ilakkiyainfo

ilakkiyainfo

கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பாலூற்றிய வைரமுத்து: உருவான புதிய சர்ச்சை

கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பாலூற்றிய வைரமுத்து: உருவான புதிய சர்ச்சை
August 09
23:37 2018

சென்னை: சென்னை மெரீனாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், கவிஞர் வைரமுத்து பாலூற்றி அஞ்சலி செலுத்திய சம்பவம் சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார்.

புதனன்று சென்னை ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவரது பூத உடலுக்கு பெருமளவில் திரண்டு வந்து   அஞ்சலி  செலுத்தினர்.

பின்னர் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதியின் உள்ளே நல்லடக்கம் செய்ப்பட்டது.

இந்நிலையில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், கவிஞர் வைரமுத்து பாலூற்றி அஞ்சலி செலுத்திய சம்பவம் சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது.

வியாழன் காலை கவிஞர் வைரமுத்து தனது மகன்கள் மதன் கார்க்கி மற்றும் கபிலனுடன் அண்ணா நினைவக வளாகத்திற்கு வருகை தந்தார்.அதனை வலம் வந்த அவர் பாட்டில் ஒன்றில் வைத்திருந்த பாலினை ஊற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை நினைத்து பார்க்கவே முடியவில்லை. ஒரு தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமையாக கருணாநிதி சமாதியில் பால் ஊற்றிச் செல்கிறேன். சூரியன் இல்லாமல் விடியல் வருமா என்பதை போல உள்ளது கருணாநிதியின் மறைவு.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆனால் வைரமுத்துவின் இந்த செய்கை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சமயச் சடங்குகளுக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவற்றை தனது இறுதி வரை கடைபிடித்தவர் கருணாநிதி.

அவரது நல்லடக்கத்தின் போது கூட எந்த விதமான சடங்குகளும் பின்பற்றப்படவில்லை. ஆனால் தற்பொழுது வைரமுத்து தனது செய்கையின் மூலமாக அதற்கு ஓர் களங்கத்தை உண்டாக்கி விட்டார்.

இவ்வாறு பல்வேறு விதமான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது பகிரப்பட்டு வருகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

பெரும் மதிப்புக்குரிய திரு. கோட்டாபய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]

போதை வஸ்துக்களின் கேந்திர மையமாக ஆசியாவில் இப்போது விளங்குவது யாழ்ப்பாணமும் இலங்கையும் ஆகும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News