ilakkiyainfo

ilakkiyainfo

கடலுக்குச் சென்று காணாமற்போன காரைதீவு மீனவர் மரணம்

கடலுக்குச் சென்று காணாமற்போன காரைதீவு மீனவர் மரணம்
October 11
06:37 2019

 

காரைதீவிலிருந்து ஆழ்கடலுக்குச் சென்று காணாமல்போன சாய்ந்தமருது, காரைதீவைச் சேர்ந்த மூன்று மீனவர்களில், காரைதீவு மீனவர் மரணமடைந்துள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான சண்முகம் சிறிகிருஸ்ணன்(வயது 47) என்பவரே, ஆழ்கடலில் வைத்து மரணமானதாகக் கூறப்பட்டுள்ளது.

image_89723446c5 கடலுக்குச் சென்று காணாமற்போன காரைதீவு மீனவர் மரணம் கடலுக்குச் சென்று காணாமற்போன காரைதீவு மீனவர் மரணம் image 89723446c5 e1570775738701இவர், கடலுக்குச் சென்று 10ஆவது நாளில் அதாவது 28ஆம் திகதி மரணித்துள்ளாரெனவும் இரு நாள்களின் பின்னர் சடலத்தைக் கடலுக்குள் போட்டதாகவும், சக மீனவர்களான சாய்ந்தமருதைச் சேர்ந்த சீனி முகம்மது ஜூனைதீன் (வயது 36), இஸ்மாலெவ்வை ஹரீஸ்(வயது 37) ஆகியோர் கூறியுள்ளனர்.

அந்த இரு மீனவர்களும் சிகிச்சைக்காக, திருகோணமலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களை, சொந்த ஊரான சாய்ந்தமருதுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, இந்த இரு மீனவர்களது அலைபேசி உள்ளிட்ட பொருள்கள், விசாரணையின் பொருட்டு தம்வசம் வைத்திருப்பதாகக் கூறிய பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேற்படி மீனவர்கள் சென்ற இயந்திரப்படகு, சர்வதேசக் கடற்பரப்பில் 21 நாள்களின் பின்னர், நேற்று முன்தினம் (08) மாலை தென்பகுதி மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News