்­புக்கின் பின்­ன­ணியில் ஏற்­பட்ட உயி­ரி­ழப்­புக்­களை வரி­சைப்­ப­டுத்திச் சொல்­லலாம். ஆனால், இவற்­றுக்கு பேஸ்புக் மட்­டுமே கார­ண­மல்ல. அதனை நல்ல வித­மாக பயன்­ப­டுத்­தா­தோரே காரணம்.

இதனால் பேஸ்­புக்கை தடை­செய்யக் கோரி இது­வரை எந்த சமூக அமைப்பும் போர்க் கொடித் தூக்­க­வில்லை. பொது­வாக கத்­தி­யொன்று இருக்­கி­றது என்று வைத்­துக்­கொள்வோம். அதனை சமையல் செய்யும் வேளைகளில் பயன்­ப­டுத்­தலாம்.

அதே­போல, அதனை பயன்­ப­டுத்தி ஒரு மனி­தனின் இறு­திக்­கி­ரி­யைக்கும் வழி­வகை செய்­யலாம். எனவே இதில் நல்­லதும் உண்டு தீயதும் உண்டு. எனவே பேஸ்­புக்கை வினைத்­தி­ற­னாகப் பயன்­ப­டுத்­து­வதை விட்­டு­விட்டு அதனால் தீமை பயக்கும் காரி­யங்­களை செய்­வது புத்­தி­சா­தூ­ரி­ய­மான செயல் அல்ல. இவ்­வ­ளவு தூரம் இதனைக் கூறு­வ­தற்கு ஒரு காரணம் உள்­ளது.

கடந்த திங்கட்கிழமை 25 ஆம் திகதி கொழும்பு புதுக்­கடை நீதி­மன்­றத்­திற்கு முன்­பாக இடம்­பெற்ற சம்­பவம் பல­ரையும் பெரும் அதிர்ச்­சிக்­குள்ளாக்­கி­யது.

17 வயது மாண­வியை துஷ்­பி­ர­யோகம் செய்­தமை தொடர்பில் பிணையில் விடு­விக்­கப்­பட்ட இளைஞன் ஒருவன், மாண­வியின் தந்­தை­யினால் கத்­திக்­குத்­திற்கு இலக்­கானார்.

அந்த இளை­ஞனை பாது­காக்க முற்­பட்ட அவ­னது தந்தை அதே­ந­பரின் கத்­திக்­குத்­துக்கு இலக்­காகி உயி­ரி­ழந்தார். அதே­வேளை அந்த இளை­ஞனின் சகோ­த­ரியும் கத்­திக்­குத்­துக்கு இலக்­காகி படு­கா­ய­ம­டைந்தார்.

இந்த அதிர்ச்­சி­மிக்க சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் குறித்த இளை­ஞ­னுக்கும் யுவ­திக்­கு­மி­டை­யி­லான பேஸ்புக் தொடர்­பி­லான அறி­மு­கமே கார­ண­மாக அமைந்­தது.

குறித்த இளை­ஞ­னுக்கும் 17 வய­தான பாட­சாலை மாண­விக்கும் இடையில் ஒரு குறு­கிய கால தொடர்பு ஏற்­பட்­டுள்­ளது. பேஸ்புக் வாயி­லாக உரு­வான இந்த தொடர்பே இறு­தியில் ஒரு கொலைக்கு வித்­திட்­டது என்று கூறலாம்.

பேஸ்புக் மூலம் பல தட­வைகள் தொடர்பு கொண்டு வந்த அந்த இளைஞன் இறு­தி­யாக உன் ஆண் நண்­ப­ரொ­ரு­வ­ருடன் நீ இருந்த புகைப்­ப­டங்கள் என்­னிடம் உள்­ளன. எனவே அவற்றை நான் திருப்பி ஒப்­ப­டைப்­ப­தற்­கா­க­வா­வது, என்னை வந்து சந்­திக்க வேண்டும் என மன்­றா­டி­யுள்ளான்.

