ilakkiyainfo

ilakkiyainfo

கடந்த ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே- இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக

கடந்த ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே-  இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக
May 16
18:32 2019

 

கடந்த ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை.

ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக கூறினார்.

 

அமைச்சர் ரிஷாத் கோரிக்கையை முன்வைத்தார் அதனை அலுத்தமென கூற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலின் போது கைதுசெய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக்கோரி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்படுகின்றதே இது குறித்த உண்மை என்ன? என வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில்.

குறித்த அமைச்சர் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் இன்னாரின் உறவினர், இவர்கள் எல்லாம் அவருக்கு வேண்டப்பட்டவர்கள், ஆகவே அவரை விடதலை செய்ய முடியுமா என கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார்.

முதலில் எனக்கு கைதுசெய்யப்பட்ட நபர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. பின்னர் இரண்டாவது தடவையும் தொடர்புகொண்டு என்னுடன் இந்த விபரங்கள் குறித்து பேசினார்.

மூன்றாவது தடவையும் அமைச்சர் தொலைபேசியில் தொடர்புகொண்டு குறித்த நபரை விடுவிக்க கோரிக்கை விடுத்தார்.

எனினும் அப்போது அவர் குறிப்பிடும் நபர் குறித்து என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.

ஆகவே இன்னும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து எனக்கு மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள் அப்போது உங்களின் கோரிக்கையை நான் ஆராய்கின்றேன் என்று கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டேன்.

இதனை ஊடகங்கள் பிரசுரித்ததை நான் அவதானித்தேன். குறித்த அமைச்சர் எனக்கு அழுத்தம் கொடுத்தார் என அதில் கூறப்பட்டது.

ஆனால் அவர் அழுத்தம் கொடுக்கவில்லை. கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். அவ்வாறு கோரிக்கை முன்வைக்கும் உரிமை அவருக்கு உள்ளது.

இதனை ஊடகங்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றது என்ற எனக்கு தெரியவில்லை. கோரிக்கையாகவும் பார்க்கலாம், அல்லது அழுத்தமாகவும் பார்க்கலாம். ஆனால் நான் அவரது கோரிக்கைக்கு ஏற்ற பதிலை கூறிவிட்டேன் என்றார்.

கேள்வி:- யாரை விடுவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார் ?

பதில்:- ஹ்ம்ம், அவர் கூறிய பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை, அங்கு எல்லாம் முஹம்மட்களாக இருந்தனர். அவர்களின் உரிய பெயர் எனக்கு தெரியவில்லை. எனத் தெரிவித்தார்.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

0 comment Read Full Article
    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

0 comment Read Full Article

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News