ilakkiyainfo

ilakkiyainfo

கஞ்சா கடத்தியோரை அரசியல் அதிகாரம் கொண்டு காப்பாற்றுகின்றது கூட்டமைப்பு ; டக்ளஸ்

கஞ்சா கடத்தியோரை அரசியல் அதிகாரம் கொண்டு காப்பாற்றுகின்றது கூட்டமைப்பு ; டக்ளஸ்
January 08
14:30 2019

அரசியல்வாதிகள் பொலிஸாரின் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் அநாவசியமாக தலையீடு செய்து பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை குறிப்பாக, கஞ்சாக் கடத்தல் காரர்களை, விடுவித்தமை தொடர்பாக சபையின் அவதானத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்றையதினம் 1996 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

வடமராட்சி கிழக்கு மாமுனை கிராமத்தை சேர்ந்த கந்தசாமி கோகுலதீபன்; என்பவர் கேரளா கஞ்சா கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் என அப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இவர் உள்ளிட்ட ஐவர் கேரளக் கஞ்சாவினை பொதி செய்துகொண்டிருந்த வேளையில், கிளிநொச்சி பொலிஸார் கடந்த டிசம்பர் 3ஆம் திகதி அன்று இவர்களை கைது செய்ய முற்பட்ட வேளையில் அவர்கள் பொல்லுகளைக் கொண்டு பொலிஸாரை தாக்கியுள்ளனர் என்றும்,

ஆனால் பொலிஸாரின் துணிச்சலான செயற்பாட்டினால் அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர் என்றும்,

_104159749_douglasdevananda  கஞ்சா கடத்தியோரை அரசியல் அதிகாரம் கொண்டு காப்பாற்றுகின்றது கூட்டமைப்பு ; டக்ளஸ் 104159749 douglasdevananda e1546957782448அவர்களை விசாரணை செய்து அவர்களுக்குரிய குற்றப்பத்திர அறிக்கைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ஜனநாயகத்தை பாதுகாக்கவென உச்ச நீதிமன்றில் வாதாடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொலிஸ் உயரதிகாரியை தொடர்புகொண்டு அழுத்தம் கொடுத்ததன் விளைவாக கோகுலதீபன்; என்ற அந்நபர் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும்,

அவர் விடுவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஏனைய நால்வரும் கோகுலதீபனை விடுதலை செய்ய முடியுமாயின் ஏன் தங்களை விடுதலை செய்ய முடியாது? என நியாயம் கேட்டதன் அடிப்படையில் பொலிஸாரால் மறுநாள் அவர்களும் விடுவிக்கப்பட்டனர் என்றும் தெரிய வருகின்றது.

ஜனநாயகத்தை பாதுகாக்கவென கூக்குரலிட்டவர்கள் சட்டம் ஒழுங்கை எவ்வாறு பாதுக்கின்றார்கள்? என்பது தொடர்பில் இச்சபையில் உள்ளவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் அவ்வாறு அரசியல்வாதியின் அழுத்தத்திற்கு அடிபணிந்து வீரமுடன் செயற்பட்ட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட அந்நபர்கள் விடுவிக்கப்படுவதற்கு பொறுப்பாக இருந்த உயரதிகாரி மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர்  ஜனாதிபதியிடமும்; பொலிஸ்மா அதிபரிடமும் இத்தருணத்தில் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    மயானத்தில்  அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் :   தமது  பிள்ளைகளை ஒவ்வொரு  பெட்டியாக  ஓடியோடித் தேடி   அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

0 comment Read Full Article
    பத்மநாபாவைக்  கொன்ற  சிவராசா   “வரதராஜப் பெருமாளை”  கொலை செய்ய  மீண்டும்  இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

பத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

0 comment Read Full Article
    இந்திய சிறையிலிருந்து தப்பி  வந்தவரான  கிருபன்  என்பவரை  பயன்படுத்தி  தலைவரை  கொல்ல முயற்சித்த மாத்தையா!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

இந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

0 comment Read Full Article

Latest Comments

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

இலங்கை பத்திரிகைகள்

English News