அது மாத்­தி­ர­மன்றி நீ இவற்றை வந்து பெற்­றுக்­கொள்­ளாது போனால் நான் அவற்றை பேஸ்­புக்கில் தர­வேற்றம் செய்து பகி­ரங்­கப்­ப­டுத்­துவேன் என்று மிரட்­டி­யுள்ளான். இந்த நிலையில் குறித்த மாணவி மிகுந்த அச்­சத்­திற்கு உள்­ளா­கி­யுள்ளார். அவன் அழைத்த போது முதலில் அதற்கு மறுத்த அந்த மாணவி இறு­தி­யாக ஒரு­வாறு சம்­ம­தித்­துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 19 ஆம் திகதி குறித்த இளைஞன் கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள பிர­பல உண­வுச்­சா­லை­யொன்­றுக்கு முன்­பாக மோட்டார் சைக்­கிளில் வந்து நின்­று­கொண்டு அழைப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ளான். இந்­நி­லையில் அந்த மாண­வியும் எப்­ப­டி­யா­வது அந்தப் படங்­களை பெற்­று­வி­ட­வேண்டும் என்ற நோக்கில் அங்கு வந்து அந்த இளை­ஞனை அணு­கி­யுள்ளார்.

அப்­போது அந்த மாணவி புகைப்­ப­டத்தை தரு­மாறு மன்­றா­டி­யுள்ளார். இறு­தியில் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டுள்­ளது. முடி­வாக அந்த இளைஞன் தன்­னுடன் வரு­மாறும் தான் படங்­களை ஒப்­ப­டைத்து விடு­வ­தா­கவும்,, அவை அனைத்தும் மொரட்­டு­வை­யி­லுள்ள தனது வீட்டில் உள்­ள­தா­கவும் கூறி­யுள்ளார்.

இறு­தி­யாக அரை­ம­ன­துடன் சம்­ம­தித்த அந்த யுவதி மோட்டார் சைக்­கிளில் ஏறி அந்த இளை­ஞ­னுடன் பய­ணித்­துள்ளார். மோட்டார் சைக்கிள் மிகவும் வேக­மாக கல்­கிசை நோக்கி விரைந்­தது. அங்கு ஒரு வீட்டின் சிறிய அறைப்­ப­கு­தியில் மோட்டார் சைக்­கிளை நிறுத்­திய இளைஞன், அவளை தன்­னோடு வரு­மாறு அழைத்து உள்ளே சென்­றுள்ளான்.

அவளும் அத­னைத்­தொ­டர்ந்து அறைக்குள் செல்ல சற்றும் எதிர்­பா­ராத வகையில் அவளை உள்ளே தள்ளி கதவை தாழிட்ட அந்த இளைஞன் கூடவே அந்த மாண­வி­யையும் மிரட்டி கைகளை பின்­பு­ற­மாக கட்டி அந்த அறையின் கத­வுக்கு எந்­த­வொரு இடை­வெ­ளியும் இல்­லா­த­வாறு டேப்­பினால் ஒட்­டி­யுள்ளான்.

அதே­வேளை குறித்த மாணவி அவ­னி­ட­மி­ருந்து தப்­பிக்க மேற்­கொண்ட அனைத்து முயற்­சி­களும் தோல்­வி­யையே தழு­வின. இந்த நிலையில் கைகள் கட்­டப்­பட்­டி­ருந்த யுவ­திக்கு குளிர்பானத்தில் சாரா­யத்தை கலந்து பருக்­கி­யுள்ளான். அதனை பரு­காமல் தவிர்க்க குறித்த மாணவி மேற்­கொண்ட முயற்­சி­களும் பய­ன­ளிக்­க­வில்லை.

இறு­தியில் அந்த மாணவி துவண்டு போய் சரிந்தாள். அதன் பின்னர் விழித்து பார்த்த பொழுது மிகவும் பேர­திர்ச்­சிக்­குள்­ளான மாணவி தன்னை சுதா­க­ரித்­துக்­கொண்­ட­வாறு வீட்டில் கொண்டு விடு­மாறு அழுது புலம்­பி­யுள்ளார். இத­னை­ய­டுத்து அந்த இளைஞன் குறித்த யுவ­தியை முச்­சக்­கர வண்­டி­யொன்றில் ஏற்றி கொட்­டாஞ்­சே­னையில் முதலில் சந்­தித்த இடத்­தி­லேயே இறக்­கி­விட்­டுள்ளான்.

