ilakkiyainfo

ilakkiyainfo

கதறக் கதற மணமகனை கட்டாயப்படுத்தி 17 வயது சிறுமியுடன் திருமணம்…வெளியாகியுள்ள வீடியோ காட்சிகள்!!

கதறக் கதற மணமகனை கட்டாயப்படுத்தி 17 வயது சிறுமியுடன் திருமணம்…வெளியாகியுள்ள வீடியோ காட்சிகள்!!
October 04
18:26 2018

தமிழ்நாட்டின் வேலூரில் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை கடத்தி வந்து மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

சதீஷ் (21) என்ற இளைஞர் வேறு ஜாதியை சேர்ந்த சுமதி என்ற 17 வயது மைனர் பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார்.

காதலிக்கும் பெண் குறைந்த சாதி என்பதை சுட்டிக்காட்டி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த சில வாரங்களாக சதீஷ் காதலியுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இதனால் விரக்தியடைந்த சுமதி சதீஷ் தன்னை ஏமாற்றியதாக பெற்றோரிடம் கூறி அழுத்துள்ளார்.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது வீட்டில் தூங்கி கொண்டு இருந்த சதீஷை, நண்பர் ஒருவர் ஏமாற்றி அருகில் இருந்த மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சுமதி மற்றும் அவரது குடும்பத்தினர் திரண்டிருப்பதை கண்டு சதீஷ் அதிர்ச்சி அடைந்தார்.

அங்கிருந்தவர்கள் சதீஷை சுற்றிவளைத்து பிடித்து கையில் மஞ்சள் தாலியை கொடுத்து சுமதி கழுத்தி கட்ட சொல்லி மிரட்டினர்.

ஆனால் இதற்கு சதீஷ் திட்டவட்டமாக மறுத்தநிலையில் அனைவரும் தொடர்ந்து மிரட்டியதால் வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாய் காதலி கழுத்தில் தாலி கட்டினார் சதீஷ்.

பின்னர் இருவரையும் பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச்சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்த சதீஷின் குடும்பத்தார், 17 வயது சிறுமிக்கு தங்களது மகனை கட்டாயமாக திருமணம் செய்து வைத்த அந்த சிறுமியின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சப் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் புகார் மனு அளித்துள்ளனர்

Related Articles

1 Comment

  1. bis
    bis October 05, 04:54

    திருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது.
    Legally not bound.

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News