ilakkiyainfo

ilakkiyainfo

ஓட்காவை காலி செய்து ரூ.8 கோடி மதிப்புள்ள தங்க பாட்டிலை வீசிச் சென்ற திருடர்- (வீடியோ)

ஓட்காவை காலி செய்து ரூ.8 கோடி மதிப்புள்ள தங்க பாட்டிலை வீசிச் சென்ற திருடர்- (வீடியோ)
January 06
22:10 2018

தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்த மது பாட்டில். வைரம் பதித்த மூடி. இதன் மதிப்பு ரூ.8.23 கோடி (1.3 மில்லியன் டாலர்). ஆனால், டென்மார்க் நாட்டின் மதுவிடுதியில் இருந்து அதைத் திருடிச் சென்றவருக்கோ அதில் இருந்த ஓட்காவின் மீதுதான் போதை போலும்.

டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் உள்ள ‘கேஃப் 33′ மது விடுதியில் இருந்து அதைத் திருடிச் சென்ற நபர் நகரில் உள்ள கட்டுமானப் பகுதியில் விட்டுச் சென்றுள்ளார்.

பாட்டிலைக் கண்டெடுத்த போலீசார் பாட்டில் உடைக்கப்படவில்லை என்றும் ஆனால் அது காலியாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

பாட்டிலைக் கடனாகப் பெற்ற மதுவிடுதி அதில் ரஸ்ஸோ-பால்டிக் ஓட்காவை நிரப்பி காட்சிக்கு வைத்திருந்தது. அந்த விடுதிக்குள் நுழைந்த நபர் பாட்டிலை தூக்கிக்கொண்டு ஓடும் சிசிடிவி காட்சி புதன்கிழமையன்று வெளியிடப்பட்டது.

அதில் இருந்த ஓட்கா என்ன ஆனது என்று தெரியவில்லை என்று கோபன்ஹேகன் காவல்துறையின் செய்தி தொடர்பாளர் ரியட் தோபா ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

”கட்டுமானப் பகுதியில் வேலை செய்த ஒருவர் அந்த பாட்டிலை கண்டெடுத்துள்ளார்.

நான் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன்,” என்று கூறிய மதுவிடுதி உரிமையாளர் பிரையன் இங்க்பெர்க் “நல்ல காலம் ஓட்கா கடவுள் எங்களைக் காப்பாற்றிவிட்டார்” என்கிறார்.

_99487998_d4d58b67-670e-40f1-b319-a7a6d2014f2c  ஓட்காவை காலி செய்து ரூ.8 கோடி மதிப்புள்ள தங்க பாட்டிலை வீசிச் சென்ற திருடர்- (வீடியோ) 99487998 d4d58b67 670e 40f1 b319 a7a6d2014f2c

முன்பு இந்த பாட்டிலில் இருந்த ரஸ்ஸோ-பால்டிக் வகை ஓட்கா தன்னிடம் நிறைய இருப்பதாகவும், எனவே அதனை மீண்டும் நிரப்பி காட்சிக்கு வைத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

செவ்வாய்க்கிழமை அந்த பாட்டில் திருடு போனதும் டிவி2-க்கு வழங்கிய பேட்டியில் அந்த பாட்டிலை தாம் லாட்வியாவைச் சேர்ந்த ‘டார்ட்ஸ்’ மோட்டார் கம்பெனியிடம் இருந்து கடனாக வாங்கியதாக அவர் கூறியிருந்தார்.

அந்த கார் தொழிற்சாலையின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக அந்த ஓட்காவை தாங்கள் உருவாக்கியதாக ரஷ்ய கார் உற்பத்தி நிறுவனமான ரஸ்ஸோ-பால்டிக் தெரிவித்தது.

47B97ADF00000578-5232415-image-a-44_1514998862928  ஓட்காவை காலி செய்து ரூ.8 கோடி மதிப்புள்ள தங்க பாட்டிலை வீசிச் சென்ற திருடர்- (வீடியோ) 47B97ADF00000578 5232415 image a 44 1514998862928The bottle of Russo-Baltique – the only one in the world – was stolen from Cafe 33 bar in Copenhagen on Tuesday, and was recovered at a construction site empty of vodka

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News