இந்த நிலையில் செய்­வ­த­றி­யாது திகைத்த அந்த மாணவி தனது சகோ­த­ரி­யிடம் தன் துய­ரங்­க­ளையும், மன­அ­ழுத்­தங்­க­ளையும் கொட்டித் தீர்த்து கண்ணீர் விட்டு அழு­துள்ளார். தனது தங்­கையின் நிலையைக் கண்டு பேர­திர்ச்சி கொண்ட சகோ­தரி இதனை உட­ன­டி­யாக முடி­வுக்கு கொண்­டு­வர வேண்டும்.

அதே­வேளை அந்த குற்­ற­வா­ளியை உட­ன­டி­யாக பொலி­ஸாரின் முன் நிறுத்த வேண்டும் என்ற முடி­வோடு கொட்­டாஞ்­சேனை பொலிஸ்­நி­லை­யத்தை அணுகி அங்கு தன் சகோ­த­ரிக்கு நிகழ்ந்த அனைத்து விட­யங்­க­ளையும் விலா­வா­ரி­யாக எடுத்­து­வைத்­துள்ளான்

இத­னை­ய­டுத்து பொலிஸார் எப்­ப­டி­யா­வது வச­மாக அவனை கைது­செய்ய வேண்டும் என்று எண்­ணி­யுள்­ளனர். இதற்கு வாய்ப்­பாக ஒரு திட்­ட­மொன்­றையும் தீட்­டி­யுள்­ளனர்.

வழ­மைபோல் இளை­ஞ­னுடன் பேசு­மாறு குறித்த மாண­விக்கு பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். அதா­வது அந்த இளைஞன் இணங்­குமோர் தொகைக்கு சம­ரசம் செய்­யு­மாறும் அத­னை­ய­டுத்து அவனை அழைத்து பணத்­தொ­கையைக் கொடுக்க குறித்­ததோர் இடத்­திற்கு வரு­மாறு அழைப்பு விடுக்­கு­மாறும் கேட்­டுக்­கொண்­டுள்­ளனர்.

பொலி­ஸாரின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய குறித்த யுவ­தியும் செயற்­பட்டு அந்த இளை­ஞனை அழைத்­துள்ளார். அவனும் அதனை நம்பி அங்கு வந்­த­வேளை காத்­தி­ருந்த பொலிஸார் இலா­வ­க­மாக கைது­செய்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­டதை அடுத்து கடந்த 19 ஆம் திகதி நீதி­மன்­றத்தில் ஆஜர்­செய்­துள்­ளனர்.

இந்த நிலையில் 25 ஆம் திகதி கொழும்பு புதுக்­கடை நீதவான் நீதி­மன்­றத்தில் குறித்த வழக்கு விசா­ர­ணைக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இத­னை­ய­டுத்து அவ்­வி­ளைஞன் 10000 ரூபா ரொக்கப் பிணை­யிலும் 1 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீ­ரப்­பி­ணை­யிலும் விடு­த­லை­செய்­யப்­பட்­டுள்ளான்.

விடு­த­லை­யான இளைஞன் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து தனது தந்தை மற்றும் தங்­கை­யோடு வெளியில் வந்த சமயம் காத்­தி­ருந்த பாதிக்­கப்­பட்ட மாண­வியின் தந்தை நீதி­மன்ற வளா­கத்தில் வைத்து அவ்­வி­ளை­ஞனை இலக்­கு­வைத்து கத்­தியால் குத்த முயன்­றுள்ளார். இதன்­போது எதிரே பாய்ந்த அவ்­வி­ளை­ஞனின் தந்தை அதை தடுத்து மகனைக் காப்­பாற்ற முயன்­றுள்ளார்.

அப்­போது அவர் கத்­திக்­குத்­துக்கு இலக்­கானார்.அந்தத் தாக்­கு­தலில் அவ்­வி­ளை­ஞனும் அவ­ரது தங்­கையும் படு­கா­யங்­க­ளுக்­குள்­ளா­னார்கள். தந்­தையின் உயிர் அவ்­வி­டத்­தி­லேயே பிரிந்­தது..

