ilakkiyainfo

ilakkiyainfo

ஒலிம்பிக்கில் உசேனுக்கு 9 பதக்கங்கள் -(வீடியோ)

ஒலிம்பிக்கில்  உசேனுக்கு 9 பதக்கங்கள் -(வீடியோ)
August 20
06:16 2016

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 4*100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 9 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.

article-3749977-376AFC7100000578-597_636x382  ஒலிம்பிக்கில்  உசேனுக்கு 9 பதக்கங்கள் -(வீடியோ) article 3749977 376AFC7100000578 597
ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒரு  தங்கப் பதக்கத்தையும், அடுத்ததாக 200 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ள உசேன் போல்ட், இன்று நடைபெறும் 4*100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முன்னதாக, பீஜிங் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4ஓ100 மீட்டர் தொடர் ஓட்டம்), லண்டன் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4*100 மீட்டர் தொடர் ஓட்டம்) இவர் வென்றிருந்தார்.

அந்த சாதனையை தொடரும் வகையில் ரியோ ஒலிம்பிக்கிலும் 4*100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் இவர் வாகை சூடுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நின்றது.

376AED7400000578-3749977-image-a-150_1471662638353  ஒலிம்பிக்கில்  உசேனுக்கு 9 பதக்கங்கள் -(வீடியோ) 376AED7400000578 3749977 image a 150 1471662638353

மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடைபெற்ற 4*100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் 37.27 வினாடிகளில் வெற்றிக் கோட்டை கடந்து இந்த ஒலிம்பிக்கின் மூன்றாவது தங்கத்தை இவர் தட்டிச் சென்றார்.

இதே தூரத்தை 37.60 வினாடிகளில் கடந்த ஜப்பான் வீரர் வெள்ளிப் பதக்கத்தையும், 37.62 வினாடிகளில் கடந்த அமெரிக்க வீரர் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

376AA10600000578-3749977-image-a-59_1471657864140  ஒலிம்பிக்கில்  உசேனுக்கு 9 பதக்கங்கள் -(வீடியோ) 376AA10600000578 3749977 image a 59 1471657864140

இந்த வெற்றியுடன், தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் 9 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள உசேன் போல்ட், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த பின்லாந்து நாட்டின் ஓட்டப்பந்தய வீரர் பாவோ நுர்மி, அமெரிக்காவின் பிரபல ஓட்டப்பந்தய வீரரும், நீளம் தாண்டுதல் வீரருமான கார்ல் லிவீஸ் போன்ற பிரபல ஜாம்பவான்களின் தரவரிசையை மிக குறைந்த வயதிலும், குறுகிய காலகட்டத்திலும் எட்டிப்பிடித்து, அசுர சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

376AA1AA00000578-3749977-image-m-78_1471657981033  ஒலிம்பிக்கில்  உசேனுக்கு 9 பதக்கங்கள் -(வீடியோ) 376AA1AA00000578 3749977 image m 78 1471657981033

லிம்பிக் அரங்கில் 8வது தங்கம்! மின்னல் மனிதன் சாதனை!

bolt  ஒலிம்பிக்கில்  உசேனுக்கு 9 பதக்கங்கள் -(வீடியோ) boltஒலிம்பிக் அரங்கில் ஜமைக்கா நாட்டின் அடையாளமாக திகழும் மின்னல் மனிதன் உசைன் போல்ட், ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

இது ஒலிம்பிக் அரங்கில் அவர் வெல்லும் 8வது தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவருடைய முந்தைய சாதனையான 19.30 வினாடிகளின் சாதனையை இம்முறை முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

போல்ட்டோ பந்தய தூரத்தை 19.78 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

உசைன் போல்டுக்கு அடுத்தபடியாக வந்த கனடா வீரர் ஆண்டிரே டி கிராஸே 20.02 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும், 20.12 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தை பிடித்த பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோபே லெமைட்ரே வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கப் பதக்கத்தையும், அடுத்ததாக 200 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ள உசைன் போல்ட், இன்று நடைபெறும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம்வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பீஜிங் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்), லண்டன் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்) இவர் வென்றிருந்தார். அந்த சாதனையை தொடரும் வகையில் ரியோ ஒலிம்பிக்கிலும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் இவர் வாகை சூடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2017
M T W T F S S
« Feb    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

நாட்டில போர் நடந்துகொண்டிருந்து போது தமிழக சினிமாக்கார்களும், போலி தமிழக சில்லறை அரசியல்வாதிகளான நெடுமாறன், வைகோ, சீமான்: திருமாவளவன்,தியாகு.தாமரை, .... [...]

Onb

Masha allah arumauyana pathiladi...senkodi pontra moolai illathavarkal satru sinthika vendum [...]

யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை பதிப்புரிமை பெற்றது. அனுமதியின்றி பகிர்துவது,. நகலெடுப்பது இந்திய பதிப்புரிமை சட்டப்படி குற்றம். எனவே இந்த [...]

எனக்கு இந்த வேண்டும்பு, த்தகம் எங்கு கிடைக்கும். [...]

Sumathiran M.P is a traitor, he want only all tamils convert to Christian. that also [...]

இலங்கை பத்திரிகைகள்

English News