ilakkiyainfo

ilakkiyainfo

கருணாஸ் கைது.. நள்ளிரவு முதல் நடந்தது என்ன?

கருணாஸ் கைது.. நள்ளிரவு முதல் நடந்தது என்ன?
September 23
06:14 2018

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே கருணாஸ் கைது விவகாரத்தில் நள்ளிரவு முதல் என்ன நடந்தது என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்.

‌நேற்று இரவு 10.30 மணிக்கு ரகசிய உத்தரவின்பேரில் வடபழனி காவல்நிலையத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். 11.55 மணிக்கு சட்டமன்ற கருணாஸ் கைது செய்யப்பட உள்ளதாக செய்திகள் பரவிய நிலையில்‌, 12.30 மணிக்கு சென்னை சாலிகிராமம் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள கருணாஸின் இல்லத்திற்கு அருகில் ஊடகவியலாளர்கள் குவிந்தனர்.

காலை 5.15 மணிக்கு சத்தியமூர்த்தி‌ சாலை காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சுமார் 5.20 மணிக்கு நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டியன் தலைம‌யிலான காவல்துறையினர் கருணாஸின் வீட்டிற்குள் நுழைந்தனர். சர்ச்சைக்குரிய விதமாக பேசிய விவகாரம் தொடர்பாக அவரை கைது செய்ய இருப்பதாக 5.30 மணிக்கு கருணாஸிடம் த‌கவல் தெரிவிக்கப்பட்டது.

சரியாக 6.27 மணிக்கு கைது செய்யப்பட்டு கீழே அழைத்துவரப்பட்‌ட அவர்‌‌, 6.32 மணிக்கு செய்தியாள‌ர்களைச் சந்தித்தார். அதன்பின் 6.45 மணிக்கு நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கருணாஸிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருணாஸ்-க்கு அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்-க்கு அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுளள்து.

கடந்த 16-ஆம் தேதி சென்னையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருணாஸ், காவல்துறையினரையும் முதலமைச்சரையும் விமர்சித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து கருணாஸை இன்று அதிகாலை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதற்காக நள்ளிரவு முதலே அவரது வீட்டு முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கருணாஸ் கைதை அறிந்து அவரது வீடு முன் குவிந்த ஆதரவாளர்கள் காவல்துறையினருக்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட கருணாஸை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்ற காவல்துறையினர் சுமார் 3 மணிநேரத்திற்கு மேல் விசாரித்தனர்.

இதையடுத்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கருணாஸ் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து கருணாஸை அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கருணாஸ் மீதான வழக்கில் கொலை முயற்சி பிரிவை ரத்து செய்தும் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News