ilakkiyainfo

ilakkiyainfo

கடலம்மன் ஆலயத்தின் உற்சவம் – ஓடையில் நீராடிய இளைஞர் பலி

கடலம்மன் ஆலயத்தின் உற்சவம் – ஓடையில் நீராடிய இளைஞர் பலி
May 20
12:30 2019

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் நேற்று (19) மாலை ஓடையில் நீராடிய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரியகல்லாறு கடலம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரியகல்லாறு கடலம்மன் ஆலயத்தின் உற்சவம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அங்கு இளைஞர்களுடன் சென்று பொழுதை கழித்துக் கொண்டு இளைஞர்களுடன் நீராடிக் கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார்.

இதன்போது மற்றைய நபர் குறித்த நண்பரை காப்பாற்ற சென்றபோது அவரும் மூழ்கியுள்ளார்.

இந்த நிலையில் அங்கு நின்றவர்களினால் காப்பாற்றச் சென்றவர் காப்பாற்றப்பட்ட நிலையில் மூழ்கியவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் சுமார் 45 நிமிடங்களுக்கு பின்னர் குறித்த நபர் மீட்கப்பட்டு இருவரும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மூழ்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் பெரியகல்லாறு கலைமகள் வீதியை சேர்ந்த 17 வயதான தே. தீமோதி ஆகாஸ் என்னும் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இளைஞனான பெரியகல்லாறு பங்களா வீதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் அக்சயன் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News