இச்­சம்­பவம் குறித்து பொலிஸார் தகவல் தரு­கையில்,

சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய 17 வயது மாணவி கடந்த 19 ஆம் திகதி கல்­கி­ஸைப்­ப­கு­தி­யி­லுள்ள வீடொன்­றிற்கு அழைத்­துச்­செல்­லப்­பட்டு இம்­சைக்­குள்­ளா­கி­யுள்ளார். குறித்த இளைஞன் மொரட்­டு­வையைச் சேர்ந்­த­வ­ராவார். குளிர்பானத்தில் மது­பா­னத்தைக் கலந்து அதனை அந்த மாண­விக்குப் பருக்­கிய நிலையில், அவர் சுய­நி­னை­வி­ழந்து மயக்­க­ம­டைந்­துள்ளார்.

அத்­தோடு, அந்த இளை­ஞனும் , மாண­வியும் முகப்­புத்­த­கத்­தி­னூ­டாக அறி­மு­க­மா­கி­யுள்­ளனர். இத­னை­ய­டுத்து, அவ்­வி­ளைஞன் அந்த யுவ­தியை அவ­ரது புகைப்­ப­டங்­களை முகப்­புத்­த­கத்தில் வெளி­யி­டு­வ­தாகக் கூறி அச்­சு­றுத்­தி­யுள்ளார். இத­னை­ய­டுத்தே சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய மாண­வியின் குடும்­பத்­தினர்.

இது குறித்து பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். அதன் விளை­வாக அந்த இளை­ஞனை பொலிஸார் கைது­செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தின் உத்­த­ரவின் பேரில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

இச்­சம்­பவம் குறித்து கொட்­டாஞ்­சேனை பகு­தி­யி­லுள்ள குறித்த மாண­வியின் வீட்­டுக்கு சென்று அந்த மாண­வி­யிடம் இது குறித்து கேட்ட போது,

எனக்கு பேஸ்­புக்கில் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து பிரண்ட் ‘ரிக்­குவஸ்ட்’ ஒன்று வந்­தது. நானும் அவனை பிரண்ட் ஆக ‘எட்’ பண்ணிக் கொண்டேன். அதன் பிறகு நான் ஒன்­லைனில் இருக்கும் போதெல்லாம் அவ­னி­ட­மி­ருந்து மெசேஜ்கள் வந்­தன. ‘ஹாய் ஹாய்’ என்று அடிக்­கடி டைம்­லைனில் மெசேஜ்கள் வந்து கொண்டே இருந்­தன.

எந்த நேரம் நான் பேஸ்­புக்கில் இருந்­தாலும் அவன் என்னை விடு­வ­தில்லை. அவ்­வே­ளையில் அவன் பிஸியா? இப்ப என்­னோட செட்டிங் பண்ண ஏலாதா ? என்­றெல்லாம் கேட்பான். என்னை இவ்­வ­ளவு தூரம் பேஸ்­புக்கில் பின்­தொ­ட­ரு­கி­றீர்­களே என்னை உங்­க­ளுக்­குத்­தெ­ரி­யுமா என்று அவ­னிடம் கேட்டேன்.

அதற்கு அவன் ” உனது பிரெண்ட் மூல­மாக உன்­னைத்­தெ­ரியும்” என்று கூறினான். அவனை சோதிக்க ஒரு உத்­தியை அவ்­வே­ளையில் நான் கையாண்டேன். எனது புகைப்­ப­டங்கள் உள்­ள­டங்­க­லாக ஐந்து புகைப்­ப­டங்­களை நான் அவனுக்கு மெயில் செய்து, அவற்றில் எனது புகைப்­ப­டத்தை கண்­ட­றி­யு­மாறு கூறி­யி­ருந்தேன்.

அதன்­படி அவன் எனது புகைப்­ப­டத்தை தெரிவு செய்து எனக்கு அதனை திருப்­பி­ய­னுப்­பினான். அதே­வேளை அவன் பிர­பல கைய­டக்­கத்­தொ­லை­பேசி நிறு­வ­னத்தில் நிறை­வேற்­றுத்­து­றையில் பத­வி­வ­கிப்­ப­தா­கவும் என்­னிடம் கூறினான்.

