ilakkiyainfo

ilakkiyainfo

கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
May 14
16:11 2019

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனக் கூறிய கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டுமென கூறியிருக்கும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பதவியைப் பறிக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கைவிடுத்துள்ளது. கமல்ஹாசனின் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து எனப் பேசியிருந்தார். இதற்கு பாரதிய ஜனதாக் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துவந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் இந்தப் பேச்சுக்காக அவரது நாக்கை அறுக்க வேண்டுமெனக் கூறினார்.

“கமல்ஹாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். அவருக்கு நாக்கில் சனி. தீவிரவாதத்திற்கு மதமெல்லாம் கிடையாது. இந்துதான் முதல் தீவிரவாதி என்று கூறி சிறுபான்மையினரின் ஓட்டை வாங்குவதற்காக நடிக்கும் கமல்ஹாசனின் நாக்கை ஒரு காலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள்.

ஏன்னா ரொம்ப பேசுகிறார். இவ்வளவு பேச்சு தேவையில்லை. ஏன் பேசுகிறார், யார் சொல்லிப் பேசுகிறார்? இந்துதான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்கிறார். இவருக்கு என்ன தெரியும்?” என்றெல்லாம் பேசிய ராஜேந்திர பாலாஜி, பிறகு கமல்ஹாசனை ஒருமையில் பேச ஆரம்பித்தார்.

_106951050_f2363be6-c864-4007-847f-eadd2d4cd1b6 கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 106951050 f2363be6 c864 4007 847f eadd2d4cd1b6

 ராஜேந்திர பாலாஜி (இடது) முதல்வர் எடப்பாடி பழனிசாமி

“65 வயசு வரைக்கும் உல்லாச முறையில வேசம் போட்டு, டான்ஸ் ஆடிக்கிட்டிருந்த, லைட் அடிச்சுக்கிட்டு பகல்ல வர்ற பயலுக்கு என்ன கூறு இருக்கும்..

அவன்லாம் கூறுகெட்ட பய. தேர்தல் கமிஷன் தலையிட்டு கமல்ஹாசன் கட்சியை முடக்க வேண்டும். கமல்ஹாசன் வன்முறையை விதைக்கிறான்” என்று குறிப்பிட்டார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்தப் பேச்சை மக்கள் நீதி மய்யம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் விடுத்திருக்கும் அறிக்கையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் பதவியேற்கும்போது ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை மீறும் வகையில் நடந்துகொண்டதற்காக அவர் பதவியைப் பறிக்க வேண்டுமென கோரியிருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் ராஜேந்திர பாலாஜியின் இந்தப் பேச்சைக் கண்டித்திருக்கிறார்.

“வட மாநிலங்களில் சங்க பரிவாரத்தினர் பேசும் பேச்சுகளின் தொடர்ச்சியாகவே ராஜேந்திர பாலாஜியின் பேச்சு இருக்கிறது. அவர் மீது வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்.

இப்படி வன்முறையைத் தூண்டுகிறவரை அமைச்சர் பதவியில் தொடரச் செய்வது நியாயம் அல்ல. எனவே அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரியிருக்கிறது.

இதற்கிடையில் இந்து அமைப்புகள் கமல்ஹாசன் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடும் என்று வந்த தகவல்களால், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News