உன்­னோட போய்­பி­ரண்­டுடன் நீ இருக்கும் புகைப்­ப­டங்கள் என்­னிடம் இருக்­கின்­றன. அதை எச்­ச­ம­யத்­திலும் நான் பேஸ்­புக்கில் போட்­டு­வி­டுவேன் என்று என்னை அச்­சு­றுத்­தினான். அத்­தோடு நான் ஐக்­கிய இராச்­சி­யத்­துக்குச் செல்ல இருப்­பதால் உன்­னிடம் அந்த புகைப்­ப­டங்­க­ளை­யெல்லாம் தந்­து­வி­டு­வ­தாக இருக்­கிறேன்.

அது உனக்கு வேண்­டு­மானால் இந்த செவ்­வாய்க்­கி­ழமை 2.15 மணி­ய­ளவில் கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள உண­வ­க­மொன்­றிற்கு வா என்று கூறினான். நான் முதலில் இதனை மறுத்தேன். இருந்­தாலும் பின்னர் அவர் கூறி­ய­வற்றால் பயம் என்னை ஆட்­கொண்­டது.

அவன் வெளி­யி­டு­வ­தாகக் கூறும் படங்­களை வெளி­யிட்டால் என் நிலைமை என்­ன­வாகும் என பயந்து அவன் கூறிய இடத்­துக்கு வரு­வ­தாக ஒப்­புக்­கொண்டேன்.

அதே­போல கடந்த 19 ஆம் திகதி அவர் பேஸ் புக் மூல­மாக கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள உண­வ­க­மொன்­றிற்கு வரு­மாறு கூறினான். நான் அங்கு சென்­ற தும் என்னை பய­மு­றுத்தி. மோட் டார் பைக்கிள் ஏற்­றினான்.

அதன்­பி­றகு அங்­கி­ருந்து. கல்­கிஸை பகு­தி­யி­லுள்ள அறையொன்றுக்கு என்னை அழைத்துச்சென்றான். அங்கு சென்ற வுடன் அவனே அவ்வறையின் கதவைத் திறந்தான். அதன் பிறகு அவன் அந்த அறையினுள்ளே என்னைத் தள்ளி அறையின் கதவை மூடித்தாழிட்டான். அத்தோடு டேப்பினால் அக்கதவின் உட்புறமாக ஒட்டினான்.

அடுத்த கணமே எனது கை, கால்­க­ளையும் கட்­டினான். நான் அங்க அசை­வு­களால் அதனை கழற்­று­மாறு சைகை செய்தேன். அதனை பொருட்­ப­டுத்­தாது என்னை அடித்தான். குளிர்பான மெகா போத்­தலில் கறுப்பு நிறத்தில் திர­வ­மொன்றை என் முன்னே நீட்­டினான்.

எனது வாயில் ஒட்­டி­யி­ருந்த டேப்பை கழற்றி அந்த மெகா போத்­தலில் உள்ள திர­வத்தை என்­வாயில் பல­வந்­த­மாக ஊற்­றினான். அதன் மணத்தை வைத்து அப்­போத்­தலில் இருப்­பது சாராயம் என்­பதை உணர்ந்தேன். நான் முதலில் அதனை கக்­கிய போதிலும் பல­வந்­த­மாக அதனை என் வாயில் ஊற்­றினான்.அதனால் நான் போதையில் மயக்­க­ம­டைந்தேன்.

அதனைத் தொடர்ந்து, என்னை அவ­னது மோட்டார் பைக்கிள் ஏற்­றிக்­கொண்டு கொட்­டாஞ்­சேனை வரையில்.வந்தான். பிறகு என்னை அவ்­வி­டத்தில் இறக்­கி­விட்டு முச்­சக்­க­ர­வண்­டி­யொன்றை வாட­கைக்கு அமர்த்தி அதில் என்னை ஏற்றி எனது வீட்­டுக்கு அனுப்­பி­வைத்தான். சிறி­து­தூரம் வரை தள்­ளா­டி­ய­படியே வந்த நான் அன்று மாலை 7.00 மணியளவில் வீடு வந்துசேர்ந்தேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

விறுவிறுப்பு தொடர்கள்

    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

0 comment Read Full Article
    கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!:  ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க..  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

0 comment Read Full Article
    “நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று  எதிர்பார்த்திருந்த  புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து  காட்டிய  தலைவர்!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

“நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய தலைவர்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

1 comment Read Full Article

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News